FilmiStreet செய்தி எதிரொலி… இரண்டு பாகங்களாக ரிலீஸாகும் சிம்பு படம்

FilmiStreet செய்தி எதிரொலி… இரண்டு பாகங்களாக ரிலீஸாகும் சிம்பு படம்

simbu in aaa movieசிம்பு, தமன்னா, ஸ்ரேயா, சனாகான், நீது சந்திரா, மகத், விடிவி கணேஷ், ராஜேந்திரன், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

யுவன் இசையமைக்க, மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதை பார்த்தோம். அதன்படி சற்றுமுன் இதன் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியை தெரிவித்துள்ளனர்.

இது ரம்ஜான் ஸ்பெஷலாக ஜீன் 23ஆம் தேதி வெளியாகிறதாம்.

இப்படத்தில் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய இரண்டு கேரக்டர்கள் மட்டும் இடம் பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் சிம்பு 4 வேடங்கள் ஏற்றுள்ளதால், மற்ற கேரக்டர்கள் அடுத்த பாகத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

Simbu movie Anbanavan Adangadhavan Asaradhavan will be release in two parts

அட்லி இயக்கும் விஜய் பட டைட்டில் குறித்த ஹாட் நியூஸ்

அட்லி இயக்கும் விஜய் பட டைட்டில் குறித்த ஹாட் நியூஸ்

vijay 61 stillsஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் 3 வேடங்களில் விஜய் நடித்து வருகிறார்.

அட்லி இயக்கி வரும் இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, எஸ்ஜே சூர்யா ஆகிய பிரபலங்களுடன் சமந்தா, காஜல், நித்யா உள்ளிட்ட நாயகிகள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் தலைப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதால், மூன்றுமுகம், தளபதி ஆகிய தலைப்புகளில் ஏதேனும் வைக்கப்படலாம் என செய்திகள் வந்தன.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளதாவது…….

தளபதி 61 படத்தின் டைட்டில் நிச்சயம் 3 மடங்கு மாஸாக இருக்கும் எனவும்
விரைவில் டைட்டில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதுவரை வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாகுபலி-வடசென்னை உடன் கனெக்ட்டாகும் சிம்புவின் சஸ்பென்ஸ்.?

பாகுபலி-வடசென்னை உடன் கனெக்ட்டாகும் சிம்புவின் சஸ்பென்ஸ்.?

Anbanavan_Asaradhavan_Adangadhavan_posterஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 4 வேடங்களில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இந்நிலையில் சற்றுமுன், ஒரு சர்ப்ரைஸ் செய்தி சொல்ல காத்திருக்கிறோம் என இயக்குனர் ட்வீட் பதிவிட்டதை பார்த்தோம்.

இந்த ட்வீட்டை நன்றாக படித்தால் புரியும் என சிம்புவும் ட்வீட் செய்திருந்தார்.

Adhik Ravichandran‏ @Adhikravi 8m8 minutes ago
1 #AAA super special announcement 2 come,on the way.Any guess ? @iam_str SirappuO #Sirappu

STR‏Verified account @iam_str
Replying to @Adhikravi
May be those who read the tweet properly can kinda guess the news !!! #Excited

இயக்குனரின் ட்வீட்டில் 1 மற்றும் 2 என்ற எண்கள் உள்ளது.

ஒருவேளை இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்குமோ? என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இதில் சிம்பு 4 வேடங்களில் நடித்துவருவதால், அதுபோல் அமைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கலாம்.

பாகுபலி படம் உருவாகும்போதே இரண்டு பாகங்களாக உருவாகியது.

அதுபோல் தனுஷ் நடித்துவரும் வடசென்னை படம் உருவாகும்போதே 3 பாகங்களாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Simbu Adhik Ravichandran movie AAA has two parts

எத்தனை நாட்கள்; எத்தனை இடங்கள்.. ‘விவேகம்’ ரவுண்ட்-அப்

எத்தனை நாட்கள்; எத்தனை இடங்கள்.. ‘விவேகம்’ ரவுண்ட்-அப்

Ajiths Vivegam teaser and release news updatesசிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கு எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப படத்தின் ஸ்டில்கள் ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை அசத்தி வருகின்றனர் படக்குழுவினர்.

