வித்தியாசமான படைப்பு ‘விசித்திரன்’..; ஆர்கே. சுரேஷை பாராட்டும் பிக்பாஸ் பிரபலங்கள்

வித்தியாசமான படைப்பு ‘விசித்திரன்’..; ஆர்கே. சுரேஷை பாராட்டும் பிக்பாஸ் பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாலா தயாரிப்பில், ஆர் கே சுரேஷ், பூர்ணா, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, மதுஷாலினி மற்றும் பலரின் நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் எம். பத்மகுமார் இயக்கத்தில் உருவான படம் “விசித்திரன்”.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பிரபலங்களுக்கான சிறப்பு காட்சி நடைபெற்றது. அப்போது பிரபலங்கள் படம் பற்றிய கருத்துக்களை தெரிவித்தனர்.

பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பேசியபோது,

இப்படி பட்ட ஒரு கதையை நான் ஆர் கே சுரேஷ் அண்ணனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நானே திரைப்படத்திற்குள் பயணிப்பது போல் உணர்ந்தேன். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத விதத்தில் இருந்தது. ஆர் கே சுரேஷ் அண்ணன் நடிப்பை பற்றி சொல்லவே வேண்டியதில்லை பிரமாதமாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் சமூக பிரச்சனையை பற்றி பேசியுள்ளார்கள். தற்போதய கால கட்டத்திற்கு தேவையான ஒரு படமாக இதை பார்க்கிறேன். படக்குழுவினர் அனைவர்க்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் என்றார்.

பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் பேசியபோது,

நான் எந்த எதிர்பார்ப்புடனும் வரவில்லை. ஆனால் இப்போது நான் பல சுவாரஸ்யமான தருணங்களுடன் செல்கிறேன் ஆர் கே சுரேஷ் அண்ணன் மிக சிறப்பாக நடித்துள்ளார். செண்டிமெண்ட் காட்சிகளில் அவரின் கண் மட்டும் ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதை கண்டு வியப்படைந்தேன். அதே போல் நடிகை பூர்ணாவும் சிறப்பாகவே நடித்துள்ளார், என்றார்.

பிக் பாஸ் பிரபலம் தாமரை பேசியபோது,

மிகவும் மன வேதனையுடன் நான் இப்படத்தை பார்த்தேன். கிளைமாக்ஸ் காட்சிகள் கண்கலங்க செய்தது. மக்கள் அனைவரும் இப்படத்தை திரையில் வந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். படத்தில் நடித்த அனைவரும் மிக சிறப்பாக நடித்துள்ளனர், என்றார்.

விஜய் டிவி பிரபலம் சரத் பேசியபோது,

எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஆர் கே சுரேஷ் அண்ணனின் நிறைய படங்கள் பார்த்துள்ளேன். இப்போது ஒரு படத்தில் அவருடன் இனைந்து நடித்திருக்கிறேன். அவர் இதுவரை நடித்த படங்களில் முரட்டு தனமாகவும், வில்லனாகவும் தான் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தில் சாந்தமாகவும், பொறுமையாகவும் நடித்திருப்பது வியப்பாக இருக்கிறது.

நடிப்பை கண்டபோது படத்தை நான் என்னையே மெய்மறந்தது பார்த்தேன். இச்சமயத்தில், இயக்குனர் பாலா அவர்களுக்கும் நன்றி. இப்படிப்பட்ட ஒரு படைப்பை தமிழ் சினிமாவிற்கு வழங்கியதாக. மேலும் இது போன்ற நல்ல படங்கள் தமிழ் சினிமாவில் வரவேண்டும் என நினைக்கிறன், என்றார்.

விஜய் டிவி பிரபலம் பாலா பேசியபோது,

அண்ணன் ஆர் கே சுரேஷ் என்னுடன் நடித்ததை விட என்னை அடித்ததே அதிகம். இப்படத்தின் கிளைமாக்ஸ்காக ஐமேக்ஸில் 5 முறை இந்த படத்தை பார்க்கலாம். “ஸ்க்ரீன் பிலே பேஸ்ட்டு படம் முழுக்க ட்விஸ்ட்டு” அனைவரும் விசித்திரன் திரைப்படத்தை கண்டு மகிழுங்கள் என்றார்.

பிக் பாஸ் பிரபலம் ஜூலி பேசியபோது,

இந்த படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், ஆர் கே சுரேஷ் மற்றும் பூர்ணா இருவரையும் வித்யாசமான பரிமாணத்தில், எதார்த்த கதையுடன் திரையில் பார்க்கலாம். சில படங்கள் தான் நம் மனதில் நிற்கும் அப்படியான படம் தான் “விசித்திரன்”. ஆர் கே சுரேஷுக்குள் இப்படி பட்ட நடிகன் இருப்பார் என்று எனக்கு தெரியாது. அவர் அட்டகாசமாக நடித்துள்ளார். பூர்ணா மிகவும் அழகாக இருக்கிறார், என்றார்.

