சூர்யா தயாரிப்பில் கார்த்தியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

சூர்யா தயாரிப்பில் கார்த்தியுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi keerthy sureshஇரும்புத்திரை படத்தை தொடர்ந்து மித்ரன் இயக்கவுள்ள படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர் என்றும் அதில் முக்கிய கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் ஜோடியாக நடிப்பது இதுதான் முதன்முறையாகும்.

மற்றொரு நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி படத்திற்கு ரஞ்சித்தை போல கூட்டம் சேர்க்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினி படத்திற்கு ரஞ்சித்தை போல கூட்டம் சேர்க்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

deepak rameshஅட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என இரண்டு படங்களை இயக்கினார் ரஞ்சித்.

இதனையடுத்து இந்திய சினிமாவே எதிர்பாராத வகையில் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்தது.

எனவே தன் இரண்டு படங்களில் பணியாற்றிய தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பாதி பேரை கபாலி படத்தில் சேர்த்தார்.

தற்போது அதே வரிசையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள கார்த்திக் சுப்பராஜீம் செயல்படுவதாக தெரிகிறது.

அவரின் தான் இயக்கிய ஆஸ்தான கலைஞர்களை ஒவ்வொருவாராக சேர்த்து வருகிறார்.

விஜய்சேதுபதி மற்றும் பாபி சிம்ஹாவை முதலில் சேர்த்தார்.

தற்போது பிரபுதேவாவை வைத்து தான் இயக்கிய மெர்குரி படத்தில் நடித்த தீபக் பரமேஷ் என்பவரையும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்.

கமல்-ஷங்கரின் இந்தியன்2 படத்தில் பிரபல ஹிந்தி நடிகர்.?

கமல்-ஷங்கரின் இந்தியன்2 படத்தில் பிரபல ஹிந்தி நடிகர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajay devganஒரு பக்கம் அரசியல் மறுபக்கம் சினிமா என படு பிஸியாக இருக்கிறார் கமல்ஹாசன்.

விரைவில் இவர் ஷங்கர் இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் சூட்டிங்கை ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளனர்.

முதல் பாகம் இந்தியளவில் பேசப்பட்டதால் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் ஷங்கர்.

எனவே ஹிந்தி சினிமாவில் பிரபலமான அஜய் தேவ்கானை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.

கயல் சந்திரன்-அஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

கயல் சந்திரன்-அஞ்சனா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kayal Chandran and VJ Anjana blessed with a Boy babyடிவி ஆங்கர் அஞ்சனாவுக்கு பிரபல நடிகைகள் போல ரசிகர்கள் அதிகம்.

இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தாலும் மறுத்துவிட்டு டிவியிலே தொடர்ந்தார். ஒரு பக்கம் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கயல் பட நாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

அதன்பின்னர் டிவியில் இருந்து விலகுவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் அஞ்சனாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து அவரது கணவர் சந்திரன், தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளதாவது…

“அஞ்சனாவும் நானும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், குழந்தையும் நலம். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Kayal Chandran and VJ Anjana blessed with a Boy baby

சிறப்பான முறையில் சிவகார்த்திகேயனின் *சீமராஜா* வியாபாரம்!

சிறப்பான முறையில் சிவகார்த்திகேயனின் *சீமராஜா* வியாபாரம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans SeemaRaja trade news updates24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர். டி. ராஜா தயாரித்துள்ள படம் சீமராஜா.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தை வருகிற விநாயக சதுர்த்தி பண்டிகை அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரத்தையும் முடித்துவிட்டனர்.

இதன் சென்னை ஏரியா உரிமையை சத்யம் சினிமாஸின் எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

வட ஆற்காடு, தென்ஆற்காடு ஏரியாக்களை ஜி.ஸ்ரீனிவாசனின் ‘எஸ்.பிக்சர்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் செண்பகமூர்த்தியின் எம்.எஸ்.எம்.மூவி டிரேடர்ஸ் உடன் இணைந்து ’24 ஏ.எம்.ஸ்டுடியோ’ நிறுவனம் வெளியிடுகிறது.

சேலம் ஏரியாவை ‘ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ்’ நிறுவனமும், கோயம்பத்தூர் ஏரியாவை மன்னாரின் ‘கந்தசாமி ஆர்ட்ஸ்’ நிறுவனமும் வாங்கியுள்ளன.

மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் தம்பி அழகர் வாங்கியுள்ளார். திருநெல்வேலி, கன்னியாகுமரி ஏரியாவை ‘சியோன் பிலிம்ஸ்’ நிறுவனமும், திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவை ‘பாஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனமும் வாங்கியுள்ளன.

Sivakarthikeyans SeemaRaja trade news updates

தனுஷின் விஐபி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தனுஷின் விஐபி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High court judgement in Dhanushs VIP movie story copy right caseவேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த படம் ‘வேலையில்லா பட்டதாரி’.

அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த 2014-ல் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இதன் முதல் பாக கதையையும், பாடல்களையும் காப்பி அடித்து ‘MAHJA NAAV SHIVAJI’ என்ற பெயரில் மராட்டியில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் தனுஷிற்கு தெரியவே தன் அனுமதி பெறாமல் எடுத்த தயாரிப்பாளர் மீது, காப்பிரைட் சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் ‘MAHJA NAAV SHIVAJI’ என்ற திரைப்படம் தனுஷின் ‘வேலையில்லா பட்டத்தாரி’ படத்தின் அபட்டமான காப்பி என்பதை உறுதி செய்துள்ளது.

மேலும் தனுஷுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

எனவே விரைவில் அவருக்கு கணிசமான தொகை நஷ்டஈடாக கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

High court judgement in Dhanushs VIP movie story copy right case

More Articles
Follows