விஷால் ராஜினாமா செய்யணும்; பாரதிராஜா-டிஆர்-ராதாரவி போர்க்கொடி

actor vishalநடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவியேற்ற விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

ஆனால் சங்கத் தலைவர் என்ற முறையில் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி, அவர் பதவி விலக வேண்டும் என தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பாக பாரதிராஜா, டி.ராஜந்தர், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அவர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

45 நாட்களாக தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடந்தது. இதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை, தனது இரும்புத்திரை படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் மட்டுமே இருந்திருக்கிறார்.

அந்த படத்துக்கு 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் கிடைத்துள்ளது.

மற்றவர்களது படங்களுக்கு 200 தியேட்டர்கள் கூட கிடைப்பதில்லை.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துடன் விஷால் டீல் பேசியிருக்கிறார்.

சொன்ன வாக்குறுதிகளை அவர் ஓராண்டில் நிறைவேற்ற வில்லை என்றால் பதவி விலகுவேன் என்றார்.2 ஆண்டுகள் ஆகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றி, தமிழ் நடிகர்கள் சங்கம் என பெயர் வைக்க வேண்டும்.

புதிதாக சங்கத் தேர்தல் நடத்தி தமிழர்களை நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும்.” என்றனர்.

Overall Rating : Not available

Latest Post