மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா டூயட்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா டூயட்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayanthara romance with Sivakarthikeyan in Rajesh directionபொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை அடுத்து எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ரவிக்குமார் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

முக்கிய வேடத்தில் சதீஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பே நாம் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017 வருடம் வெளியான வேலைக்காரன் படத்திலும் இந்த ஜோடி டூயட் பாடியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nayanthara romance with Sivakarthikeyan in Rajesh direction

ஓவியாவுக்காக சிம்புவின் காதல் கடிக்குதே..

ஓவியாவுக்காக சிம்புவின் காதல் கடிக்குதே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu and Oviyas new movie 90ML updatesமணிரத்னம் தயாரித்து இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண் விஜய் ஆகியோருடன் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, மற்றொரு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் சிம்பு.

ஓவியா முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இப்படத்திற்கு ‘90 எம்.எல்’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்துக்காக ‘காதல் கடிக்குதே…’ என்ற பாடல் உள்பட 4 பாடல்களுக்கு இசையமைத்து காத்திருக்கிறாராம் சிம்பு.

Simbu and Oviyas new movie 90ML updates

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துடன் கனெக்ட்டான டிராபிக் ராமசாமி

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துடன் கனெக்ட்டான டிராபிக் ராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Connection between Iruttu Araiyil Murattu Kuththu movie and Traffic Ramasamyடிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் மே 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார்.

படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது…

“டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி.

அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது.

துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன்.

இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்.” என்று பாராட்டி வாழ்த்தினார்.

இப்படத்தில் கதை நாயகனாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார்.

இப்படத்தை புதுமுக இயக்குநர் விக்கி இயக்கியுள்ளார்.

பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர் .

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மற்றுமொரு பிரபல நடிகரும் சிறப்பு வேடத்தில் வருகிறார்கள்.

படத்தின் ஒளிப்பதிவை குகன் எஸ். பழனி கவனிக்கிறார்.

இப்படத்தின் இசையை ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ புகழ் பாலமுரளி பாலு அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

எடிட்டிங் பிரபாகர், கலை ஏ.வனராஜ், சண்டைக் காட்சி – அன்பறிவு, கிரீன் சிக்னல் இப்படத்தை தயாரித்துள்ளது.

Connection between Iruttu Araiyil Murattu Kuththu movie and Traffic Ramasamy

sagayam IAS

விஷாலின் இரும்பு திரை-யை திரையிட முடியாமல் தவிக்கும் பிரபலம்

விஷாலின் இரும்பு திரை-யை திரையிட முடியாமல் தவிக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irumbu thiraiவிஷால் தயாரித்து நடித்துள்ள மே 11 அன்று வெளியாக உள்ள படம் *இரும்பு திரை*.

அதை வெளியிட முடியாமல் அப்படத்தை தமிழக வெளியீட்டு உரிமை வாங்கியுள்ள ஸ்ரீதரன் தவிப்பதாக கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக விநியோகஸ்தர் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பி.டி.செல்வகுமார் கூறுகையில்..

இப்படத்தை வெளியிடாமல் தடுப்பது சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி மற்றும் பெடரேஷன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அருள்பதி மிரட்டியதற்கான ஆதார ஆடியோ அவர்களிடம் உள்ளதாகவும், அதை தமிழக காவல் துறை, சி.பி.ஐ போலீஸ் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நியாயம் வேண்டி புகார் கொடுப்பதோடு வழக்கும் தொடர போவதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.

மேலும் நாளை மே 9ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இது சம்பந்தமாக சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜாக்கி ஷெராப்பை அகோரியாக மாற்றிய கஸ்தூரி ராஜா

ஜாக்கி ஷெராப்பை அகோரியாக மாற்றிய கஸ்தூரி ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandi Muni movie stillsதனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு ‘பாண்டி முனி’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முனி என்கிற அகோரி வேடத்தில் நடிக்க, புதுமுக நடிகையான மேகாலி பாண்டி என்ற வேடத்திலும் நடிக்கிறார்.

மற்றும் இன்னொரு நாயகியாக நிகிஷா பட்டேல், பெராரே, சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கஸ்தூரி ராஜா இயக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

இப்படம் பற்றி இயக்குனர் கஸ்தூரி ராஜா கூறும்போது,

இது நான் இயக்கும் வித்தியாசமான படம். இரு வரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.

காலா இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் யார்..?

காலா இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala audio launchகாலா படத்தின் ஆடியோ வெளியீட்டை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் வெளியிட உள்ளனர்.

தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு மிகப் பெரிய அளவில் ரஜினி நடத்தும் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி 10 ஆயிரம் பேருக்கு “ரஜினி மக்கள் மன்றம்” அழைப்பிதழும், விழா நுழைவு அனுமதி அட்டையையும் அனுப்பி வைத்துள்ளது.

இந்த 10 ஆயிரம் பேரில் 7,500 பேர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வருகிறார்கள். சென்னையை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு அதிக பட்சமாக 2,500 அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

காலா பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு இருப்பது, ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக கொள்ள போவதும் ரஜினியும் அவரது ரசிகர்களும்தான். அவர்களைத் தவிர வேறு யார்? இருக்க போகிறார்கள்.?

More Articles
Follows