நடிகர் ஷா ரா பேசியபோது,

மலையாளத்தில் வெளியான “ஜோசப்” படத்தை நான் 4 முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படம் அது. அதே போல் நடிகர் ஜோஜு ஜார்ஜ் அவர்களையும் எனக்கு பிடிக்கும். அந்த படத்தின் ரீமேக் என்பதாலே நான் இப்படத்தை பார்க்க வந்தேன். அந்த படத்தின் அழகை அப்படியே படமாகியுள்ளார்கள்.

ஆர் கே சுரேஷ் அவர்களை இது வரை முரட்டு தனமான வில்லனாகவே பார்த்து பழகிவிட்டோம். ஆனால், இப்படத்தில் அவர் அழகா நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவரின் கண்களை நடிக்க வைத்திருக்கிறார். என்றார்.

நடிகை இந்திரஜா ரோபோ ஷங்கர் பேசுயபோது,

முன்பெல்லாம், ஆர் கே சுரேஷ் அண்ணனை பார்க்கும் போது பயமாக இருக்கும். வில்லனாகவே பார்த்து பழகிப்போன ஒருவர். அவர் இப்படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வயதான கதாபாத்திரத்தில் கூட பூர்ணா அவர்கள் இவ்வளவு அழகாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குனர் பாலா அவர்களுக்கு இப்படத்தை தயாரித்ததற்கு நன்றி.

இப்படி பட்ட ஒரு படைப்பை எடுத்ததற்கு இயக்குனர் எம். பத்மகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . காவல் துறையில் இருக்கும் ஒரு காவலாளியின் கதை இது. காவலர் அனைவர்க்கும் இப்படம் சமர்ப்பணமாகும். என்றார்.

நடிகை ஆர்த்தி கணேஷ் அவர்கள் பேசியபோது,

மிக சிறந்த படம் இது, ஆர் கே சுரேஷ் தனித்துவமான ஒரு நடிப்பை நடித்திருக்கிறார். பூர்ணா அவர்கள் அழகாக இருக்கிறார். இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மலையாளத்தில் இருந்த ஒரு படத்தை தமிழுக்கு ஏற்ற வாறு ரீமேக் செய்துள்ளார். இது படம் அல்ல பாடம் என்றே சொல்லாம். அனைவரும் “விசித்திரன்” படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நடிகர் கணேஷ் பேசியபோது,

இப்படி பட்ட ஒரு உன்னதமான படைப்பில் நான் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.ஆர் கே சுரேஷ், பூர்ணா என அனைவரும் நடிக்கவில்லை, கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். கண்டிப்பாக அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளுக்கு சென்று பாருங்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்கலங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவரின் கண்களையும் கலங்கச் செய்யும் வெற்றி படம் இது என்றார்.

நடிகர் ஆர் கே சுரேஷ் பேசியபோது,

தயவு செய்து மலையாளம் மற்றும் தமிழ் படத்தை ஒப்பிட வேண்டாம். ஜோஜு ஜார்ஜ் தனது உட்சபட்ச நடிப்பை கொடுத்துள்ளார், நான் முயற்சி செய்திருக்குறேன். என் இயக்குனர் எம்.பத்மகுமாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மோகன்லால் சார் மற்றும் மம்முட்டி சார் ஆகியோரை இயக்கிய ஒரு சிறந்த இயக்குனர். அவர் என்னிடம் முகபாவனைகளைக் கொண்டு நடிக்கச் சொன்னார், கடவுளின் கிருபையால் அனைத்தும் நல்ல படியாக அமைந்துள்ளது. ஜி வி பிரகாஷ் இசையில் அவரின் முழு உழைப்பையும் போட்டிருக்கிறார். அடுத்ததாக எனது சக நடிகை பூர்ணாவுக்கு எனது வாழ்த்துகள்.

மேலும் அவர் தமிழில் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவள் நயன்தாராவைப் போல் பிறப்பின் மூலமே ஒரு கலைஞன் தான். மேலும், என் குருநாதர் பாலாவிற்கு பாலாவிற்கு என்னை வைத்து ஒரு படம் தயாரித்ததற்காக நன்றி தெரிவிக்க வேண்டும், என்றார்.

நடிகை பூர்ணா பேசியபோது,

ஒரு படத்தை மீண்டும் உருவாக்குவதற்கு இரட்டை பதற்றம் இருக்கும். ஆனால் அவர்கள் அதை ஒரு புத்திசாலித்தனமான வழியில் கையாண்டுள்ளனர். ஜோசப் ஒரு ஹீரோ படம், அதையே விசித்திரனிலும் உணர முடிந்தது. ஆர் கே சுரேஷ் அதிகபட்சமாக நடித்துள்ளார். பல காட்சிகளில் நான் இருந்ததால் அவருடைய நடிப்பையும் பார்த்திருக்கிறேன். சில சென்டிமென்ட் காட்சிகளில் நான் மிகவும் அழுதேன். அவரது நடிப்பு இந்த படத்திற்கு ஒரு பெரிய முதுகெலும்பாக இருந்தது.

இயக்குனர் எம். பத்மகுமார் படத்தை நேர்த்தியாக கையாண்டுள்ளார். அவரைத் தவிர வேறு எந்த இயக்குனரும் இந்தப் படத்தை சிறப்பாக இயக்க முடியாது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்ற எண்ணத்துடனே இதனை நாட்கள் காத்திருந்தோம்.

இந்த படம் ஓடிடி தலத்தில் செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை. எங்கள் காத்திருப்புக்கு பலன் கிடைத்தது போல் உள்ளது. அனைவரும் இந்த படத்தை பார்த்து உங்களின் கருத்துக்களை சொல்ல வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி என்றார்.

Bigg Boss celebrities appreciates RK Suresh and Visithiran movie

KGF படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..; அதிர்ச்சியில் திரையுலகம்

KGF படங்களில் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம்..; அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யாஷ் நடிப்பில் சமீபத்தில் ‘கே ஜி எஃப் 2‘ படம் வெளியானது.

இதில் நாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடிக்க இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்த படம் தான் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் சாதனையை படைத்து வருகிறது. இதுவரை ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் மோகன் ஜுனேஜா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கே ஜி எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்தவர்.

கேங்க கூட்டிட்டு வர்ரவன் கேங்ஸ்டர், ஒத்தைய வர்ரவன் மான்ஸ்டர் என்ற ஒத்த டயலாக் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இவர்.

இவர் கன்னட திரையுலகில் மிக பிரபலமான நடிகராம்.

பெரும்பாலும் இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

KGF 2 actor Mohan Juneja passes away

‘ரங்கா’ படத்தை ரிலீஸ் செய்பவரே ‘டான்’ தான்.; சிவகார்த்திகேயன் உடன் போட்டியா பதறிய சிபிராஜ்.?!

‘ரங்கா’ படத்தை ரிலீஸ் செய்பவரே ‘டான்’ தான்.; சிவகார்த்திகேயன் உடன் போட்டியா பதறிய சிபிராஜ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் என்பவர் இயக்க, சிபிராஜ், நிகிலா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரங்கா‘.

இந்தப் படம் தேன்நிலவுக்கு காஷ்மீர் சென்ற காதல் ஜோடி ஒரு பிரச்சினையில் சிக்கியதை சொல்லும் படமாக வளர்ந்துள்ளது.

ராம் ஜீவன் ராமன் இசையமைக்க விஜய் கே செல்லையா தயாரித்துள்ளார்

இந்த படம் வெளியீட்டிற்கு தயாராகி ஓரிரு ஆண்டுகள் ஆகிவிட்டது.

சில பிரச்னைகளால் படம் திரைக்கு வராமல் இருந்தது.

இந்த நிலையில் தற்போது ரங்கா படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள ‘டான்’ படமும் ரிலீசாகிறது.

எனவே டான் படத்துடன் போட்டியா? என தயாரிப்பாளரிடம் சிபி கேட்டுள்ளார்.

அதற்கு தயாரிப்பாளர் பதிலளிக்கும்போது நம்ம ரங்கா படத்தை ரிலீஸ் செய்பவரும் ஒரு டான் தான் என தெரிவித்துள்ளார்.

ரங்கா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்திவேல் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக சக்தி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை ரங்கா பட பிரஸ்மீட்டில் இன்று தெரிவித்தார் சிபிராஜ்.

சிபிராஜ் நடித்துள்ள மற்றொரு படமான ‘மாயோன்’ ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sibiraj to compete with Sivakarthikeyan?

ஆளுநர் குறித்து அமீர் அறிக்கை : மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அதிகாரத்திற்கு வருபவர்களால் ஆபத்து.!

ஆளுநர் குறித்து அமீர் அறிக்கை : மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அதிகாரத்திற்கு வருபவர்களால் ஆபத்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அமீர் அறிக்கை..

