மீண்டும் ’கோப்ரா’ இயக்குனருடன் இணையும் ’சீயான்’ விக்ரம்

மீண்டும் ’கோப்ரா’ இயக்குனருடன் இணையும் ’சீயான்’ விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் விக்ரம்.

செப்டம்பர் 30ல் இந்த படம் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதனையடுத்து விக்ரம் நடிப்பில் ’துருவ நட்சத்திரம்’ படமும் உருவாகி வருகிறது. இதனை கௌதம் மேனன் இயக்கி வருகிறார். ஆனால் சில காரணங்களால் இதன் சூட்டிங் முடிவடையாமல் உள்ளது.

இதனையடுத்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ’கோப்ரா’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம்.

இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே .எஸ். ரவிக்குமார், இர்பான் பதான் உள்ளிட்டோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக பா. ரஞ்சித் இயக்கவுள்ள ’மைதானம்’ என்ற படத்தில் நடிக்கிறார் விக்ரம். இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்

இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் ‘கோப்ரா’ பட இயக்குனருடன் இணைகிறாராம் விக்ரம்.

அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள ஒரு படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறாராம்.

இதையும் பாருங்க |சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விக்ரம்.; நாயகியாக ‘பீஸ்ட்’ பட நாயகி

Chiyaan Vikram to reunite with ‘Cobra’ director

கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் விஜய்…; இயக்குநர் இவரா.?

கமல்ஹாசனுடன் இணையும் நடிகர் விஜய்…; இயக்குநர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் விக்ரம்.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத்பாசில், காளிதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் ஜூன் 3ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகவுள்ளது.

இதனையடுத்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தற்போது சிவகார்த்திகேயன் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை கமல் தன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh

இதையும் பாருங்க | விஜய்-அஜித்தை இணைத்து ஒரு படம்.. நாகசைதன்யாவுடன் ஒரு படம்.; வெங்கட்பிரபுவின் சூப்பர் ப்ளான்..

Actor Vijay to team up with Kamal Haasan; Who is the director?

EXCLUSIVE பத்தல பாட்டு வைத்த வேட்டு..; ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல.; கமலை எச்சரிக்கும் RTI ஆர்வலர்

EXCLUSIVE பத்தல பாட்டு வைத்த வேட்டு..; ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல.; கமலை எச்சரிக்கும் RTI ஆர்வலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

கமல்ஹாசனே இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ், ஷிவானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் கதையுடன் சிறை கைதிகளை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் நடக்கின்றன.

வருகிற மே 15ல் இசை மற்றும் டிரைலர் வெளியாக உள்ளது. ஜூன் 3ல் படம் தியேட்டர்களில் வர உள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி பெற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று மே 11 மாலை 7 மணிக்கு (சொன்ன நேரத்தில் ரிலீசாகல) ‘விக்ரம்’ படத்தில் கமல் பாடிய ‘பத்தல…. பத்தல… ‘ என்ற பாடலின் சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டனர்.

இந்த பாடல் வரிகள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கமலஹாசன் நடித்து விரைவில் வெளியாக உள்ள ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் வரும் “பத்தலே பத்தலே” என்ற பாடலில் மத்திய அரசை தி௫டன் என்று கூறும் வகையில் அமைந்துள்ள “கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே…
சாவி இப்ப திருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே”
மற்றும்
ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் அமைந்துள்ள
“குள்ள நரி மாமு, கெடுப்பதிவன் கேமு குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே” என்ற பாடல் வாிகளை நீக்க கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இணையதளம் மூலமாக புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 3ம் தேதி வெளிவரக்கூடிய விக்ரம் படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு படத்தை தடை செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கபட்டுள்ளது .

இதையும் பாருங்க | லோகேஷ் கனகராஜின் 36 வருட தவம்.; வரம் கொடுத்த உலகநாயகன் கமல்ஹாசன்

RTI activists warn Kamal Haasan for his Pathala Pathala song

பழி வாங்கும் அதிசய கார் உடன் இணையும் அமீர் – கோபிகா ஜோடி

பழி வாங்கும் அதிசய கார் உடன் இணையும் அமீர் – கோபிகா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’.

எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும் பிரகாஷ் வேலாயுதன் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்களான அமீர் சுஹீல், கோபிகா ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் வினித் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை இயக்குனர் ஜிஜேஷ் MV இயக்கி இருக்கிறார்.

கதாநாயகன் ஒரு ஆட்டோ டிரைவர். அவர் நேசிக்கும் பெண்ணை ஒரு பெரிய தாதா கும்பலை சேர்ந்த ஒருவன் சிதைத்து விட, எந்த வித வலிமையான பின்புலமும் இல்லாத கதாநாயகன் தன்னிடம் அரிதான சக்திகளுடன் வந்து சேரும் ஒரு காரை வைத்துக் கொண்டு அந்த பெரிய தாதா கும்பலை பழிவாங்க புறப்படுகிறான் என்பதே படத்தின் மூலக்கதை.

முற்றிலும் புதிய கோணத்தில் பழி வாங்கும் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஓட விட்டு சுடலாமா’ என்று கூறுகிறார் இயக்குனர் ஜிஜேஷ் MV

கம்பம், குமுளி மற்றும் கேரளா பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பிரகாஷ் வேலாயுதன், படத்தொகுப்பாளர் ரதீஷ் மோகன், இசை அஷ்வின் சிவதாஸ், ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள்.

நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் ‘ஓட விட்டு சுடலாமா’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாக இருக்கிறது.

Aamir and Gopika pair up for revenge drama

உலகெங்கும் ‘டான்’ படத்தை சரியான டைமிங்கில் டான்னு ரிலீஸ் செய்ய ஐபிக்ஸ் ப்ளான்

உலகெங்கும் ‘டான்’ படத்தை சரியான டைமிங்கில் டான்னு ரிலீஸ் செய்ய ஐபிக்ஸ் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்எல்சி யுஎஸ்ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெளியீட்டு உரிமையை இந்தியாவைத் தவிர உலகம் முழுவதற்கும் பெற்றுள்ளது.

அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், மே 13-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.

குறித்த நேரத்தில் திரைப்படம் உலகெங்கும் வெளியாவதை உறுதி செய்யும் நோக்கில், பல்வேறு நாடுகளில் உள்ள திரையரங்குகளுக்கு கேடிஎம் குறியீட்டை ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் ஏற்கனவே அனுப்பி விட்டது.

அங்கெல்லாம் படம் சென்சார் உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவு செய்து வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. மே 12 அன்று இரவு சில பகுதிகளில் சிறப்பு காட்சிகள் இருக்கும் என்றும் ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.

பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் டான் வெளியீட்டுக்காக ஐபிக்ஸ் இணைந்துள்ளது.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான டானின் சர்வதேச விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கியதற்காக லைகா புரொடக்ஷன்ஸின் சுபாஸ்கரன், ஜிகேஎம் தமிழ் குமரன் ஆகியோருக்கு ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நன்றி தெரிவித்துள்ளது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே எம் பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்.

Ipix Entertainment successfully issues KDM of Sivakarthikeyan-starrer Don all over the world film all set for release as planned

இதையும் பாருங்க | நீ படிச்ச காலேஜ்ல நான் பிரின்சிபால்.; சிவகார்த்திகேயன் Vs எஸ்.ஜே. சூர்யா

சிம்பு & கௌதம் இணையும் ’பத்து தல’ பட சூட்டிங் அப்டேட்

சிம்பு & கௌதம் இணையும் ’பத்து தல’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தை அடுத்து சிம்பு நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’.

இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு முன்பே சிம்பு ஒப்புக் கொண்ட படம் ‘பத்து தல’.

இது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

’பத்து தல’ படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதில் சிம்பு டான் கேரக்டரிலும், கௌதம் போலீஸ் கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

’சில்லுனு ஒரு காதல்’ பட இயக்குநர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் கலையரசன், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சிம்பு கௌதம் இணைந்து நடிக்கும் காட்சிகளை மே 27ஆம் தேதி முதல் படமாக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

இதனையடுத்து கிட்டத்தட்ட 3 வாரங்கள் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

STR’s Pathu Thala shooting update here

More Articles
Follows