மீண்டும் சோஷியல் மெசேஜ் சொல்ல வரும் சிவகார்த்திகேயன்

மீண்டும் சோஷியல் மெசேஜ் சொல்ல வரும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan and PS Mithran combo movie will have social messageசிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் சீமராஜா.

அதன்பின்னர் அவர் தயாரித்த கனா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தற்போது ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட டைரக்டர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து இரும்புத் திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தின் கதையானது சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்தாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே வேலைக்காரன் படத்தில் ஒரு நல்ல சோஷியல் மெசேஜை சிவகார்த்திகேயன் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan and PS Mithran combo movie will have social message

கனடாவில் தமிழ் இருக்கை வாழ்த்து பாடலுக்கு இசையமைக்கும் இமான்

கனடாவில் தமிழ் இருக்கை வாழ்த்து பாடலுக்கு இசையமைக்கும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Imman composing Music for Tamil Anthem for Tamil seat in University of Torontoசர்வதேச அளவில் புகழ்பெற்ற டொரண்டோ பல்கலைக்கழகம் கனடா நாட்டில் அமைந்துள்ளது.

இதில் தமிழ் மொழிக்காக இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளும் நிதி திரட்டலும் நடந்து வந்தன. இதற்கு பல்வேறு பிரபலங்கள் நிதி திரட்டினர்.

இந்நிலையில் அப்படி அமையவுள்ள தமிழ் இருக்கைக்கான தமிழ்தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார்.

மேலும் கனடா தமிழ் காங்கிரஸ் சார்பில் இமானுக்கு, `மாற்றத்திற்கான தலைவர் விருதும்’ வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி டி. இமான் தன் ட்விட்டரில்… “இந்த வாய்ப்பை வழங்கிய கனடா தமிழ் அமைப்புக்கு நன்றி. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு இசை அமைப்பது பெருமையாக உள்ளது.

உலகில் திறமையுள்ள இசை கலைஞர்கள் நான் அறிமுகம் செய்வேன் எனவும் குறிப்பிட்டு வாழ்க தமிழ்” என பதிவிட்டுள்ளார்.

D.IMMAN
‏Verified account @immancomposer

Honoured to compose a Tamil anthem for Tamil Chair,University of Toronto!Thanks to Canadian Tamil Congress for honouring me with Leaders for Change Award! Glory to God!I ensure my support always in introducing talented musicians across the globe in future too! வாழ்க தமிழ்!

Imman composing Music for Tamil Anthem for Tamil seat in University of Toronto

அரசு பேருந்தில் பேட்ட..; அரசு நடவடிக்கை எடுக்க விஷால் வலியுறுத்தல்

அரசு பேருந்தில் பேட்ட..; அரசு நடவடிக்கை எடுக்க விஷால் வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalரஜினிகாந்த் நடிப்பில் உருவான பேட்ட திரைப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

படம் ஒரு பக்கம் வசூல் வேட்டை செய்துக் கொண்டிருந்தாலும், இணைய தளங்களிலும் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த பைரசியை தடுக்க வேண்டிய அரசு பேருந்திலேயே பேட்ட திரைப்படம் ஒளிப்பரப்பானது.

இதை அந்த பஸ்சில் பயணித்த பயணி ஒருவர், செல்போனில் படம் பிடித்து, பஸ் எண், எந்த வழித்தடங்களில் செல்கிறது என்ற விபரத்தை இணையதளங்களில் வெளியிட்டார்.

இதுப்பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது : அரசு பஸ்சில் திருட்டுத்தனமாக படங்கள் ஒளிப்பரப்புவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது.

அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டு, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

3வது முறையாக விஜய்யுடன் இணையும் படத்தை தொடங்கினார் அட்லி

3வது முறையாக விஜய்யுடன் இணையும் படத்தை தொடங்கினார் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 63தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் 3 -வது முறையாக கூட்டணி அமைத்திருக்கிறார் அட்லி.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில் படப்பூஜையுடன் இதன் சூட்டிங்கை துவங்கியுள்ளனர்.

தற்காலிகமாக இதற்கு தளபதி 63 என்று பெயரிட்டுள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதுகிறார்.

மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

நட்பின் நம்பிக்கை துரோகத்தை சொல்லும் ‘காதல் முன்னேற்ற கழகம்’

நட்பின் நம்பிக்கை துரோகத்தை சொல்லும் ‘காதல் முன்னேற்ற கழகம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Maanik Sathya talks about Kadhal Munnetra Kazhagamப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’

இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.

அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப்படுவது நம்பிக்கை துரோகம் தான்..

அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது… அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது.

கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.. படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.

சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார். நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம்.

படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். இயக்குனர் மாணிக் சத்யா.

ஒளிப்பதிவு – ஹாரிஸ் கிருஷ்ணன்
இசை – பி.சி.சிவன்
பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
நடனம் – அசோக்ராஜா
சண்டை பயிற்சி – அம்ரீன் பக்கர்
கலை – பிரகதீஸ்வரன்
தயாரிப்பு நிர்வாகம் – முத்தையா, விஜயகுமார்.
தயாரிப்பு – மலர்க்கொடி முருகன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக் சத்யா.

Director Maanik Sathya talks about Kadhal Munnetra Kazhagam
Director Maanik Sathya talks about Kadhal Munnetra Kazhagam

சில வி‌ஷயங்கள் அதுவாக நடந்தது..; தனுஷுடன் இணைவது குறித்து ஜிவி. பிரகாஷ்

சில வி‌ஷயங்கள் அதுவாக நடந்தது..; தனுஷுடன் இணைவது குறித்து ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakash talks about joining with Dhanush in Asuranசில ஆண்டுகளுக்கு முன் மயக்கம் என்ன படத்தின் போது ஏற்பட்ட சிறிய மனகசப்பால் தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணி உடைந்தது.

அதன் பின்னர் தனுஷ் படங்களுக்கு அனிருத் இசையமைக்க, அதன் பின்னர் ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ஜிவி. பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடினார். இதன் முமூலம் இந்த கூட்டணி மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் `அசுரன்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியானது.

தற்போது ஜி.வி.பிரகாஷ் அவர்களும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆடுகளம் படத்துக்கு பின் வெற்றிமாறன், தனுஷ், நான் மூவரும் இணைகிறோம். மிக சுவாரசியமான படமாக இருக்கும். சில வி‌ஷயங்கள் அதுவாக நடந்தது. மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

GV Prakash talks about joining with Dhanush in Asuran

More Articles
Follows