தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா திரைப்படம் கடந்த செப். 13ல் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது.
தற்போது ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் சிவாவின் ஆஸ்தான தயாரிப்பாளர் 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர். டி. ராஜா தயாரிக்கிறார்.
இந்நிலையில் சிவாவின் அடுத்த படத்தையும் சீமராஜா தயாரிப்பாளரே தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இப்படத்தை இரும்புத்திரை டைரக்டர் பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இது 15வது படமாக உருவாகவுள்ளது.
இதுவும் இரும்புத்திரை போல் பக்கா விறுவிறுப்பான சோஷியல் மெசேஜ் உள்ள படமாக உருவாகவுள்ளதாம்.
Sivakarthikeyan 15th film will be directed by Mithran and produced by RD Raja