வேலைக்காரனின் அடுத்த திட்டம் ஆரம்பம்

Sivakarthikeyan Samantha new movie updatesரெமோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த இரண்டு படங்களையும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இதில் ஒன்றான வேலைக்காரன் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகீறது.

இப்படத்தை வருகிற செப்டம்பர் மாதம் இறுதியில் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை பொன்ராம் இயக்குகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய இரு வெற்றிப் படங்களை இந்த கூட்டணி கொடுத்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு தற்போதே உருவாகிவிட்டது.

இமான் இசையமைக்க, இப்படத்தில் சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதன் சூட்டிங் வருகிற ஜீன் 15ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம்.

Sivakarthikeyan Samantha new movie updates

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post