தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் சமீபத்தில் வெளியாகி உலகளவில் ரூ 550 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் இந்தப் படத்திற்கான பூஜை சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றதாக வந்த தகவல்களை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.
லைக்கா தயாரிக்கும் இந்த படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்க உள்ளார் .
இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியார் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேலும் பாகுபலி வில்லன் ராணா மற்றும் சார்பட்டா பரம்பரை & அநீதி படப் புகழ் துஷாரா விஜயன் ஆகியோரும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
Rana and Dushara Vijayan is part of Thalaivar 170 movie.?