SOCIAL DEMOCRATIC PARTY OF INDIA (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) என்பது இன்றைக்கு தேசிய அளவில் இருக்கும் அமைப்புகளில் மிக முக்கியமானது மட்டுமல்ல, மிகக் கண்ணியமானதாகவும், ஒழுக்கமானதாகவும், படித்தவர்கள் மிக அதிகமானோர் பங்கேற்றிருக்கும் ஒரு முற்று முழுவான தொண்டு நிறுவனம்.
உலகமே கொரோனா நோயின் கொடிய அச்சுறுத்தலில் இருந்த போது, அன்றைய சூழலில் உயிரிழந்தவர்களின் உடலை யாருமே தொட முன்வராத சூழலில், பெற்ற தாயை, சொந்த தந்தையைக் கூட யாரும் தொடாத நிலையில் களத்தில் இறங்கி நின்று மிக மரியாதையாக அடக்கம் செய்ததில் இந்த அமைப்புக்கும் முக்கிய பங்கு உள்ளது.

இது மட்டுமல்லாது வெயிலாக இருக்கட்டும், மழையாக இருக்கட்டும்., வெள்ளக் காலங்கள் போன்ற பேரிடர் நெருக்கடிகளில் மக்கள் துயரங்களில் துவண்டு கிடந்த போதெல்லாம், ஒரு தோழனாக உடன் நின்று களப் பணியாற்றிய தூய தொண்டர்களை உள்ளடக்கிய பேரமைப்பே அது.

இன்றைக்கும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நின்று வலுவாகப் போராடக் கூடிய மிக முக்கியமான அமைப்பாக அது விளங்குகிறது.

அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், தமிழ்நாட்டில் பாசிசத்தையும், வெறுப்புணர்வையும், மத அரசியலை விதைக்கும் முகமாகவே ஆளுநர் ரவி அவர்கள், SDPI-யின் மீது பொய்யான தகவல்களை சொல்லியிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ.,வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை SDPI குறித்த ஒரு ஆடியோவை வெளியிட்டார்.

அந்த ஆடியோவிலும் ஆளுநர் ரவியின் கருத்தையே குறிப்பிட்டிருந்தார். அவர் ஏற்கனவே காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர்.

எனவே, எதைச் செய்தால் எது நடக்கும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும். அதனால் தான், திட்டமிட்டு தான் பேசிய ஆடியோவை அவரே ரகசியமாக கசியவிட்டார். அதன் மூலம் விஷ விதையை தமிழகத்தில் விதைத்திருந்தார்.
அதன் நீட்சியாகவே தமிழக ஆளுநர் இன்று SDPI அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரான அண்ணாமலையை விட ஒரு படி மேலே போய், அரசின் நிர்வாகத்தில் பங்கெடுத்துள்ள, ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் ஆளுநர் இப்படிச் செய்வதென்பது அப்பதவிக்கு அழகானது அல்ல.! அதற்கு ஆளுநர் பா.ஜ., தலைவராகவோ, அல்லது ஆர்.எஸ்.எஸ்., தலைவராகவோ இருந்து சொல்லியிருந்தால், நமக்கொன்றும் வியப்பு ஏற்பட்டிருக்காது.

ஏற்கனவே, எழுவர் விடுதலையாக இருக்கட்டும், நீட் விலக்கு மசோதாவாக இருக்கட்டும் இதற்கெல்லாம் ஒப்புதல் தராமல் தமிழக அரசும், தமிழக மக்களும் வைத்த கோரிக்கைகளை கிடப்பில் போட்டு தன் கடமையைக் கூட செய்ய முன் வராத ஆளுநர், இப்போது தனக்குத் தொடர்பில்லாத விசயங்களில் தலையிட்டு தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்க நினைக்கிறார்.

உண்மையிலேயே SDPI அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்குமேயானால், உலகின் எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு கொண்டிருக்குமேயானால் அதற்கான ஆதாரத்தை வெளியிடலாம். அரசாங்கத்தை, அதிகாரத்தை கையில் வைத்திருப்போர் துணிந்து அதைப் பொது வெளியில் வெளியிடலாமே.!

அதை விடுத்து, எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மக்களிடையே குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் சொல் விளையாட்டு என்பது நல்லது அல்ல.! பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் செய்யக்கூடியதும் அல்ல.!

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அதிகாரத்திற்கு வருபவர்கள், மக்களுக்கு எதிராகவே செயல்படுவதென்பது வாடிக்கையாகி வருவது வேதனைக்குரியது.

எனவே, இது மாதிரியான வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ பேசுவதை கைவிட்டு, தமிழகத்தை அமைதிப் பூமியாக வாழவிடுங்கள்.! என்ற கோரிக்கையை அன்போடு முன் வைக்கிறேன்.
அன்புடன்,

அமீர்
சென்னை
07.05.2022

Aamir’s statement on governor: Danger by those who come to power without being elected by the people!

