சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் விவாகரத்து.?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் விவாகரத்து.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soundarya Rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-லதா தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார்.

இளைய மகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

இவர் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இவர்களிடையே கருந்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும் ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக சம்பந்தபட்ட தரப்பில் இருந்து எவ்விதமான தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிகர்ஸ் உங்களை ப்ரதர்ன்னு கூப்பிடுறாங்களா? அப்போ இதை படிங்க..!

பிகர்ஸ் உங்களை ப்ரதர்ன்னு கூப்பிடுறாங்களா? அப்போ இதை படிங்க..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dharma durai movie stillsதமிழில் உருவாகும் திரைப்படங்களை ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு பார்ப்பது ஒருவகை என்றால், நம்மூர் படங்களை அடுத்த படத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது இன்னொரு வகை.

இதற்கெல்லாம் நமக்கு ஏது நேரம் என்று சிலர் அலுத்துக் கொண்டாலும், சிலர் இதையே வேலையாக செய்து கொண்டும் இருக்கின்றனர்.

அந்த நெட்டிசன்கள்தான் தற்போது ஒரு மீம்ஸை கிரியேட் செய்துள்ளனர்.

ராஜா ராணி படத்தில் ஆர்யாவைப் பார்த்து நஸ்ரியா ப்ரதர்னு கூப்பிடுவாங்க. அதில் சொன்னவர் இறந்து விடுவார்.

அதுபோல் தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதியை அண்ணா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அழைப்பார். அவரும் இறந்துவிடுவார்.

எனவே எங்களை ப்ரதர்ன்னு கூப்பிட்டா உங்களை சீக்கிரமே எமன் கூப்பிடுவான் என்று மீம்ஸ் கிரியேட் செய்துள்ளனர் கலக்கி வருகின்றனர்.

பாரதிராஜாவுடன் கைகோர்க்கும் மம்மூட்டி

பாரதிராஜாவுடன் கைகோர்க்கும் மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mammootty with bharathi rajaஇயக்குனர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படும் பாரதிராஜா, நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அறிமுக இயக்குனர் நிதிலன் இயக்கி வரும் ‘குரங்கு பொம்மை’ படத்தில் முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்க, இவருடன் விதார்த் நடிக்கிறார்.

பிரபல தயாரிப்பாளர் தேனப்பன் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக்கை மலையாள நடிகர் மம்மூட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுகிறார்.

காவிரி பிரச்சினை தொடர்பான முழு அடைப்புக்கு திரையுலகம் ஆதரவு

காவிரி பிரச்சினை தொடர்பான முழு அடைப்புக்கு திரையுலகம் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shooting spotகாவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இப்போராட்டத்திற்கு ஆளுங்கட்சியை தவிற ஏனைய அரசியல் அரசியல் கட்சிகளும், தமிழர் அமைப்புகளும், பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையுலகை சேர்ந்த நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், பெப்சி, பி.ஆர்.ஓ யூனியன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன்படி இன்று தமிழகத்தில் காலை, மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், எவ்விதமான படப்பிடிப்புகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

நானும் ஹீரோதான் ‘மீசையை முறுக்கு’ம் ஹிப்ஹாப் ஆதி

நானும் ஹீரோதான் ‘மீசையை முறுக்கு’ம் ஹிப்ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hip hop thamizha aadhiதிரையுலகில் ஒரு துறையில் இருக்கும் பிரபலமானவர் மற்றொரு துறையில் நுழைவது வழக்கமான ஒன்றுதான்.

பிரபல இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தற்போது முன்னணி ஹீரோ வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.

தற்போது இவர்களுடன் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் இணைந்துள்ளார்.

பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வந்த இவர், விஷால் நடித்த ‘ஆம்பள’ படம் மூலம் திரையுலகில் நழைந்தார்.

தற்போதும் படங்களுக்கும் இசையமைத்து வரும் நிலையில், ‘மீசையை முறுக்கு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

கபாலி-தெறி புரொடியூசருடன் சிவகார்த்திகேயன்?

கபாலி-தெறி புரொடியூசருடன் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyanரெமோ படத்தை தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தையும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா.

இதனையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் பொன்ராம் இணைய உள்ள படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு கபாலி, தெறி என அதிரடி ஹிட் படங்களை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்ற செய்திகள் வலம் வருகின்றன.

மேலும் இதுகுறித்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக இரவு நேரத்திலும் வரலாம் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows