மெசேஜ் சொல்ல வரும் ‘போலீஸ்’ சிவகார்த்திகேயன்

மெசேஜ் சொல்ல வரும் ‘போலீஸ்’ சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan police kaaki sattaiசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், படத்தின் வசூல் ரூ. 36 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள சிவகார்த்திகேயன் சென்னை திரும்பியதும் மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நவம்பர் 11ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

பெயரிடப்படாத இப்படத்தின் சூட்டிங் மலேசியா, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாம்.

காக்கி சட்டை படத்திற்கு மீண்டும் இப்படத்தில் போலீஸாக நடிக்கிவிருக்கிறாராம்.

இப்படம் தனி ஒருவன் பாணியிலான சோஷியல் மெசேஜ் கலந்த படமாக இருக்குமாம்.

‘தனுஷின் வளர்ச்சி; சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு’ – சிம்பு ஓபன் டாக்

‘தனுஷின் வளர்ச்சி; சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு’ – சிம்பு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu stillsகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென ஓர் இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருப்பவர் சிம்பு.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடா வருகிற நவம்பரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் தனுஷின் வளர்ச்சி குறித்து பேட்டியளித்துள்ளார்.

“தனுஷ் பெரிய உயரத்துக்கு போனால் எனக்கென்ன? நான் என் வேலையை சரியாக பார்க்கிறேனா? என்பதுதான் எனக்கு முக்கியம்.

அவர் என்னைவிட பெரிய ஆளாக வளர்ந்தால், நல்ல விஷயம்தானே.

அவரும் தமிழ் சினிமாவில் உள்ள ஒரு சகநடிகர். அவர் நல்ல உயரத்திற்கு போவதில் என்ன தவறு உள்ளது” என்றார்.

மற்றொரு பேட்டியில் சிவகார்த்திகேயனின் கண்ணீர் பிரச்சினைக்கு ஆதரவு அளித்தது குறித்து கேட்கப்பட்டதற்கு…

“என்னுடைய வாலு படத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதுபோல் பீப் பாடல் பிரச்சினையும் பெரியளவில் உருவெடுத்தது.

அந்த சமயத்தில் எனக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.

என் நிலைமை சிவகார்த்திகேயனுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்தேன்” என தெரிவித்துள்ளார்.

விக்ரமை தொடர்ந்து அஜித்துடன் மோதும் அபிஷேக்பச்சன்

விக்ரமை தொடர்ந்து அஜித்துடன் மோதும் அபிஷேக்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abhishek bachchan ajithமணிரத்னம் இயக்கிய ராவணன் படம், ஹிந்தியில் ராவண் என்ற பெயரில் வெளியாகியது.

இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது விக்ரமை தொடர்ந்து அஜித்துடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறாராம் அபிஷேக் பச்சன்.

சிவா இயக்கும் தல 57 படத்தில் வில்லன் வேடத்தில் ஒரு பிரபல ஹிந்தி நடிகர் நடிக்கவுள்ளார் என்பதை தெரிவிந்திருந்தோம் அல்லவா.

அந்த கேரக்டரில் நடிக்கதான் அபிஷேக்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இவை உறுதியாகும் பட்சத்தில், விரைவில் இதன் சூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.

வடஇந்திய ரசிகர்களை குறிவைத்து இந்த கேரக்டருக்கான கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷங்கரை மீறியும் வெளியாகும் ரஜினியின் ‘2.ஓ’ படங்கள்

ஷங்கரை மீறியும் வெளியாகும் ரஜினியின் ‘2.ஓ’ படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini 2 point O shooting spotரஜினிகாந்த் நடித்து வரும் ஷங்கரின் 2.ஓ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கெடுபிடிகள் உள்ளது.

படம் தொடர்பான எந்தவொரு புகைப்படமும் இணையத்தில் லீக்காகி விடக்கூடாது என ஷங்கர் கண்காணித்து வருகிறார்.

ஆனால், அதனையும் மீறி ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த், ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் பளிச்சென தோன்றுகிறார்.

இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

பாகுபலி-2 படத்தின் சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா?

பாகுபலி-2 படத்தின் சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baahubali movie stillsகடந்த வருடம் ரிலீசான ராஜமௌலியின் பாகுபலி படம் இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை படைத்தது.

படத்தின் உருவாக்கத்திலும், வசூலிலும் இது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

அடுத்த வருடம் 2017 கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இநிலையில், இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகியவற்றின் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் உரிமை ரூ.45 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கிரேட் இண்டியா நிறுவனம் இந்த விலைக்கு இதை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் நிஜாம் ஏரியாவின் தெலுங்கு உரிமை மட்டுமே ரூ.45 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இவையில்லாமல், சோனி டிவி இதன் ஹிந்தி சேட்டிலைட் உரிமையை மட்டும் ரூ. 51 கோடி வாங்கியிருக்கிறதாம்

இனி மேடையில் அழாமல் இருக்க சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு

இனி மேடையில் அழாமல் இருக்க சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyan new imagesரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் மேடையிலே கண்ணீர் விட்டு அழுதார்.

இது திரையுலகில் பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இதுபோன்று இனி அழாமல் இருக்க முயற்சி செய்ய உள்ளதாக சிவகார்த்திகேயன் தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது….

நான் சென்சிட்டிங் டைப். எந்த நெகிழ்ச்சி சம்பவம் என்றாலும் எமோஷன் ஆகிவிடுவேன்.

இதற்கு முன்பு ஒரு முறை மேடையில் அழுதுள்ளேன். விருது வாங்கும்போது, என் தந்தையை நினைத்து அழுதேன்.

என் நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

இதுவரை நீ பையன். இனி பெரிய ஆண் மகன் என்றார்.

இனி நிதானமாக யோசிப்பேன். என் எமோஷனலை கன்ட்ரோல் செய்வேன். என்றார்.

More Articles
Follows