தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.
இப்படத்திற்கு யுவன் இசையமைக்க, சிம்பு இதில் மூன்று வேடம் ஏற்கிறார்.
இதுவரை ஸ்ரேயா மற்றும் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கேரக்டருக்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமைக்கு ரூ. 25 கோடி வரை பேசப்பட்டு வருகிறதாம்.
இதுவரை சிம்பு படங்கள் இந்த விலைக்கு விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வருடம் காதலர் தினத்தை (பிப்ரவரி 14) குறிவைத்து இப்படம் தயாராகி வருகிறது.