BREAKING ஹலோ டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடை.; முழு விவரம் இதோ…

BREAKING ஹலோ டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடை.; முழு விவரம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Govt of India bans 59 mobile Apps and other Chinese Appsபேஸ்புக் இருக்கியா..? வாட்ஸ் ஆப்ல இருக்கியா? என்று கேட்டவர்கள் அண்மைக்காலமாக டிக்டாக்ல இருக்கியா? ஹலோ ஆப்ல இருக்கியா? என்றே கேட்கிறார்கள்.

அந்தளவுக்கு இன்றைய தலைமுறையும் அந்த மொபைல் ஆப்ஸ்களுக்கு அடிமையாகி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களும் இதிலேயே மூழ்கி கிடந்தனர்.

மேலும் சமீபத்தில் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தி நம் ரானுவ வீர்ர்களை 20 பேரை கொன்றது.

இதனையடுத்து சீனா ஆப்களை தடை செய்ய வேண்டும். சீனா பொருட்களை வாங்கவே கூடாது என மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீனா மொபைல் ஆப்களுக்கு நமது இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 59 செயலிகள் லிஸ்ட் இதோ…

Govt of India bans 59 mobile Apps and other Chinese Apps

Govt of India bans 59 mobile Apps and other Chinese Apps

india ban 59 mobile app

BREAKING தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.; தளர்வுகள் என்ன.?

BREAKING தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.; தளர்வுகள் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt announces Corona Lock down extended till 31st Julyதமிழகத்தில் ஜூலை 31 நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் எதுவுமின்றி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு தொடரும்.

மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம்.

மற்ற விவரங்கள் இதோ…

பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை நீட்டிப்பு- ஆன்லைன் வழிக்கல்விக்கு தடையில்லை .

மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை

மதம் சார்ந்த கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீடிப்பு

சுற்றுலாத் தலங்களுக்கும் தடை நீட்டிப்பு

சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி பெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்.

பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் எந்த நடவடிக்கையும் பலன் தராது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் அவசியம்.

சுற்றுலாத் தலங்களுக்கு வெளியூர் மக்கள் செல்ல தடை நீடிக்கும். வழிபாட்டுத் தலங்கள், மதம்சார்ந்த கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை இருக்கும். மாவட்டங்களுக்கு இடையே சென்று வர இபாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

அந்தந்த மாவட்டங்களுக்குள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படும். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு முடக்கம் தொடரும்.

ஜூலை மாதத்தில் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 15 வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜூலை 6 முதல் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதி.

முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

ஜூலை 6 முதல் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.

ஜூலை 6 முதல் உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

TN Govt announces Corona Lock down extended till 31st July

என் படங்களில் போலீசை பெருமைப்படுத்தியதற்காக வேதனைப்படுகிறேன்.. – ஹரி

என் படங்களில் போலீசை பெருமைப்படுத்தியதற்காக வேதனைப்படுகிறேன்.. – ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Director Hari regrets glorifying Police in his films விக்ரம் நடித்த சாமி, சாமி2… சூர்யா நடித்த சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3… உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஹரி.

மேற்க்கண்ட படங்களில் படத்தின் நாயகன் போலீசாக நடித்திருப்பார்.

எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் ரவுடிகளுக்கும் நேர்மையற்ற போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அடிபணிவதில்லை என கம்பீரமாக காட்டியிருப்பார் டைரக்டர் ஹரி.

ஆனால் இன்று அவரே இந்த படங்களை எடுத்தமைக்காக வேதனைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது…

சாத்தான்குளம் சம்பவம் ஜெயராஜ் பெனிக்ஸ் உயிரிழப்பு போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது.

அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….

காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …

காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…

இவ்வாறு திரைப்பட இயக்குனர் G.ஹரி தெரிவித்துள்ளார்.

Director Hari regrets glorifying Police in his films

BREAKING ஜெயராஜ் பெனிக்ஸ் குடும்பத்தாருடன் ரஜினி-கமல் போனில் பேச்சு

BREAKING ஜெயராஜ் பெனிக்ஸ் குடும்பத்தாருடன் ரஜினி-கமல் போனில் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal and Rajini spoke to Jayaraj and Fenix family at Sathankulamதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின் போது கடை திறந்தமைக்காக போலீஸார் தாக்கியதில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்தை கண்டித்து வருகின்றனர்.

