சத்யசிவா இயக்கத்தில் சசிகுமாருடன் இணைந்த சூர்யா பட நாயகி

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமாருடன் இணைந்த சூர்யா பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், M.சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகி வரும் புதிய திரில்லர் டிராமா திரைப்படம் “ஃபிரீடம் ஆகஸ்ட் 14”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கன்னட நடிகர் கிச்சா சுதீப், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் ஆகியோர் இணைந்து, சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டனர்.

மிக வித்தியாசமான களத்தில் நடைபெறும் ஒரு கதையின் பிரதிபலிப்பை, ரசிகனுக்கு தரும் வகையில், அசத்தலான முறையில் ஃபர்ஸ்ட் லுக் அமைந்துள்ளது. கடலுக்கு நடுவே படகில் மக்கள் நிற்க, வெடித்து சிதறும் நெருப்புக்கிடையில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் இருக்கும் சசிகுமாரின் லுக் படத்தின் மீதான ஆவலைத் தூண்டுகிறது.

இன்னொரு போஸ்டரில் உணர்வுகளை ஆழமாக பிரதீக்கும் சசிகுமார், லிஜோமோல் தோற்றமும், படத்தின் பெயரும், பெரும் சுவாரஸ்யத்தை தருவதாக உள்ளது. இந்த இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா, 90 களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு, பரபரப்பான திரைக்கதையுடன், அசத்தலான திரில்லர் டிரமாவாக இப்படத்தினை உருவாக்கி வருகிறார்.

90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தை திரையில் கச்சிதமாகக் கொண்டுவர, படக்குழு கடுமையாக உழைத்துள்ளது. 90 களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்து, படத்தின் காட்சிகளை படக்குழு படமாக்கியுள்ளது.

சென்னை மற்றும் கேரளாவில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் நடிகர் சசிகுமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ்கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராமன், முதல் முறையாக விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – விஜய கணபதி பிக்சர்ஸ்
தயாரிப்பாளர் – பாண்டியன் பரசுராமன்
இயக்கம் – சத்ய சிவா
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – NS உதயகுமார்
எடிட்டர் – ஶ்ரீகாந்த் NB
கலை இயக்கம் – C உதயகுமார்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

ஃபிரீடம் ஆகஸ்ட் 14

Sasikumar in Sathyasiva direction

விக்ரமுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா.; இயக்குனர் யார்..?

விக்ரமுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா.; இயக்குனர் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தனித்துவமான நட்சத்திர நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சீயான் 62’ எனும் படத்தின் நட்சத்திர பட்டியலில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்திருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் படம் தயாராகி வருகிறது-

இந்தப் படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஜீ. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹெச் ஆர் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் மகள் ரியா ஷிபு, பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் இன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் அண்மைக்காலமாக எந்த வேடம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அசத்தி, ‘நடிப்பு அரக்கன்’ எனும் நற்பெயரை சம்பாதித்திருக்கும் எஸ். ஜே. சூர்யா, இந்த படத்தின் நட்சத்திர பட்டியலில் இணைந்திருக்கிறார்.

அத்துடன் எஸ். ஜே. சூர்யா அவருடைய திரைப்பயணத்தில் இது வரை பார்த்திராத.. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதனை படக்குழு பெருமையுடன் தெரிவித்துள்ளது.

சீயான் விக்ரமும், எஸ் ஜே சூர்யாவும் முதன்முறையாகக் கூட்டணி அமைத்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இப்படத்தின் புதிய அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்திருங்கள்…

சீயான் 62

SJ Suryah joins with Vikram in Chiyaan 62

சந்தோஷ நாராயணன் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கினால் மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

சந்தோஷ நாராயணன் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கினால் மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசை கலைஞர் சந்தோஷ் நாராயணன். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் ரசிகர்களிடம் தனித்துவமான இசைகலைஞர் என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கும் சந்தோஷ் நாராயணன்.. முதன்முதலாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ எனும் பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

இது தொடர்பாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன் போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் துணை மேலாளர் விஜய்குமார், இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான ‘மேக்கிங் மொமெண்ட்ஸ்’ அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…

உலகளவில் இசைநிகழ்ச்சி என்றால் திறந்தவெளியில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்கு விருப்பமான இசையை ரசிக்கமுடியும். இசைகலைஞர்கள் இசைக்கும் இசையை நேரடியாக அனுபவிக்கமுடியும்.

