சூர்யா மூவி அப்டேட்ஸ்: பாலா படத்தில் மாற்றுத்திறனாளி… மீண்டும் ஜெய்பீம் இயக்குனருடன் கூட்டணி

சூர்யா மூவி அப்டேட்ஸ்: பாலா படத்தில் மாற்றுத்திறனாளி… மீண்டும் ஜெய்பீம் இயக்குனருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கிய நந்தா, பிதாமகன் படங்களில் நடித்த பிறகே சூர்யாவுக்குள் இருக்கும் நடிப்புத் திறமை திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் தெரிந்தது.

அதன்பின்னர் பாலாவுக்காக அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் சூர்யா.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாலா இயக்கும் தனது 41 வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

‘சூர்யா 41’ சூட்டிங் நிறுத்தம்?; இயக்குனர் பாலாவுடன் வாக்குவாதம்.: நடந்தது என்ன.?

இந்த படம் மீனவர் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகிறது என்பதை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

தற்போது இதில் மாற்றுத்திறனாளியாக சூர்யா நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அந்த படம் தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் மற்றொரு படத்தில் கமிட்டாகி உள்ளாராம் சூர்யா.

பாலா படத்திற்கு பிறகு ஜெய்பீம் பட இயக்குனர் டி.ஜே .ஞானவேல் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சூர்யா.

தேச ஒற்றுமையை சீர்குலைத்த ‘ஜெய்பீம்’.; சூர்யா-ஜோதிகா மீது வழக்கு பதிய கோர்ட் உத்தரவு

ஜெய்பீம் படம் சர்ச்சையானாலும் அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்பட்டது. எனவே சூர்யா- ஞானவேல் மீண்டும் இணைவதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும் என்பது உறுதி.

Suriya movie updates : Suriya again joins with Jai Bhim director

அருள்நிதி-அஜய் ஞானமுத்து இணையும் ‘டிமான்டி காலனி-2’ அப்டேட்

அருள்நிதி-அஜய் ஞானமுத்து இணையும் ‘டிமான்டி காலனி-2’ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அருள்நிதி & இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான “டிமான்டி காலனி” (மே 22, 2015) படத்தினை வழங்கினர்.

தற்போது படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″ படத்திற்கான அறிவிப்பு முதல் பாகம் வெளிவந்து 7வது ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ’கோப்ரா’ இயக்குனருடன் இணையும் ’சீயான்’ விக்ரம்

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்த படத்தினை இயக்குகிறார்.

நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார்.

தனித்துவமான திரைக்கதைகளைக் கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் தங்கள் திரைக்கதைகளை கூற ‘முதல் இலக்கு’ என்று அவரைப் பாராட்டுவதுடன், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பார்வையாளர் அருள்நிதியை ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றுகிறார்கள் என்பது, குறிப்பிடத்தக்கது.

டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களின் மூலம் இப்போது முதன்மையான திரைப்பட இயக்குனர்களின் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.

இப்போது இருவரும் ‘டிமான்டி காலனி 2’ மூலம் அந்த மாயாஜாலத்தை மீண்டும் உருவாக்க மீண்டும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சில நேரங்களில், திரைப்படத் துறையில் பெரும்பாலான இரண்டாம் பாகங்கள் இயக்குனர்-நடிகர் என இருவரின் முன்முயற்சியால் நிகழ்கின்றன.

இருப்பினும், டிமான்டி காலனி திரைப்படத்தில் வினோதமாக, முதல் பாகத்தில் அது உருவாக்கிய மாயாஜாலத்தின் தொடர்ச்சியை வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் மீண்டும் பார்க்க விரும்புகின்றனர்.

படம் வெளியாகி (#7yrsOfDemonteColony) ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அருள்நிதி-அஜய் ஞானமுத்து ஜோடி, படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்டே காலனி 2 ’யை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியதாவது…

“டிமான்டி காலனி திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று மற்றும் படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இதயத்திற்கு நெருக்கமானது. பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தின், கருத்து மற்றும் பதில் முற்றிலும் ஆச்சரியமாக இருந்தது. பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் ‘டிமான்டி காலனி 2’ பற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