இப்படத்தின் டீசரை அஜித் பிறந்தநாளில் அதாவது மே 1ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

வருகிற மே 10ஆம் தேதி இதன் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 2ஆம் தேதி இப்படம் தொடங்கியது.

இதனையடுத்து, பல்கேரியா, ஆஸ்திரியா, செர்பியா, கிரோடியா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இதன் சூட்டிங் நடைபெற்றுள்ளது.

அதாவது கிட்டதட்ட 150 நாட்கள் இதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் இயக்குனர் சிவா.

இவ்வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Ajiths Vivegam teaser and release news updates

‘சிறப்போ சிறப்பு…’ சிம்பு ரசிகர்களை குழப்பிய ஆதிக் ரவிச்சந்திரன்

‘சிறப்போ சிறப்பு…’ சிம்பு ரசிகர்களை குழப்பிய ஆதிக் ரவிச்சந்திரன்

Exciting announcement will be coming soon from AAA movie teamஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 4 வேடங்களில் சிம்பு நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.

இப்படத்தில் உள்ள இரண்டு கேரக்டர்களின் டீசர் இதுவரை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சற்றுமுன், இப்படம் தொடர்பான ஓர் அறிவிப்பை வெளியிட்டு, யோசிக்க வைத்துவிட்டார் இயக்குனர்.

விரைவில் ஒரு சூப்பர் ஸ்பெஷலான ஒன்றை அறிவிக்க இருக்கிறோம். சிறப்போ சிறப்பு. என்று தெரிவித்துள்ளார்.

இதை படிப்பவர்களுக்கு புரியும் என சிம்புவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரசிகர்கள்தான் என்னவாக இருக்கும் என புரியாமல் குழம்பி போயுள்ளனர்.

Exciting announcement will be coming soon from AAA movie team

Adhik Ravichandran‏ @Adhikravi 8m8 minutes ago
1 #AAA super special announcement 2 come,on the way.Any guess ? @iam_str SirappuO #Sirappu
STR‏Verified account @iam_str
Replying to @Adhikravi
May be those who read the tweet properly can kinda guess the news !!! #Excited

‘பாகுபலி’க்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது

‘பாகுபலி’க்கு ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது

All issues solved Baahubali 2 set to release on 28th April 2017பாகுபலி-2க்கு தடை கோரிய வழக்கில் இருதரப்பும் சமாதானம் ஆனதால் படத்திற்கான சிக்கல் தீர்ந்ததோடு, படம் ரிலீஸாவதற்கான தடை நீங்கியது.

இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பிரமாண்ட படம் ‛பாகுபலி-2. பாகுபலி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் ரிலீஸாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் 5000-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்சன் நிறுவனம் வெளியிடுகிறது.இந்நிலையில் பாகுபலி 2 படத்தை வெளியிட தடை கோரி ஏசிஇ நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் கடந்தவாரம் வழக்கு தொடர்ந்தது.

அதில், ஸ்ரீகிரீன் புரொடக்ஷ்ன் நிறுவனத்தின் சரவணன் என்பவர் பாகுபலி-2 படத்திற்காக தன்னிடம் ரூ.1.8 கோடி கடன் வாங்கியிருந்தாகவும், படம் வெளியீட்டிற்கு முன்பாக ரூ.10 லட்சம் சேர்த்து மொத்த பணத்தையும் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சிக்கிறார். ஆகவே, எங்கள் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தாவிடில் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்தவாரம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு தடை விதிக்க முடியாது, இதுதொடர்பாக விநியோகஸ்தர் சரவணன் வருகிற 18-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி, வழக்கை ஏப்., 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதன்படி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரும் பேசி சமாதானம் செய்து கொள்வதாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதோடு பட ரிலீஸில் இருந்த சிக்கலும் தீர்ந்தது.

இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு இந்த பிரச்சனை சுமுகமாக தீர்த்து வைத்தது.

All issues solved Baahubali 2 set to release on 28th April 2017

More Articles
Follows