இத்தகைய இசை நிகழ்ச்சி பொதுவாக கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் நடைபெறும். அதற்கு நன்றாக உட்கட்டமைப்புடன் கூடிய திறந்த வெளி அரங்கம் தேவை. அத்தகைய அரங்கமாக சென்னையில் அமையப் பெற்றிருப்பது தான் நேரு ஸ்டேடியம்.

இந்த ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள ஐ ஏ ஏஸ் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினோம். முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகைத் தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைசெய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்.

சென்னையில் நடைபெறும் இசைநிகழ்ச்சியின் நோக்கம் லாபம் மட்டுமல்ல. ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது ஒரு கிரீன் கான்செர்ட்.

‘நீயே ஒளி’என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது ஏன்? என்றால், ரசிகர்களை முன்னிலைப்படுத்துவதற்காகத்தான் வைத்திருக்கிறோம். மேலும் புத்தபெருமானின் வாசகத்தில் இந்த சொற்களும் உண்டு- அதனால் இதனை தேர்வு செய்திருக்கிறோம்.

இந்திய திரையுலக இசையமைப்பாளர்களின் இசை நிகழ்ச்சி என்றால்… வழக்கமானதொரு உள்ளடக்கம் இருக்கும். அது வெற்றிப்பெற்ற உத்தியும் கூட ஆனால் எங்களின் இசைக்குழு நடத்தும் ‘நீயே ஒளி’ எனும் இசைநிகழ்ச்சி இதிலிருந்து மாறுப்பட்டதாக இருக்கும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் நான் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு திறமையான இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞகள் என பலர் கலந்துகொள்கிறார்கள்.

இந்நிகழ்வில் என்னுடைய இசையில் உருவான பாடல்களுடன் இசைஞானி இளையராஜா, மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, ஏ. ஆர். ரஹ்மான், ஜீ வி பிரகாஷ் குமார், அனிரூத், யுவன் சங்கர் ராஜா ஆகியோர்களின் பாடல்களும் இடம்பெறும்.

கான்செர்ட்டின் கிராஃப் கூட எமோஷனலாக இருக்கும்.ஒரு திரைப்படம் போல் எங்கேயும் நிற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த கான்செர்ட் நடக்கும். இது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

நான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளிலும் வெவ்வேறு எதிர்பாராத அனுபவம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தினை முன்மாதிரியாக வைத்து தான் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ‘நீயே ஒளி’ என இசை நிகழ்ச்சிக்கு பெயரிட்டு, பிப்ரவரி 10 ஆம் தேதி மாலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்துகிறோம்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தை யாரும் தவறவிடவேண்டாம். ஏனெனில் அதில் இந்தியாவின் எதிர்கால சாதனையாளர்களான பதினைந்து இசை கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தவிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகவே ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைத் தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

கான்செர்ட் எனும் இந்த வடிவத்திலான பொழுதுபோக்கிற்கு மக்களின் ஆதரவு இருப்பதால் இதற்கு பெரும் சந்தை இருக்கிறது. அதற்கான தொடக்கமாக இதனை நாங்கள் கருதுகிறோம். இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு இசைத்துறையில் கற்பனையுடன் கூடிய ‘நீயே ஒளி’ போன்ற கான்செர்ட் பிரபலமாகும். அப்போது இதற்கு ஏராளமான விளம்பரதாரர்கள் கிடைக்கலாம். இதனால் இசை ரசிகர்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் குறைந்த கட்டணத்தில், இதை விட சிறப்பான இசை நிகழ்ச்சியை ரசிக்கலாம்.