நீதித்துறை அந்த போலீசாருக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ஜெயராஜின் மனைவி, மகளிடம் பேசிய அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இத்தகவலை கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ரஜினியை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஜெயராஜின் மனைவி, மகளிடம் பேசியுள்ளார். அவர்களிடம் ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும் தன் மநீம சார்பாக அதன் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே போலீசாரின் தாக்குதலை கண்டித்து கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அந்த செய்தியை நம் தளத்தில் நீங்கள் படித்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

திமுக சார்பில் நடிகர் உதயநிதி நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal and Rajini spoke to Jayaraj and Fenix family at Sathankulam

கடமை மீறல்.. திட்டமிடப்பட்ட குற்றம்.. அதிகார அத்துமீறல்‌; சூர்யா ஆவேசம்

கடமை மீறல்.. திட்டமிடப்பட்ட குற்றம்.. அதிகார அத்துமீறல்‌; சூர்யா ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriya slams TN Police in Sathankulam murder caseசாத்தான்குளம் பகுதியில் போலீசாரின் கொடூரமான தாக்குதலில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் (தந்தை மகன்) என இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை கண்டித்து ‘அதிகார அத்துமீறல்‌’ முடிவுக்கு வரவேண்டும்‌ என சூர்யா ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதோ…

‘மன்னிக்க முடியாத குற்றங்களைச்‌ செய்தவர்களுக்குகூட மரண தண்டனை கூடாது’ என்று மனித உரிமை அமைப்புகள்‌ வலியுறுத்துகின்றன.

சாத்தான்‌குளம்‌ காவல்‌ நிலையத்தில்‌, இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம்‌ ஏற்படுத்தும்‌ அளவிற்கு நிகழ்ந்த போலீஸாரின்‌ ‘லாக்கப்‌ அத்துமீறல்‌’ காவல்‌ துறையின்‌ மாண்பை குறைக்கும்‌ செயல்‌.

‘இது ஏதோ ஒரு இடத்தில்‌ தவறி நடந்த சம்பவம்‌’ என்று கடந்து செல்ல முடியாது. போலீஸாரால்‌ கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்‌தை ஜெயராஜ்‌, மகன்‌ பென்னிக்ஸ்‌ இருவரையும்‌ அரசு மருத்துவர்‌ பரிசோதனை செய்து, ‘நலமாக இருப்பதாக’ சான்று அளித்திருக்கிறார்‌.

நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ நிலையை பரிசோதிக்காமல்‌, ‘இயந்திர கதியில்‌’ சிறையில்‌ அடைக்க உத்தரவிட்டுள்ளார்‌.

சிறையில்‌ நடத்தப்பட வேண்டிய சோதனைகளும்‌ முறையாக நடக்கவில்லை. இத்தகைய ‘கடமை மீறல்‌’ செயல்கள்‌, ஒரு குடிமகனின்‌ உரிமையில்‌ நம்‌ ‘அதிகார அமைப்புகள்‌’ காட்டும்‌ அலட்‌சியத்தை வெளிச்சம்‌ போட்டு காட்டுகின்றன.

அதனால்‌ இதுபோன்ற ‘துயர மரணங்கள்‌’ ஒரு வகையான ‘திட்டமிடப்பட்ட குற்றமாக’ (Organised Crime) நடக்கிறது.

ஒருவேளை இருவரின்‌ மரணம்‌ நிகழாமல்‌ போயிருந்தால்‌, போலீஸாரின்‌ இந்தக்‌ கொடூர தாக்குதல்‌ நம்‌ கவனம்‌ பெறாமலேயே போயிருக்கும்‌. பாதிக்கப்பட்டவர்கள்‌ சிறையிலிருந்து வெளியே வந்தாலும்‌, ‘போலீஸாரை எதிர்த்தால்‌ என்ன நடக்கும்‌’ என்பதற்கான வாழும்‌ சாட்சியாகி இருப்பார்கள்‌.

தங்கள்‌ மரணத்தின்‌ மூலம்‌ தந்தை மகன்‌ இருவரும்‌ இந்தச்‌ சமூகத்தின்‌ மனச்சாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்‌. இந்த கொடூர மரணத்தில்‌, தங்களுடைய கடமையை செய்யத்‌ தவறிய அனைவரும்‌ நீதியின்‌ முன்‌ நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்‌.

உயர்‌ நீதிமன்றம்‌ தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும்‌ என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

இதேபோல, ‘தவறு செய்கிறவர்கள்‌ யாராக இருந்தாலும்‌ தண்டனையில்‌ இருந்து தப்பிக்க முடியாது’ என்கிற நம்பிக்கையை அரசாங்கமும்‌, நீதி அமைப்புகளும்‌ மக்களிடம்‌ உருவாக்க வேண்டும்‌.