இத்தகைய ஊக்கங்களும் நேர்மறையான வார்த்தைகளும் திரைக்கதையை வடிவமைக்க என்னைத் தூண்டின. அருள்நிதி சாரை அணுகியபோது, அவருக்கும் திரைக்கதை பிடித்திருந்தது, உடனே நாங்கள் இந்த படத்தை எடுக்க முடிவு செய்தோம். திதைத்துறையில் அவரது வளர்ச்சி இப்போது அதிகரித்திருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,

மேலும் இந்த படத்தில் அவர் இருப்பது ஒரு ரசிகர் கூட்டத்தை இழுக்கும் முக்கிய காரணியாக இருக்கும். என்னை நம்பி எனது இயக்குனர் பாதையை தொடங்கி வைத்த அருள்நிதி மீண்டும் என்னை நம்பி தயாரிப்பாளராக என்னை மாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தனிப்பட்ட முறையில், ‘The Friday The 13th’, ‘Halloween’ to the contemporary ‘The Conjuring Universe’ என்ற ஹாலிவுட் படங்களின் தொடர் வரிசை என்னை எப்பொழுதும் ஈர்க்கும் ஒன்றாக இருந்தது. தெளிவான உத்வேகத்துடன், டிமான்டி காலனியை ஒரு சமரசமற்ற ஹார்ட்-கோர் ஹாரர் தொடராக முன்னோக்கி எடுத்துச் செல்லவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம், இது இனி அடுத்தடுத்த பாகங்களைக் கொண்டிருக்கும். ஜூலை 2022 க்குள் டிமான்டி காலனி 2 இன் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்.

தற்போது, முன்னணி கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதன்படி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம்.” என்றார்.

Arulnithi and Ajay gnanamuthu joins for Demonte Colony part 2

ஆர்கே. சுரேஷ் தயாரித்து நடிக்கும் படத்தில் நாயகியாக ‘கயல்’ ஆனந்தி

ஆர்கே. சுரேஷ் தயாரித்து நடிக்கும் படத்தில் நாயகியாக ‘கயல்’ ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘ஒயிட் ரோஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

வித்தியாசமான படைப்பு ‘விசித்திரன்’..; ஆர்கே. சுரேஷை பாராட்டும் பிக்பாஸ் பிரபலங்கள்

இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

நடிகை ‘கயல்’ ஆனந்தி முக்கியமான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ். ஆர். ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி. என். கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சியை பிரபு அமைக்கிறார்.

சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். கே .சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

“ அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையாக ‘ஒயிட் ரோஸ்’ உருவாகியிருக்கிறது.” என்றார்.

‘விசித்திரன்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் ஆர். கே. சுரேஷ் நடிப்பில் தயாராகும் சைக்கோ திரில்லர் படம் என்பதால், ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

RK Suresh Kayal Anandhi joins for White Rose

வசந்தபாலன் & ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் ஹீரோவாகும் ‘கைதி’ பட வில்லன்

வசந்தபாலன் & ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் ஹீரோவாகும் ‘கைதி’ பட வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலனின் அடுத்த படைப்பான ‘அநீதி’-யின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

’கைதி’ ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.

’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மாவாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள வசந்தபாலனின் முதல் தயாரிப்பான ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இசை அசுரன்’ G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

G.V.பிரகாஷ்குமார் & வசந்தபாலன் கூட்டணியில் இந்தப் படத்திலும் மனதைத் தொடும் நான்கு இதமான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

‘வெயில்’ முதல் ‘ஜெயில்’ வரை..; ஜிவி. பிரகாஷுடன் பயணம் குறித்து வசந்தபாலன்..

பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர்.

வசந்தபாலனின் முந்தைய படங்களில் பாடல்கள் எழுதிய மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் நட்பின் நினைவாக நா.முத்துக்குமாரின் கவிதைகளிலிருந்து வரிகளைத் தொகுத்து ஒரு திரைப்பாடலுக்கு பயன்படுத்தியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் பாடிய அப்பாடல் இனிமையான காதல் பாடலாக வந்துள்ளது.