சென்னையைப் பொருத்த வரை மக்கள் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டுபவர்கள் அதிகம். தற்போது ஒரு கோடி பேருக்கு மேல் சென்னையில் இருக்கிறார்கள்.

இதில் முப்பதாயிரம் பேர் வரை இது போன்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவைத் தெரிவிப்பதுடன் மகிழ்ச்சியுடன் ஓரிடத்தில் திரண்டு, இசையால் ஒன்றிணையவே விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இசையார்வம் கொண்ட புதிய தலைமுறை ரசிகர்களை ஒன்றிணைக்கும் புதிய பொழுதுபோக்கு தளமாகவும் இந்நிகழ்ச்சி அமையும் என நம்புகிறேன்.

இந்நிகழ்ச்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் டிக்கெட் வாங்குபவர்கள்.. மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம். இந்த டிக்கெட்டை காண்பித்தால் அதிலுள்ள க்யூ ஆர் கோடு மூலம் ரசிகர்கள் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் இந்நிகழ்ச்சியின் ஏற்பட்டாளர்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த சலுகையை ஊக்கப்படுத்தும் வகையில் நான் உள்ளிட்ட இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இசைகலைஞர்கள் சென்னையிலுள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயிலில் பயணித்து, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வருகைத்தந்து, அங்கிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தரவிருக்கிறோம். அதேபோல் இந்நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மெட்ரோ ரயிலில் பயணித்து வீடு திரும்ப போகிறேன். அந்நாளில் மெட்ரோ ரயில் இரவு பன்னிரண்டு மணி வரை இயங்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையில் முழுக்க வெளிப்படையான அணுகுமுறையைத் தான் பின்பற்றவிருக்கிறோம். அதனால் அனைத்த தரப்பு ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரசிகர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரை நட்சத்திரங்கள், திரைப்பட இயக்குநர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திரைத்துறையினருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். அவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன். ” என்றார்.

சந்தோஷ நாராயணன்

Santhosh Narayanan speaks about Neeyae Oli Concert

நாம் தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம்..; ‘மிஸ்டர். ஜூ கீப்பர்’ இசை விழாவில் சூரி பேச்சு

நாம் தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம்..; ‘மிஸ்டர். ஜூ கீப்பர்’ இசை விழாவில் சூரி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ் இயக்கத்தில், ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ மிஸ்டர். ஜூ கீப்பர்’. ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்னையில் புதன்கிழமை (பிப்ரவரி 7) இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

நடிகர் சூரி பேசியதாவது…

இந்தப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றி. முழுக்க காட்டுக்குள் படம் எடுத்துள்ளார்கள். காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். மூன்று வருடம் காட்டுக்குள் நானும் படத்தில் நடித்திருக்கிறேன். புலி ஊருக்குள் வந்துவிட்டது என்கிறார்கள் ஆனால் நாம் தான் காட்டை ஆக்கிரமித்துள்ளோம். நாம் தான் அதனுடைய இடத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் நல்ல கருத்துடன் இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். வாழ்த்துகள். தம்பி புகழ் இன்னும் பல உச்சங்கள் செல்வான், அவனுக்கு வாழ்த்துகள். யுவன் இருக்கிறார் என்றார்கள் அவர் இருந்தாலே வெற்றி தான். என் ‘கருடன்’ படத்திற்கும் இசையமைக்கிறார். எப்போதும் திரையுலகில் அவர் ராஜ்ஜியம் தான். அவருக்கு என் நன்றி. புகழிடம் நிறையத் திறமை இருக்கிறது. எல்லோர் வீட்டிலும் அவன் பெயர் நுழைந்துள்ளது. அவனிடம் நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. அவன் ஜெயிக்க வேண்டும் அதை விட அவன் நிலைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இயக்குநர் சுரேஷ் மிகத் திறமையானவர் அவருக்கு வாழ்த்துகள். படம் பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள் நன்றி.

