லிங்கா – சம்பிகாவின் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப்பால் உருவான ‘பானிபூரி’

லிங்கா – சம்பிகாவின் ‘லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப்பால் உருவான ‘பானிபூரி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிவ்-இன்’ ரிலேஷன்ஷிப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘பானிபூரி’.

பாலாஜி வேணுகோபால் என்பவர் இந்த ‘பானிபூரி’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார்.

நண்பன், தாண்டவம், மதராசபட்டினம், வேலைக்காரன், லிஃப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலாஜி வேணுகோபால்.

இந்தத்தொடரில் லிங்கா, சம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர் ஆகியோர் நடித்துள்ளனர்.

நவ்நீத் சுந்தர் இசையமைக்க பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள, 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் ஷார்ட்ஃபிளிக்ஸ் (Shortflix) என்ற தளத்தில் விரைவில் வெளியாகிறது.

ஒரு குடும்பத்தினர் மற்றும் பக்கத்து வீடு காரணமாக ஒரு ஜோடி தங்கள் உறவில் எதிர்கொள்ளும் சவால்களையும் பிரச்சினைகளையும் இந்த ‘பானிபூரி’ பேசும் என்கிறது படக்குழு.

Cast & Crew Details:

Cast:
Linga
Champika
Elango Kumaravel
Kaniha
Vinod Sagar
SriKrishna Dhayal
Gopal

Created by:
Balaji Venugopal

Music Composer:
Navneeth Sundar

Director of Photography:
Praveen Balu

Editor:
PK

Sound Design & Mix:
Rajesh Mukkath
Production Designer:
Saravanan Vasanth

Costumes:
Dipikashi

Executive Producer:
Chelladurai

Creative Producer:
Karuppiah C Ram

Produced By:
Full House Entertainment

Balaji Venugopal takes the concept of live-in relationships to new height

ஹாட்ரிக் ஹிட்டடிக்க மீண்டும் அதே இயக்குநருடன் இணையும் தனுஷ்

ஹாட்ரிக் ஹிட்டடிக்க மீண்டும் அதே இயக்குநருடன் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் நடிகர் தனுஷ் மும்பை சென்றார்.

அவரது ஹேர் ஸ்டைல் தாடி பிரபல சாமியார் பாபா குருதேவ் போல உள்ளதாக சில கமெண்ட் தெரிவித்தனர்.

இந்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

ஒரு புதிய ஹிந்திப் படத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

அதற்கான லுக் டெஸ்ட்டுக்காகவே தனுஷ் மும்பை சென்றதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்குவார் எனக் தெரிய வந்துள்ளது.

நடிகர் தனுஷை ஹிந்தியில் அறிமுகம் செய்தவர் ஆனந்த் எல்.ராய் தான்.

‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் தனுஷ்.

பின்னர் பால்கி இயக்கிய ‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் தனுஷ்.

இதனை அடுத்து மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ படத்தில் நடித்தார் தனுஷ். இவை வெற்றி பெற்ற நிலையில் ஹாட்ரிக் வெற்றிக் கொடுக்க 3வது முறையாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது

 ஆனந்த் எல்.ராய்

Dhanush teams up with Anand L Roy for 3rd time

விஜய் பட ஹீரோயினுக்கு மம்மியாகும் நடிகை சமந்தா

விஜய் பட ஹீரோயினுக்கு மம்மியாகும் நடிகை சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா.

இவர் அண்மையில் ஒரு தீவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது அதிலிருந்து மீண்டு மளமளவென படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘சாகுந்தலம்’ படம் மோசமான விமர்சனங்களை பெற்றது.

தற்போது விஜய தேவர்கொண்டா உடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

இதனையடுத்து ஒரு வெப் தொடரில் முக்கியமான கேரக்டரில் சமந்தா நடித்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘சிட்டாடெல்’ வெப் தொடரின் இந்திய பதிப்பில் தான் சமந்தா நடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா

இதை ‘தி பேமிலிமேன்’ வெப் தொடரை இயக்கிய ராஜ் – டீகே இயக்குகின்றனர்.

இந்தத் தொடரில் பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக சமந்தா நடிக்கிறார் என்பதுதான் ஹைலைட்.

1980, 90-களில் நடக்கும் கதைக்களத்தில் சமந்தா காட்சிகள் வருகிறதாம்.

கூடுதல் தகவல்…

பாலிவுட்டில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் உடன் ‘தமிழன்’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

தமிழன்

samantha plays priyanka chopra mother role

மீண்டும் விஜய் அஜித் கமலை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணையும் த்ரிஷா

மீண்டும் விஜய் அஜித் கமலை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணையும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

40 வயதை நெருங்கினாலும் நச்-சென்று இருக்கும் சூப்பர் ஹீரோயின் என்றால் அது கண்டிப்பாக த்ரிஷாவை சொல்லலாம்.