‘டான்’ விழா ஹைலைட்ஸ் : தமிழ் சினிமாவில் 2 டான்கள் – உதயநிதி..; இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோ சிவகார்த்திகேயன் – சமுத்திரக்கனி

‘டான்’ விழா ஹைலைட்ஸ் : தமிழ் சினிமாவில் 2 டான்கள் – உதயநிதி..; இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோ சிவகார்த்திகேயன் – சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும், திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும் SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு
விழா ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நேற்று இரவு நடைபெற்றது.

இவ்விழாவினில்…

தயாரிப்பாளர் மற்றும் நடிகர் உதயநிதி ஸ்டாலின், Red Giant Movies, பேசியதாவது….

“ஒட்டு மொத்த டான் படக்குழுவையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்.

தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டான்கள் உள்ளனர், ஒன்று சிவகார்த்திகேயன், மற்றொன்று அனிருத். அவர்கள் இருவரும் மிகப்பெரிய வெற்றிகளை குவிக்கின்றனர், மேலும் அவர்களது காம்பினேஷன் நிச்சயமாக வெற்றியை தரக்கூடியது.

ரீ-ரிக்கார்டிங் செய்யவதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் படத்தை பார்த்துவிட்டேன். டாக்டரை விட இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பலர் இந்த திரைப்படத்தை கல்லூரி பின்னணி கதை என்று கருதியிருக்கலாம்.

ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் ஆகியோருடன் ஒரு அழகான பள்ளி பகுதி இந்த படத்தில் உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கல்லூரிப் பகுதிகளில் சிறப்பான பணியைச் செய்துள்ளார், சமுத்திரக்கனி கடைசி 30 நிமிடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

LYCA PRODUCTIONS தொடர்ந்து நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நடன இயக்குனர் ஷோபி பேசியது…

சிபி ஆரம்பத்தில் பாடலைப் பற்றி என்னிடம் கூறியபோது, ஜலபுலஜங்கு பாடல் ஒரு பெரிய ஹிட் பாடலாக அமைய வேண்டும் என்று அவர் கூறினார். நான் சரி என்ற முடிவில் இருந்தேன், ஆனால் முதலில் பாடலைக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். அனிருத் ஒரு பிரமாதமான பாடலை அமைத்திருந்தார்.

பின்னர், அதனை சரியாக உருவாக்குவது எனது வேலையாக இருந்தது. பாடலின் படப்பிடிப்பு நேரம் வந்தபோது, சிவகார்த்திகேயன் உடல்நலக்குறைவில் இருந்தபோதிலும் பாடலில் நம்பமுடியாத முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்த பாடலை படமாக்கும்போது நிறைய சவால்கள் இருந்தன, இருந்தாலும் திரையரங்குகளில் பார்வையாளர்களால் கொண்டாடப்படும் ஒரு மகத்தான வேலையை சிவகார்த்திகேயன் செய்துள்ளார். பாடலை கண்டிப்பாக ரசிப்பீர்கள்

நடிகை மற்றும் பாடகி சிவாங்கி பேசியது…

இந்தப் படத்தில் நான் நடிக்க முதல் காரணமாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. நான் எப்போதும் சிபி சாரை பல கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறேன், ஆனால் அவர் என்னிடம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்தார். கலை சார் உடன் பணிபுரிந்தது அருமையான அனுபவமாக இருந்தது, படப்பிடிப்பு முழுவதும் அவர் மிகவும் கூலாக இருந்தார். எஸ்.ஜே.சூர்யா சார், இவ்வளவு பெரிய கலைஞன், அவர் இவ்வளவு பணிவான மனிதராக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் எனக்கு நிறைய கதைகளை கூறினார். சமுத்திரக்கனி சார் அவரது கேரக்டரை முழுமையாக உள்வாங்கி படப்பிடிப்பிற்கு வந்தார்.

எஸ்.கே.அண்ணா அவ்வளவு இனிமையான மனிதர். அவ்வளவு பெரிய நடிகரான போதிலும், அவர் இன்னும் பணிவாகவும், செட்டில் அனைவரையும் சமமாகவும் நடத்துகிறார். பிரியங்கா படபிடிப்பு தளத்தில் மிகவும் அழகாக இருந்தார், படப்பிடிப்பில் அவர் என்னிடம் நன்றாக பழகினார்.

நான் சில தவறுகளை செய்த போது, முழு தொழில்நுட்பக் குழுவும் எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தது. அனிருத் சார் இசையமைக்கும் இந்த படத்தில் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

நடிகர் பால சரவணன் பேசியது…

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபி சக்கரவர்த்திக்கு நன்றி. நாங்கள் 4-5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பைலட் திரைப்படத்தில் ஒன்றாக வேலை செய்தோம்.