மிஸ்டர். ஜூ கீப்பர்

We occupied forest says Soori at Mr Zoo Keeper audio launch

இதே இடத்தருகே ஹோட்டல் வேலை செய்தேன்.. இன்று மேடையில் நிற்கிறேன்.. – புகழ்

இதே இடத்தருகே ஹோட்டல் வேலை செய்தேன்.. இன்று மேடையில் நிற்கிறேன்.. – புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெ4 ஸ்டூடியோஸ் சார்பில் எஸ். ராஜரத்தினம் மற்றும் டி. ஜெபா ஜோன்ஸ் தயாரிப்பில், ஜெ. சுரேஷ் இயக்கத்தில், ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான நடிகர் புகழ் முதல் முறையாக நாயகனாக நடிக்க, கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ மிஸ்டர். ஜூ கீப்பர்’. ஒரு புலியைக் காப்பாற்றப் போராடும் ஒரு எளியவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து, ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சென்னையில் புதன்கிழமை (பிப்ரவரி 7) இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் டி. ஜெபா ஜோன்ஸ் பேசியதாவது…

என்னுடைய தயாரிப்பில் இது ஏழாவது திரைப்படம். சின்ன பட்ஜெட்டாக ஆரம்பித்த படம், இப்போது பெரிய படமாக வந்துள்ளது. இதுவரை திரையுலகில் இல்லாத வகையில் நிஜமான புலியை வைத்துப் படத்தை எடுத்துள்ளோம். இந்த மாதம் படம் திரைக்கு வரவுள்ளது. என் தோழர் ராஜரத்தினம் அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி.

தயாரிப்பாளர் எஸ். ராஜரத்தினம் பேசியதாவது…

ஜோன்ஸ் கதை சொன்ன போதே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நிஜப் புலியை வைத்து எடுக்கிறோமே என்ற பயம் இருந்தது. புலியை வைத்துப் படமெடுக்கும் போது பல பிரச்சனைகள் வருமே எனத் தயக்கம் இருந்தது. நாங்கள் நினைத்ததை விட இரு மடங்கு பட்ஜெட் ஆகிவிட்டது. ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார் இயக்குநர் சுரேஷ். உண்மையில் அவர் தான் புரடியூசர் போல் படத்தைப் பார்த்துக்கொண்டார். புகழ் இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். படம் நன்றாக வந்துள்ளது. நாயகி ஷ்ரீன், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்தும் நடிகர் சூரி அவர்களுக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.

நடிகர் முத்துக்காளை பேசியதாவது…

படத்தில் டிரெய்லரில் என்னைக் காட்டியதற்குத் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் என் நன்றிகள். இந்தப்படத்தில் பூனையுடன் தான் எனக்குப் பந்தம், புலி கூட இல்லை, அதுவே சந்தோஷம். இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி. இப்படம் வெற்றியடைய என் வாழ்த்துகள், நன்றி.

நடிகர் விஜய் சீயோன் பேசியதாவது…

இந்தப் படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி. ஆடிசனில் என்னைப்பார்த்த இயக்குநர் புலியுடன் சண்டை போடுவீங்களா என்றார். பயமாக இருந்தாலும் கண்டிப்பாகச் செய்கிறேன் சார் என்றேன். இந்தப்படத்தில் மெயின் வில்லன் என்று சொன்னபோது ஷாக்காக இருந்தது. அன்று எனக்குத் தூக்கம் வரவில்லை, அவ்வளவு சந்தோஷம். என் சினிமா கனவு நிறைவேறியுள்ளது. புகழ் மிக எளிமையாக என்னுடன் பழகி, படப்பிடிப்பில் எனக்கு ஆதரவாக இருந்தார். எல்லோருக்கும் என் நன்றிகள்.

