தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏ ஆர் ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று ஜூன் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இந்த விழா தொடங்குவதற்கு முன் உதயநிதி ரெட் கார்பெட்டில் பேசும்போது..
“வரும் மூன்று ஆண்டுகளுக்கு நான் சினிமாவில் நடிக்க மாட்டேன்.
அதன் பிறகு சூழ்நிலையை பொறுத்து மக்கள் விரும்பினால் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பேன். அப்படி ஒருவேளை நடிக்க ஆரம்பித்தால் மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் நடிப்பேன்” என தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
I will act again if people want I will join him if I act says Udayanidhi