தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்துடன் ‘வேலைக்காரன்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் சரத்பாபு.
இவர் விஜயகாந்த் உடன் கஜேந்திரா & கமலுடன் சட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
1980 களில் வெளியான ‘உதிரிபூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்” உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். தற்போது இவருக்கு வயது 71 ஆகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.
அப்போது திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் விரைவில் சரத்பாபு நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
Veteran actor sarath babu in critical condition