நடன இயக்குநர் ராதிகா பேசியதாவது…

இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த கார்த்திக் சாருக்கு நன்றி. இயக்குநர் சுரேஷ் நிறையக் கஷ்டப்பட்டுள்ளார். புலியுடன் ஷூட்டிங் எடுத்தது வித்தியாசமான அனுபவம். படிப்படியாக வளர்ந்து நாயகனாக மாறியிருக்கும் புகழ் தம்பியின் வளர்ச்சியைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. புகழை வாழ்த்த வந்த நடிகர் சூரி அவர்களுக்கு நன்றி. நான் உங்களின் தீவிர ரசிகை. இப்படம் நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளர்கள் இருவருக்கும் என் நன்றிகள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தாம்சன் பேசியதாவது…

புகழுக்காக இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் புகழை அறிமுகப்படுத்தியுள்ளேன் அதனால் வந்தேன் ஆனால் சூரி சார் அன்பால் வந்துள்ளார் அவருக்கு நன்றிகள். புகழ் இதே பிரசாத் ஸ்டூடியோவில் நடிப்பிற்காகப் பல காலம் காத்திருந்துள்ளான். அதே ஸ்டூடியோவில் இன்று அவன் படம் இசை வெளியீடு என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த 5 வருடத்தில் அவன் நிறையப் போராடியிருக்கிறான். அவனிடம் நிறையப் பொறுமை இருந்தது, அது தான் அவன் வெற்றிக்குக் காரணம். படம் வெற்றியடைய வாழ்த்துகள்

நாயகி ஷிரின் காஞ்ச்வாலா பேசியதாவது…

இந்தப் படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னை நம்பி வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்கு என் நன்றிகள். புகழுக்கு வாழ்த்துகள். எனக்கு இந்தப்படத்தில் மிகவும் நல்ல கதாபாத்திரம், படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.

இயக்குநர் சுரேஷ் பேசியதாவது…

இப்படத்தைச் சிறப்பாகக் கொண்டுவரக் காரணமாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என் முதல் நன்றி. சூரி என் நண்பர், மிக மிக அடக்கமானவர், அவர் காட்டும் பணிவு வியக்க வைக்கும். இந்த பணிவு உங்களைப் பெரிய இடத்திற்கு அழைத்துச் செல்லும். இந்தப்படத்தின் மிகப்பெரிய தூண் யுவன். எனது 25 ஆண்டு கால நண்பர் அவர். சிறு வயது முதல் அவரைத் தெரியும். இந்தக் கதையை முதலில் சொன்னதே யுவனிடம் தான். பின்னர் தொலைக்காட்சியில் புகழின் ஒரு ஷோ பார்த்தேன். அவரை வரவைத்துக் கதை சொன்னேன், அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் படத்திற்குத் தயாரிப்பாளர் யாரும் சரியாகக் கிடைக்காமலிருந்தது. அப்போது தான் ஜோன்ஸ் அறிமுகமானார் அவரிடம் சொன்ன போது, உடனே ஆரம்பிக்கலாம் என்றார். படம் அப்படித்தான் உருவானது. புகழ் இப்படத்திற்காகத் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். கதை விவாதத்திற்கே எங்களுடன் வந்துவிடுவார். படம் முழுக்க புலியுடன் நடித்துள்ளார். புகழுக்கு இது நல்ல வாய்ப்பாக இருக்கும். படம் நன்றாக வந்துள்ளது. புலியை வைத்து ஷூட் செய்தது மிகப்பெரிய பாடமாக அமைந்தது. கதாநாயகியாக நடித்துப் ஏற்கனவே பிரபலமான ஷிரினுக்கு நன்றிகள். தன்வீர் மிக அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படம் எந்த ஆபாசமும் இல்லாத ஒரு ஃபீல் குட் மூவி. உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.

