சூட்டிங் இல்லேன்னாலும் பகத் பாசிலுக்காக ஸ்பாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி

சூட்டிங் இல்லேன்னாலும் பகத் பாசிலுக்காக ஸ்பாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and fahadh faasilசிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டியவர் மலையாள நடிகர் பஹத் பாசில்.

இவர் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து வருகிறார்.

இதில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் பஹத் பாசில் கேரக்டர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவே இல்லை.

தற்போது பஹத் பாசில் நடிப்பை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் விஜய்சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் பட சூட்டிங் சமயத்தில் தனக்கான காட்சிகள் இல்லை என்றாலும் பஹத் பாசிலின் நடிப்பை பார்ப்பதற்காகவே ஸ்பாட்டுக்கு செல்கிறாராம் இந்த மக்கள் செல்வன்.

அடுத்த பட வில்லன் யார்..? சஸ்பென்ஸ் வைக்கும் ராஜமௌலி

அடுத்த பட வில்லன் யார்..? சஸ்பென்ஸ் வைக்கும் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SS Rajamouliபாகுபலி படத்தின் 2 பாகங்களை முடித்து விட்டு ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் ராஜமௌலி.

பாகுபலி ஏற்படுத்திய எதிர்பார்ப்பினால் இவரது அடுத்த படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இவருடைய அடுத்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நடிக்கின்றனர்.

பொதுவாக ராஜமௌலி படங்களில் ஹீரோவுக்கு இணையாக வில்லனும் பேசப்படுவார்.

ஆனால் புதிய படத்தின் வில்லன் யார்? என்பதை ராஜமௌலி இன்னும் அறிவிக்கவில்லை.

நவம்பர் 3வது வாரத்தில் சூட்டிங்கை தொடங்கவுள்ளதாகவும் அப்போது வில்லனை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த படத்தை இயக்கி தயாரித்து நடிக்கும் *ஜீனியஸ்* ஹீரோ

அடுத்த படத்தை இயக்கி தயாரித்து நடிக்கும் *ஜீனியஸ்* ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

genius hero roshanசுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஜீனியஸ்’ படம் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி வெளியானது.

இதில் ரோஷன் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகி இப்படத்தை தயாரித்தார்.

ரூ. 4.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடையவில்லை.

இந்நிலையில் மீண்டும் தானே ஹீரோவாக நடித்து ஒரு படத்தை தயாரித்து இயக்கப் போகிறாராம் ரோஷன்.

ஜீனியஸ் படத்துக்கு முன்பே ரோஷன் நடித்த ஒரு படம் பல வருடங்களாக முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்; சன் டிவிக்கு ஒரு படம்!

5 படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்; சன் டிவிக்கு ஒரு படம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan committed 5 films and One movie for Sun picturesசீமராஜா படத்தை முடித்து விட்டு ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைக்கிறார். (SK13)

இதனையடுத்து 24ஏஎம். ஸ்டூடீயோஸ் தயாரிக்கும் படத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். (SK14)

இந்த படங்களை முடித்துவிட்டு மீண்டும் 24ஏஎம். ஸ்டூடீயோஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இரும்புத்திரை டைரக்டர் மித்ரன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். (SK15)

இதனையடுத்து சன் டிவி தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனை அஜித்தின் ஆஸ்தான டைரக்டர் விஸ்வாசம் சிவா இயக்கவுள்ளார். (SK16)

இந்த படங்களை அடுத்து சிவா நடிப்பில் உருவாகவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளாராம். (SK17)

Sivakarthikeyan committed 5 films and One movie for Sun pictures

தளபதியுடன் மோதும் தல ரசிகர் ஆர்.கே.சுரேஷின் பீஃலிங் வீடியோ

தளபதியுடன் மோதும் தல ரசிகர் ஆர்.கே.சுரேஷின் பீஃலிங் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh talks about Sarkar and Billa Pandi clash on Diwaliமுருகதாஸ் வசனம் எழுதி இயக்கியுள்ள விஜய்யின் சர்கார் திரைப்படம் தீபாவளியன்று ரிலீஸாகிறது.

இதே நாளில் விமல் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை திரைப்படம் வெளியாகவுள்ளது.

மேலும் அஜித் ரசிகராக RK சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படமும் திரைக்கு வருகிறது.

இதில் இடம் பெற்ற எங்க தல சிங்கம் பாடலையும் அனைவரும் கலாய்த்தனர்.

மேலும் சமீபத்தில் வெளியான பில்லா பாண்டி பட ட்ரைலரும் நெகட்டிவ் விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக நடிகர் RK சுரேஷ் ஒரு வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். அதில்…

“பில்லா பாண்டி படத்திற்காக பல பேர் நிறைய உழைத்துள்ளோம். அதற்கு ரசிகர்கள் ஆதரவு தரவேண்டும்.

நிறைய பிரச்சினைகளை தாண்டி இந்த படத்தை எடுத்துள்ளோம். 56 படம் பண்ணியிருக்கேன். 21 படங்களில் நடித்திருக்கிறேன். இதில் நடிகராக மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன்.

சர்கார் பெரிய படம்தான். அத்துடன் எங்கள் படமும் வருகிறது.

கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ட்ரைலர் கட் செய்து வெளியிட்டோம்.

நாங்கள் நினைத்திருந்தால் நல்ல இரண்டு மூன்று சீன்களை எடுத்து போட்டு வெளியிட்டு மக்களை கவர்ந்திருக்கலாம்.

ஆனால் அதில் உடன்பாடில்லை.” என RK சுரேஷ் உருக்கமாக பேசியுள்ளார்.

RK Suresh talks about Sarkar and Billa Pandi clash on Diwali

*சர்கார்* டிக்கெட்டை அதிக ரேட்டுக்கு விற்றால் தியேட்டர் லைசன்ஸ் ரத்து

*சர்கார்* டிக்கெட்டை அதிக ரேட்டுக்கு விற்றால் தியேட்டர் லைசன்ஸ் ரத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madurai High court order in Sarkar movie ticket rate issueசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளியன்று ரிலீஸாகவுள்ளது.

படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், டிக்கெட் புக்கிங்கு ஆன்லைனில் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.

எனவே இஷ்டத்துக்கு தியேட்டர்காரர்கள் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உசிலம்பட்டி மகேந்திரபாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இம்மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.

மதுரை கலெக்டர் நடராஜன் தாக்கல் செய்த அறிக்கையில், நவ.,6 முதல் 13 வரை திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கண்காணிக்க தணிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது, என குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் கூடுதல் தகவலுக்காக விசாரணையை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சர்கார் படம் தொடர்பாக மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்.

சர்கார் திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Madurai High court order in Sarkar movie ticket rate issue

More Articles
Follows