பொன்னியின் செல்வன் படத்திலும் சரி ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் சரி த்ரிஷா அணிந்த ஆடைகளும் அவரது அழகும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

குந்தவையாக ரசிகர் மனதில் குந்தி கொண்டார் இந்த திரிஷா.

இதனையடுத்து தற்போது திரிஷாவுக்கு ஏராளமான முன்னணி பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக இணைந்து நடித்து வருகிறார் திரிஷா.

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கமல் 234 ஆவது படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது த்ரிஷா.

ஏற்கனவே விஜய் – அஜித்துடன் பல படங்களிலும் மன்மதன் அம்பு & தூங்காவனம் ஆகிய படங்களில் கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார் திரிஷா.

இந்த நிலையில் ‘கொடி’ படத்திற்குப் பிறகு மீண்டும் தனுசுடன் இணைந்து த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 50வது படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் - த்ரிஷா

Actress Trisha joins with dhanush’s D50 movie

குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட ‘சூப்பர் ஹீரோ’ ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’

குழந்தைகளுக்காக திரையிடப்பட்ட ‘சூப்பர் ஹீரோ’ ஹிப் ஹாப் ஆதியின் ‘வீரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹிப் ஹாப் ஆதி நடித்து இசையமைத்து ஜூன் 3ம் தேதி வெளியான திரைப்படம் ‘வீரன்’. இந்த படத்தை மரகத நாணயம் புகழ் எ ஆர் கே சரவன் இயக்கி இருந்தார்்

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கு நாயகியாக ஆதிரா நடித்திருந்தார்.

வீரன்

பெரும்பாலும் சூப்பர் ஹீரோ படங்கள் நகரத்தை மையப்படுத்தி அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் இந்த படத்தில் கோவை மண்வாசனையுடன் கிராமத்துக்கு நடக்கவிருந்த ஆபத்தை ஒரு சூப்பர் ஹீரோ எப்படி முறியடிக்கிறார் என்பதை காட்சிகளாக அமைத்திருந்தார் சரவன்.

இந்தப் படம் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று ஜூன் 4ம் தேதி சென்னை பிரசாத் லேபில் குழந்தைகளுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இந்த படத்தை பார்த்த குழந்தைகள் படத்தை மிகவும் ரசித்ததாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்.

வீரன்

Tamil super hero Veeran special screening for KIDS

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் ‘ஹர்காரா’

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் ‘ஹர்காரா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், நடிகர் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ அவரே நடித்து இயக்கியிருக்கும் ‘ஹர்காரா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் மற்றொரு நாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தமிழ்நாடு தபால் துறை தலைமை அதிகாரி வெளியிட்டுள்ளார்.

நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது ஃபர்ஸ்ட்லுக்.

வி 1 மர்டர் கேஸ் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஹர்காரா

இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.

படத்தினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்நாடு தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி சாருகேசி வெளியிட்டார்.

மேலும் படம் குறித்து அவர் கூறுகையில்…

“பல நூற்றாண்டுகளாக தகவல் தொடர்புக்கான ஒரு ஊடகமாக சேவை செய்யும் அஞ்சல் துறை, நமது குடிமக்களின் இதயங்களில் எப்போதும் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. தபால்காரர்களின் சிறப்பான பங்களிப்பை கவுரவிப்பதற்கும், அவர்களின் பயணம், சவால்கள் மற்றும் வெற்றிகள் குறித்து வெளிச்சமிட்டு காட்டுவதற்கும் இந்த திரைப்படம் ஒரு வாய்ப்பாகும்.

இப்படிப்பட்ட ஒரு சிறந்த படைப்பு மிகப்பெரிய வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சினிமா முயற்சியானது, நமது அஞ்சல் துறையின் முக்கியத்துவம் மற்றும் தபால்காரர்களால் ஆற்றப்படும் தன்னலமற்ற சேவையைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியப்படுத்தும் என்றார்.

ஹர்காரா

இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார்.

பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு நிறுவனம் : KALORFUL BETA MOVEMENT
தயாரிப்பாளர்: N.A.ராமு / சரவணன் பொன்ராஜ்
இணை தயாரிப்பாளர்: அரவிந்த் தர்மராஜ் / தீனா
இயக்குநர்: ராம் அருண் காஸ்ட்ரோ
ஒளிப்பதிவு: பிலிப் R. சுந்தர் / லோகேஷ் இளங்கோவன்
இசையமைப்பாளர்: ராம் சங்கர்
எடிட்டர் : டானி சார்லஸ்
கலை இயக்குநர்: VRK ரமேஷ்

ஹர்காரா

First Look of Harkara revealed by Chief Postmaster General Tamilnadu

More Articles
Follows