நடிகர் புகழ் பேசியதாவது…

தம்பிக்காக வருவேன் என வந்த சூரி அண்ணாவிற்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய தாம்சன் சாருக்கு நன்றி. இதே பிரசாத் லேபுக்கு வெளியே கார் வாஷ் கடையில் வேலை செய்துள்ளேன், சாப்பிட எச்சி இலை எடுத்திருக்கிறேன், இன்று இங்கு என் படம் இசை விழா நடப்பது மகிழ்ச்சி. இயக்குநர் என்னை அழைத்து நீ ஹீரோ, புலியுடன் நடிக்க வேண்டும் என்றார். ஓகே சார் பண்ணிடலாம் என்றேன். யுவன் சார் மியூசிக் என்றார் ஆனால் ஷூட் ஒரு வருடம் ஆகும் என்றார். அப்புறம் ஒரு வருடம் கழித்து நிஜத்திலேயே புலியைக் கூட்டி வந்து, ஆம்புலன்ஸ் வைத்து நடிக்க வைத்தார்கள். ஒரிஜினல் புலியுடன் நடித்திருக்கிறேன். இப்படத்தை நம்பி முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பல ஹீரோயின்கள் தயங்கிய போதும் கதையை நம்பி, என்னுடன் நடித்த ஷிரின் அவர்களுக்கு நன்றி. படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்துள்ளனர். ராதிகா மாஸ்டர், ஃபைட் மாஸ்டர் எல்லோருக்கும் என் நன்றிகள். பெரிய பெரிய ஹீரோ படங்களுக்கு மியூசிக் போடும் யுவன் சார் எனக்காக இசை அமைத்ததற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி. படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள்.

மிஸ்டர். ஜூ கீப்பர்

Actor Pugazh emotional speech at Mr Zoo Keeper audio launch

இயக்குநரின் உழைப்பே வெற்றிக்கு காரணம்.; யோகிபாபும் நானும் டிவின்ஸ் மாதிரி.. – ஜெயம் ரவி

இயக்குநரின் உழைப்பே வெற்றிக்கு காரணம்.; யோகிபாபும் நானும் டிவின்ஸ் மாதிரி.. – ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, அனுபமா உள்ளிட்டோர் நடித்த படம் ‘சைரன்’.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் பிப்ரவரி 16ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…

மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீஸுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி.

இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றியடையும். எப்போதும் எனக்கு அவர் ஃபேமிலி மாதிரி தான். இந்தப்படம் வேறு புரடியூசர் போகலாம் என்ற போது, சுஜாதா அம்மா விடவே இல்லை. கண்டிப்பாக நம்ம தான் பண்ணனும் என்று பிடிவாதமாக இருந்தார். ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும் , அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது

எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டு வருவது முக்கியம். ஜீவி தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக் கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த மியூசிக் டைரக்டர்களில் ஒருத்தர் ஜீவி.

இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம்.

நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்கள் சொல்பவர், அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம். என்னப்போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே என்பார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார் அருமையாகச் செய்துள்ளார் நன்றி.

அழகம் பெருமாள் சார் அடங்கமறு படத்தில் அவருடன் நடிக்க ஆரம்பித்தேன். அவருடனான ஜர்னி இன்னும் தொடர வேண்டும். இயக்குநரும் செல்வாவும் டிவின்ஸ் மாதிரி அத்தனை ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்கள் உழைப்பை மக்கள் பாராட்டுவார்கள்.

இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இன்னும் நிறைய மேடைகளில், வெற்றி மேடைகளில் அவரை நீங்கள் பார்ப்பீர்கள். நான் புது இயக்குநர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவு தான். இயக்குநரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம், இந்தப்படம் ரெண்டு ரோல் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். யோகிபாபு நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்னாவே இருந்தோம். கோமாளி படம் மாதிரி இந்தப்படத்திலும் அழகான டிராவல். மக்கள் ரசிப்பார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரசியுங்கள்.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார்.

காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் உலகமெங்கும் பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொழில் நுட்ப கலைஞர்கள்

எழுத்து இயக்கம் – அந்தோணி பாக்யராஜ்
தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
இணை தயாரிப்பாளர்: அனுஷா விஜய்குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
பிண்ணனி இசை – சாம் CS
ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K
எடிட்டர்: ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கே.கதிர்
கலை இயக்குனர்: சக்தி வெங்கட்ராஜ்

Me and Yogibabu like twins says Jayamravi

More Articles
Follows