மாறாக, நமது ‘அதிகார அமைப்புகள்‌’ அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன. இரண்டு அப்பாவிகளின்‌ மரணத்திற்குப்‌ பிறகும்‌, உடனடியாக எடுக்கப்படுகிற நடவடிக்கை, சம்பந்தப்பட்ட போலீஸாரை ‘ஆயுதபடைக்கு’ மாற்றம்‌ செய்வது மட்டுமே.

ஆயுதப்படையில்‌ பணியாற்றுவது என்பது, ‘தண்டனை கால பணியாக’ பொதுமக்கள்‌ மத்தியில்‌ ஒரு பிம்பத்தை இது உருவாக்குகிறது.

‘இரண்டு உயிர்‌ போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான்‌ தண்டனையா?’ என்று எழுந்த விமர்சனத்துற்குப்‌ பிறகே, சம்பந்தப்பட்ட போலீஸார்‌ ‘பணியிடை நீக்கம்‌’ செய்யப்பட்டனர்‌.

காவல்துறையில்‌ அர்ப்பணிப்புடன்‌ தன்‌ கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில்‌ நன்கு அறிவேன்‌. ஓட்டு மொத்த நாடும்‌ இயங்க முடியாமல்‌ ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும்‌ ஓய்வில்லாமல்‌ மக்களின்‌ நலனுக்காக காவல்துறையினர்‌ உழைக்கின்றனர்‌.

‘கரோனா யுத்தத்தில்‌’ களத்தில்‌ முன்‌ வரிசையில்‌ நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன்‌.

அதேநேரம்‌, அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும்‌ காவல்துறையினருக்கு எனது கடும்‌ கண்டனங்கள்‌.

அதிகார அத்துமீறல்‌ வன்முறையால்‌ ஒருபோதும்‌ மக்களின்‌ மனதை வெல்ல முடியாது. அன்பும்‌, அக்கறையும்‌ கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின்‌ மனதில்‌ நிலைத்து நிற்கிறார்கள்‌.

ஒரே நேரத்தில்‌ இரண்டு உயிர்கள்‌ பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும்‌, மகனையும்‌ இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின்‌ துயரத்தில்‌ நானும்‌ பங்கெடுத்துக்‌ கொள்கிறேன்‌.

இனிமேலும்‌ இதுபோன்ற ‘அதிகார வன்முறைகள்‌’ காவல்துறையில்‌ நிகழாமல்‌ தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும்‌, நீதிமன்றமும்‌, பொறுப்பு மிக்க காவல்‌ அதிகாரிகளும்‌ ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்‌.

குற்றம்‌ இழைத்தவர்களும்‌, அதற்கு துணை போனவர்களும்‌ விரைவாக தண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநிறுத்தப்படும்‌’ என்று பொதுமக்களில்‌ ஒருவனாக நானும்‌ காத்திருக்கிறேன்..

அன்புடன்
சூர்யா

Actor Suriya slams TN Police in Sathankulam murder case

டாக்டர் திவ்யா சத்யராஜின் புதிய இயக்கம்..; இது ஆரோக்கிய கட்சி.!

டாக்டர் திவ்யா சத்யராஜின் புதிய இயக்கம்..; இது ஆரோக்கிய கட்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IMG-20200628-WA0089நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்‌ என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இவர் உலகின்‌ மிக பெரிய மதிய உணவுத்‌ திட்டமான அக்ஷய பாத்ராவின்‌ விளம்பரத்‌ தூதுவர் ஆவார்‌.

சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ துறையில்‌ நடக்கும்‌ முறைக்கேடுகளை பற்றியும்‌ நீட் தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா பிரதமருக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைத்தளங்களில்‌ வைரலானது.

அரசு மருத்துவமனைக்கு வரும்‌ கர்பிணிப்‌ பெண்களுக்கு உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும்‌ என்று சுகாதார அமைச்சரிடம்‌ கோரிக்கையும் விடுத்திருந்தார்‌.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்‌ இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று திவ்யா சமீபத்தில்‌ விவசாய அமைச்சரிடம்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

திவ்யா சத்யராஜ்‌ ஊட்டச்சத்து துறையில்‌ செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகம்‌ அவருக்கு டாக்டா்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. டாக்டா்‌ பட்டம்‌ பெற்றவர்களை கெளரவிக்க அமெரிக்காவில்‌ நடைபெறவிருந்த விழா கோவிட்‌ 19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சர்வதேச தமிழ்‌ பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ நிறுவனர்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமார்‌ அவர்களுக்கு என்‌ நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்‌.

நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால்‌ கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான்‌ சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார்‌.

ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்கு தான்‌ என்பது நியாயம்‌ கிடையாது. தமிழ்‌ நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌” என்று திவ்யா சொல்கிறார்‌.

More Articles
Follows