அப்போதிலிருந்து நாங்கள் நண்பர்களாய் இருந்து வருகிறோம். நான் அயலான் படத்தில் பணிபுரிந்தபோது, படத்தில் எனக்கு மிகக் குறைவான காட்சிகளே இருந்தன. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் அண்ணன் வேற ப்ராஜெக்ட் இருக்கு, அதில் என் ரோல் அதிகமா இருக்கும்னு சொன்னார்.

இந்தப் படத்தில் என்னையும் ஒரு அங்கமாக ஆக்கியதன் மூலம் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். படப்பிடிப்பு நேரத்தில் அவர் காட்டிய அன்பு விலைமதிப்பற்றது, இப்போதும் கூட அவர் காட்டும் அன்பு தனித்துவமானது.

நான் எஸ்.ஜே.சூர்யா சாரின் தீவிர ரசிகன். படப்பிடிப்பின் போது, செட்டில் அவரது நடிப்பைப் பார்த்து எங்களது வசனங்களை மறந்துவிடுவோம். சமுத்திரக்கனி சார் ஒரு சகோதரனைப் போன்றவர், தவறு செய்யும் போது உரிமை எடுத்து நம்மை கண்டிப்பார், நல்லது செய்தால் பாராட்டுவார்.

ஆரம்ப நாட்களில் பிரியங்கா சாதுவாக தெரிந்தார், ஆனால் பின்னர், அவரது நகைச்சுவையால் எங்களை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். டான் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அருமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

நடிகர் RJ விஜய் கூறியதாவது…

எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு நன்றி. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களுடன் இருக்கும் உணர்வை போன்ற அனுபவத்தை எங்களுக்கு வழங்கினார்.

இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிபி அண்ணனுக்கு நன்றி. டான் படத்தில் பணிபுரிவது இரண்டு வகுப்புகளில் கலந்துகொள்வதைப் போன்றது, ஒன்று பிராக்டிகல் மற்றொன்று தியரி. ஒன்று சிவா அண்ணா, சமுத்திரக்கனி சார், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பிற கலைஞர்களுடன் பணிபுரிந்தது. பின்னர் கேமரா ஆஃப் ஆனதும், அது ஒரு தியரி வகுப்பாக இருக்கும், ஏனெனில் அனைவரும் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர் நன்றி.

பிக்பாஸ் புகழ் ராஜு கூறியதாவது…

இந்த படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், ஆனால் SK Productions மற்றும் சிவகார்த்திகேயன் அண்ணன் இந்த விழாவிற்கு என்னை அழைத்து கவுரவித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்தின் முன்னணி நடிகர்களை நான் நீண்ட நாட்களுக்கு முன்பே பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை சமுத்திரக்கனி சாரை ஒரு விசேஷ நிகழ்ச்சியின் போது சந்தித்தேன், ஹீரோவாக வருவதற்கு என்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். சிவகார்த்திகேயன் ஒரு உண்மையான டான், அவர் தனக்கென ஒரு தனித்துவமான சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

பிரியங்கா ஒரே இரவில் திடிரென வந்து, மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கைப்பற்றிவிட்டார். எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் போது, நாங்கள் ஆச்சரியத்தில் உறைந்து போவோம். சிபி தனது கல்லூரி அனுபவத்தை வைத்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார். படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பிக்பாஸ் புகழ் நடிகர் ஷாரிக் கூறியதாவது…

இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று முதலில் நான் தான் சிபியிடம் கேட்டேன். உண்மையில், படத்தில் 2 நிமிடம் தான் நான் வருவேன், அடுத்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் கொடுப்பார் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் அண்ணா கலக்கப்போவது யாரு மூலம் தனது பயணத்தை தொடங்கிய காலத்திலிருந்தே அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

நிஜ வாழ்க்கையில் எனக்கு கிடைக்காத கல்லூரி வாழ்க்கையை, திரைப்படத்தில் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எஸ்.ஜே.சூர்யா சார் மற்றும் சமுத்திரக்கனி சாருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நடிகர் சமுத்திரகனி கூறியதாவது…

ஆரம்பத்தில், இந்த திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருக்க எனக்கு விருப்பம் இல்லை, ஏனெனில் இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்தது. கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய பல காட்சிகள் இருந்தன, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. சிபி ஸ்கிரிப்டை சொன்ன போது, அது என் வாழ்க்கையை மீட்டெடுத்தது போல் இருந்தது.

