பாஜக-வில் இணையும் சிவாஜி கணேசன் மகன்.; சகோதரர் வாழ்த்து.!

ram kumarநடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தை நட்சத்திர குடும்பம் என்றே சொல்லலாம்.

மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளர் நடிகர் ஆவார்.

இளைய மகன் பிரபுவும் படங்களை தயாரித்தும் நடித்தும் வருகிறார்.

இவர்களின் மகன்களும் (சிவாஜியின் பேரன்கள்) சினிமாவில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மூத்த மகன் ராம்குமார் விரைவில் பாஜக.வில் இணையவுள்ளார்.

எனவே அண்ணனுக்கு தன் வாழ்ந்த தெரிவித்துள்ளார் சின்ன தம்பி பிரபு.

பாரத பிரதமர் மோடியின் தீவிர ரசிகர் அண்ணன் ராம்குமார். 2 ஆண்டுகளாக இணைய காத்திருந்து தற்போதுதான் இணையவுள்ளார்.

ஆனால் தனக்கும் தன் மகன் விக்ரம் பிரபுக்கும் அரசியல் ஆசையில்லை என தெரிவித்துள்ளார் பிரபு.

விக்ரம் நடித்த ‘ஐ’ மற்றும் ஆர்ஜே பாலாஜி நடித்த ‘எல்கேஜி’ படங்களில் ராம்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Ram Kumar Ganesan to join BJP soon

Overall Rating : Not available

Latest Post