சிவகார்த்திகேயனுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

சிவகார்த்திகேயனுக்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

remo movie stillsபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ கடந்த அக்டோபர் 7ஆம் தேதி வெளியானது.

இப்படத்தின் 25வது நாளை இவரது ரசிகர்கள் இணையத்தளங்களில் டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் இந்த வெற்றியை கருணை இல்லங்களில் கொண்டாடி உள்ளனர்.

அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் தீபாவளி பட்டாசுகளை வழங்கியுள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் நிச்சயம் அவர்களது அபிமான நடிகர்களை பெருமையடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சீனுராமசாமி இயக்கத்தில் மம்மூட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்

சீனுராமசாமி இயக்கத்தில் மம்மூட்டி-எஸ்.ஏ.சந்திரசேகர்

Mammooty and SACவிஜய்சேதுபதி நடிப்பில் உருவான ‘தர்மதுரை’ படத்தை சீனுராமசாமி இயக்கியருந்தார்.

இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் சீனுராமசாமி.

இதில் மம்மூட்டி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்களாம்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் இதன் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர் சீனுராமசாமி.

மீண்டும் ‘பேராண்மை’ கேரக்டரில் ஜெயம் ரவி

மீண்டும் ‘பேராண்மை’ கேரக்டரில் ஜெயம் ரவி

again jayam ravi selected character as Peranmai movieஜெயம் ரவி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை இயக்குனர் விஜய் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தை ‘தி திங்க் பிக் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

நாயகியாக சாயிஷா சைகல் நடிக்கிறார். இவர் இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் பேத்தி ஆவார்.

திரு ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைபக்கிறார்.

இதில் ஜெயம் ரவி பழங்குடி இனத்தவராக நடித்து வருகிறாராம்.

இதற்கு முன்பே, பேராண்மை படத்தில் இதுபோன்ற கேரக்டரில் ஜெயம் ரவி நடித்திருந்த்து தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தனுஷ்-சிவகார்த்திகேயன் பெயரில் ஹாட்ரிக் அடித்த டைரக்டர்

தனுஷ்-சிவகார்த்திகேயன் பெயரில் ஹாட்ரிக் அடித்த டைரக்டர்

dhanush sivakarthikeyan durai senthil kumarதுரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இந்த இரு படங்களையும் தனுஷ் தயாரித்திருந்தார்.

அண்மையில் வெளியான தனுஷின் கொடி படத்தையும் துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்திருந்தார்.

இப்படம் வெளியாகும் நாள் அன்று தனுஷ் மற்றும் இயக்குனருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொடி படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக் கொடி நாட்டியுள்ளது.

இதன் மூலம் துரை செந்தில்குமார் இயக்கிய 3 படங்களும் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையும் நயன்தாரா?

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையும் நயன்தாரா?

vijay sethupathi nayantharaவிக்னேஷ்சிவன் இயக்கிய ‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்தனர்.

தனுஷ் தயாரித்து இருந்த இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் மீண்டும் இந்த ஜோடி இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

‘டிமாண்டி காலனி’ படத்தை தொடர்ந்து, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார்.

கேமியோ பிலிம்ஸ் இண்டியா இப்படத்தை தயாரித்து வருகிறது.

‘சைத்தான்’ ஆடியோவில் விஜய் ஆண்டனி செய்யும் ‘ராஜதந்திரம்’

‘சைத்தான்’ ஆடியோவில் விஜய் ஆண்டனி செய்யும் ‘ராஜதந்திரம்’

vijay antony saithaanபிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

சைத்தான் படத்தில் அருந்ததி நாயர், பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார்.

வருகிற நவம்பர் 3ஆம் தேதி ‘சைத்தான்’ படத்தின் இசையை வெளியிட உள்ளனர்.

அப்போதே இப்படத்தில் உள்ள முதல் 5 நிமிட காட்சிகளை திரையிடவிருக்கிறார்களாம்.

இந்த 5 நிமிடங்கள் படத்தை பற்றிய ஒரு அவுட்லைனை கொடுக்கும் என்கின்றனர் படக்குழுவினர்.

இதற்குமுன்பு, ‘ராஜதந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் 6 நிமிட காட்சிகள் வெளியானது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

More Articles
Follows