சிபி இப்படம் மூலம் பெரிய உயரத்தை எட்டப் போகிறார், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த திரைப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தப் படத்தின் மூலம் என் அப்பா எனக்குள் நுழைந்தது போல் இருந்தது. டான் ஒரு பிளாக்பஸ்டராக இருக்கும், மேலும் சிவகார்த்திகேயன் இந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத ஹீரோவாக இருப்பார். இப்படத்தில் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். அனிருத் நாடு முழுவதும் அறிந்த ஒரு சிறந்த இசையமைப்பாளராகிவிட்டார். பிரியங்கா பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போலவே இருக்கிறார், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சிவகார்த்திகேயன் இன்னும் உயரத்திற்கு செல்ல அனைத்து ரசிகர்களும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

SJ சூர்யா பேசியது…

இந்தக் கல்லூரியில் உள்ள மாணவர்கள் உடைய அனுபவங்கள் டான் படத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். இந்த கோடைகாலத்தில் பல படங்கள் வெளியாகி இருக்கலாம், ஆனால் டான் 100% ஒரு கோடை விருந்தாக இருக்கும்.

மெர்சல் படத்தின் இணை இயக்குநராக இருந்தபோதே சிபி சார், என் மீது மிகுந்த அக்கறையுடன் இருந்தார். அவர்தான் தமிழகத்தின் ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் கடின உழைப்பும், நல்ல குணமும் அவரை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நடிகை பிரியங்கா அருள் மோகன் கூறியதாவது…

இந்த படத்தில் பணிபுரிந்ததன் மூலம் எனக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அழகான நட்பு வட்டாரம் கிடைத்தது. என் கல்லூரி நாட்களை மீண்டும் ஒருமுறை பார்ப்பது போல் இருந்தது. இந்த படத்தில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்ததற்கு SK Productions மற்றும் Lyca Productions நிறுவனங்களுக்கு நன்றி. சமுத்திரக்கனி சார் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சாருடன் பணிபுரிந்தது, சிறந்த அனுபவமாக இருந்தது.

அனிருத்தின் ஹிட் ஆல்பத்திற்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான நடனத்தை படத்தில் அமைத்த ஷோபி மாஸ்டருக்கும், லலிதா மாஸ்டருக்கும் நன்றி. நான் இண்டஸ்ட்ரியில் சுமூகமாக பயணிக்கும்படி, இங்குள்ள ரசிகர்கள் அளித்த அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. டான் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்க்க வேண்டிய ஒரு வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பேசியது…
இந்த தருணம் நான் பல வருடங்களாக காத்திருந்த ஒன்று. எனது கனவுகளை நனவாக்க பெரும் உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு நன்றி கூறிகொள்கிறேன்.

இவ்வளவு பெரிய நட்சத்திர நடிகர்களைக் கையாளும் அளவிற்கு என்னை தகுதி உடையவனாக மாற்றிய அட்லீக்கு நன்றி. அவர் எனது வழிகாட்டியாக இருந்து, எனக்கு பல அனுபவங்களைப் கற்று தந்தார். சிவகார்த்திகேயன் சாரின் ஒரு போன் கால், என் வாழ்க்கையை மாற்றியது. SK வின் வெற்றி நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவரது திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்ற போதிலும், அவர் எப்போதும் பணிவுடன் இருப்பார். படம் தொடங்கிய காலத்திலிருந்தே, கொரோனா பிரச்சனைகள் உட்பட பல சவால்கள் இருந்தன.

ஆனால் அந்த நேரத்திலும், அவர் படம் சிறப்பாக உருவாவதற்கான அறிவுரைகளை கொடுத்துக்கொண்டே இருப்பார். டான் படத்தில், SK சார், நிஜ மற்றும் ரீல்-சக்கரவர்த்தி ஆகிய இருவருக்கும் உயிர் கொடுத்துள்ளார். அனிருத் சார் ஒரு பாசிட்டிவிட்டி நிறைந்த மனிதர், அதை எங்கள் முதல் சந்திப்பிலேயே என்னால் உணர முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும், சமுத்திரக்கனியும் இந்தப் படத்தின் தூண்கள். பிரியங்கா அருள் மோகன் ஒரு நேர்மையான மற்றும் அர்ப்பணிப்புள்ள கலைஞர். பெரும் ஆதரவை வழங்கிய ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் நன்றி. டான் திரைப்படம் பார்வையாளர்கள் அனைவருக்கும் வேடிக்கையான மற்றும் அழகான பொழுதுபோக்கு நிறைந்த படமாக இருக்கும்.

நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது…

இந்த படத்தில் நாங்கள் பணியாற்றத் தொடங்கியபோது, Lyca Productions டேபிள் லாபத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம், அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளோம். சிபி, டான் படத்தின் ஸ்கிரிப்டை கூறியபோது, அது மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பிரதிபலிக்கும் கதை இது, அதை சிபி மிக அழகாக வடிவமைத்துள்ளார். அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டான் படம் நல்ல வெற்றியடைந்தால், என்னைப் போன்றவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். நான் மிகவும் ரசித்தவர்களைக் கொண்ட ஒரு குழுவைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சார் உடைய கதாபாத்திரம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். எனது கல்லூரி கல்சுரல் நிகழ்ச்சிகளில் SJ சூர்யா சாரின் குரலில் மிமிக்ரி செய்ய தொடங்கி, அதன் மூலம் பிரபலமானேன். படப்பிடிப்பின் போது கூட இதை அவரிடம் சொன்னேன். படத்தில் எனக்கு அறிமுகப் பாடலும், கதாநாயகியுடன் ஒரு பாடலும் இருப்பதால், நான் ஹீரோ இல்லை.

இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு ஹீரோ மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி சிறப்புகள் உண்டு. இந்தப் படத்தில் பிரியங்கா சிறப்பாக நடித்துள்ளார். அவர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்பதால், இயக்குனருக்கு அவரை நடிக்க வைப்பது எளிதாக இருந்தது,

மேலும் அவரால் சிறந்த நடிப்பை வழங்க முடிந்தது. பாலா, ராஜு, ஷாரிக், ஷிவாங்கி, விஜய் மற்றும் பலர் படத்தில் அசத்தியுள்ளனர். அவர்களுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் எனது கல்லூரிக்கு திரும்புவது போல் இருந்தது.

சிவாங்கி இந்தப் படத்தில் அழகான நடிப்பை வழங்கி இருக்கிறார். விலங்கு வெப் தொடரில் பால சரவணனின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. தொழில்நுட்பக் குழு இந்த படத்திற்கு ஒரு பெரிய தூணாக இருந்திருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகளை அனிருத் செய்துகொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வரமுடியவில்லை. அவர் கடந்த ஒரு மாதமாக தனது படங்களுக்காக இரவும் பகலும் தூங்காமல் உழைத்து வருகிறார். எனது படங்களுக்கு அவர் அளித்த ஆதரவு அளப்பரியது.

கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்வதே எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரிய சவாலாக இருந்தது. ஏறக்குறைய அனைத்து காட்சிகளும் கல்லூரி கூட்டத்தை உள்ளடக்கியது,

மேலும் முழு குழுவினரின் ஒத்துழைப்புடன் மட்டுமே, இந்த காட்சிகளை எந்த தடையும் இல்லாமல் எங்களால் படமாக்க முடிந்தது. இன்று தனது பெற்றோரை பெருமைப்படுத்திய சிபியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மீதமுள்ளவற்றை பார்வையாளர்கள் கவனித்துக்கொள்வார்கள்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் சார் எங்கள் படத்தை வெளியிடுகிறார், அவர் மூலம் டான் படம் ஒரு பெரிய வெளியீட்டைக் காணப் போகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டான் படத்தில் கனவுகளும் லட்சியங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது, எனது குழந்தைப் பருவத்தை மறுபரிசீலனை செய்வது போல் இருந்தது. படம் முடிந்து திரையரங்குகளை விட்டு வெளியில் செல்லும் பார்வையாளர்களுக்கு படம் சில தாக்கத்தை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்து வரும் எனது ரசிகர்களுக்கு நன்றி..

Don trailer launch highlights

கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்.: ‘பான் இந்திய’ நடிகராக சந்தீப் கிஷன்.; கை கொடுக்கும் லோகேஷ்

கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்.: ‘பான் இந்திய’ நடிகராக சந்தீப் கிஷன்.; கை கொடுக்கும் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் பான் இந்திய நடிகராக அறிமுகமாகும் ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழில் வெளியிடுகிறார் .

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மைக்கேல்’.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன் முறையாக பான் இந்திய நடிகராக அறிமுகமாகிறார்.

இவருடன் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார்.

சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது இவர்களுடன் தயாரிப்பாளர்கள் மைக்கேல் பரத் சௌத்ரி மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோர் கூட்டாக இணைந்து ஏராளமான பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து வருகிறார்கள்.

முன்னணி இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் முதன்முதலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி, வெளியாகவிருக்கும் ‘மைக்கேல்’ படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார்.

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் தயாரான ‘மைக்கேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் ‘கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்’ என்ற வாசகம் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சந்தீப் கிஷனின் தோற்றம் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. அவரின் சிக்ஸ் பேக் கட்டுடல், கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், நீண்ட மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரம்.. ஆகியவை சிறந்த ஆக்ஷன் அவதாரத்தை அவர் திரையில் படைக்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

அதனால் இணையத்தில் வெளியான சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்ப்பை விட, கூடுதலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்துவருகிறது.

Sundeep Kishan starrer Michael First Look Dropped

More Articles
Follows