வனிதா விஜயகுமார்,’நாடோடிகள்’ பரணி,பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா,காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா,இயக்குநர் அருண் வைத்தியநாதன்,இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் படங்களை எழுதி இயக்கிய வசந்தபாலன் இப்படத்திலும் வித்தியாசமான கதையமைப்பை வடிவமைத்துள்ளார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான, வசந்தபாலனின் படைப்பான ‘அநீதி’, ஜீன் மாதம் வெளியாகவுள்ளது. ‘அநீதி’ வெளியீட்டிற்குப் பின் திறமையுள்ள புது இயக்குநர்களை அறிமுகப்படுத்தி படங்களை தயாரிக்கவுள்ளது அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைய சிவா – வசந்தபாலன் – சிங்காரவடிவேலன் – அம்ரீஷ் கூட்டணி

அநீதி – குழுவினர்

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார்,’நாடோடிகள்’ பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே. ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன், தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா

பட நிறுவனம்: அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்

எழுத்து & இயக்கம்: வசந்தபாலன்

ஒளிப்பதிவு: எட்வின் சகாய்

கலை இயக்கம்: சுரேஷ் கல்லேரி

படத்தொகுப்பு: M.ரவிக்குமார்

வசனம்: ’இயக்குநர்’ எஸ்.கே.ஜீவா

நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர்

சண்டை வடிவம்: ‘டான்’ அசோக்-’பீனிக்ஸ்’ பிரபு

ஒலிக்கலவை: M.R.ராஜாகிருஷ்ணன்

ஸ்டில்ஸ்: R.S.ராஜா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

Arjun Das becomes hero in Vasantha Balan’s next film

சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த நாயகன் வருகிறார்

சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து அடுத்த நாயகன் வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் குடும்பம் ஒரு நட்சத்திர குடும்பம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

சிவாஜியின் மகன் பிரபு ஏற்கெனவே பிரபலமான நடிகர். பிரபுவின் மகன் விக்ரம் தற்போது இளைய நடிகர்களில் ஒருவர்.

பாஜக-வில் இணையும் சிவாஜி கணேசன் மகன்.; சகோதரர் வாழ்த்து.!

சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். இவரும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதுபோல ராம்குமாரின் மூத்த மகன் துஷ்யந்த் ஏற்கெனவே ஓரிரு படங்களில் நடித்துள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும் உள்ளார்.

தற்போது ராம்குமார் கணேசனின், இன்னொரு மகன் தர்ஷன் என்பவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

மக்கள் கூடும் இடத்தில் சிவாஜிக்கு சிலை வேண்டும்… – நடிகர் சங்கம்

சினிமாவில் நடிப்பதற்காக நிறைய பயற்சிகளை எடுத்துள்ளாராம் தர்ஷன்.

புனேயில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு, தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் தெருக் கூத்து நாடகங்கள் அரங்கேற்றி விட்டு தகுந்த பயிற்சியுடன் சினிமாவில் விரையில் நுழைய காத்திருக்கிறாராம்.

The next man comes from the Shivaji Ganesan family

இதெல்லாம் கமல் லிஸ்ட்ல இல்லையே.; லோகேஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்

இதெல்லாம் கமல் லிஸ்ட்ல இல்லையே.; லோகேஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் தீவிர ரசிகர் லோகேஷ் தற்போது கமல்ஹாசனையே இயக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

கமல் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தை எடுத்து முடித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் 36 வருட தவம்.; வரம் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

இதில் விஜய்சேதுபதி, பகத்பாசில், காளிதாஸ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் அடுத்த மாதம் ஜீன் 3ஆம் தேதி ரிலீசாகிறது.

இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் தொடரும் என கமல் தெரிவித்துள்ளார். எனவே ஓரிரு படங்களை முடித்துவிட்டு கமலை மீண்டும் இயக்குவார் லோகேஷ் என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் விக்ரம் பட புரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட லோகேஷ் படம் குறித்து பேசியுள்ளார்.

அதில்…

விக்ரம் பட சூட்டிங்கில் கமலுக்கு ஒரு மாதம் லோகேஷ் தான் மேக்-அப் போட்டாராம்.

OLD IS GOLD பழைய ‘விக்ரம்’ பட கமல்ஹாசனை மீண்டும் கொண்டு வரும் லோகேஷ்

கமல்ஹாசனுக்கு மேக்-அப் போட எப்போதும் ஒரு குழு உள்ளது. ஆனால் விக்ரம் படத்தில்தான் முதன்முறையாக இயக்குனரை மேக்-அப் போட அனுமதித்துள்ளாராம் கமல்ஹாசன்.

இப்போ சொல்லுங்க.. லோகேஷ் அதிர்ஷ்டக்கார டைரக்டர் தானே..

All this is not on Kamal’s list; Good luck scoring for Lokesh

More Articles
Follows