தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அமெரிக்கா மற்றும் மலேசியாவில் ஆவண படங்களை எடுத்திருக்கும் நரேந்திர மூர்த்தி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
சேகர் ஜி புரோடக்ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் இந்த புதிய படம் டார்க் காமெடி கதையம்சத்தில் உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் சத்யராஜ், வெற்றி எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, சச்சு, பிராத்தனா, ஐரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘கோடியில் ஒருவன்’ மற்றும் ‘குரங்கு பொம்மை’ படங்களில் பணியாற்றிய ஆர்.உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இவர் முன்னதாக அசுரன், வடசென்னை மற்றும் விடுதலை போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். நிர்வாக தயாரிப்பை செந்தில் குமார் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.
முழு வீச்சில் இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
Sathyraj Vettri Ms Baskar Kovai Sarala teams up for dark comedy