குழந்தை கையில செல்போனை கொடுத்துடுறாங்க.. ‘பிக்பாஸ்’ கேம் கூட பிரச்சினைதான்… – வனிதா

குழந்தை கையில செல்போனை கொடுத்துடுறாங்க.. ‘பிக்பாஸ்’ கேம் கூட பிரச்சினைதான்… – வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசோக் & ராகினி நடிப்பில் எஸ் ஆர் ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இ-மெயில்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற

*நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது…

“இந்த தலைப்பிற்கு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. இமெயில் என்றாலே இன்று எல்லோருக்கும் தெரியும். இந்தப்படம் ஒரு கேமை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பது தெரிகிறது. கேம் என்றாலே பிரச்சினைதான். அது பிக்பாஸ் கேமாக இருந்தாலும் சரி, போனில் இருக்கும் கேமாக இருந்தாலும் சரி எந்த கேமாக இருந்தாலும் அதில் நிச்சயமாக நமது மனது ஈடுபடத்தான் செய்யும். நாம் என்னதான் விளையாட்டிற்குள் சென்றாலும் கூட நமது மனதை பாதுகாப்பாக தற்காத்து வைக்க வேண்டும். ஆனால் அது இந்தக்கால தலைமுறையினரிடம் மிகவும் குறைவாக இருக்கிறது.

பிறந்த குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கு நம்மை விட எல்லாமே அதிகமாக தெரிகிறது. எனது மூன்று வயது மகள் கூட மொபைல் மூலமாக ஆன்லைனில் பணம் கட்டும் அளவிற்கு வளர்ந்து விட்டாள். அதேசமயம் குழந்தைகளுக்கு எதை எவ்வளவு சொல்லிக் கொடுக்க வேண்டும், எதில் அவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதை பெரியவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த படத்தில் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று கூறினார்.

*இமெயில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ்.ஆர் ராஜன் பேசும்போது,* “இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். இதில் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் எல்லாமே இருக்கிறது. இரண்டு பாடல்கள், மூன்று சண்டை காட்சிகள் உள்ளது. மும்பை, கோவா, தமிழ்நாடு, கர்நாடகா, பாண்டிச்சேரி என ஐந்து மாநிலங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி உள்ளேன். இந்த படம் ஒரு ஆன்லைன் கேம் மோசடி பற்றிய கதை” என்று கூறினார்.

Online games at Biggboss task is issue says Vanitha Vijayakumar

‘இ-மெயில்’ படத்திற்காக ஜாக்கிசான் ஸ்டைல் ஃபைட்.. என் காது கிழிஞ்சிட்டு… – அசோக்

‘இ-மெயில்’ படத்திற்காக ஜாக்கிசான் ஸ்டைல் ஃபைட்.. என் காது கிழிஞ்சிட்டு… – அசோக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார்.

இரண்டாவது நாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.

இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பல இன்னும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் *படத்தின் இரண்டாவது நாயகன் ஆதவ் பாலாஜி பேசும்போது,*

“இன்று சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. சங்கத்தில் உறுப்பினராக ஆனாலும் கூட என்னை போன்றவர்களை ஒதுக்கி தான் பார்க்கிறார்கள்.

என்னுடைய முதல் படம் மெய் நன்றாக இருந்தும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்த படத்தில் தயாரிப்பாளராக இருந்து இயக்குநராகி இருக்கும் எஸ்.ஆர் ராஜன் இந்த படத்தின் கதை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறார். இவர் வெற்றி பெற்றால் இன்னும் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினார்.

*சமூக சொற்பொழிவாளர் முகிலன் பேசும்போது…

“இந்த படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் சொல்லாடல்கள் சரியாக இருக்கின்றன. இந்த தலைப்பு வைத்ததன் மூலம் இன்றைய இளைய தலைமுறைக்கு இந்த கதை போய் சேரவேண்டும் என்பதில் இயக்குனர் எஸ்.ஆர் ராஜன் கவனமாக இருக்கிறார்” என்று கூறினார்.

*“தயாரிப்பாளரும் இயக்குனருமான மதுராஜ் பேசும்போது,*

“படம் துவங்கும்போது தயாரிப்பாளர் எஸ்.ஆர் ராஜனுடன் நிறைய பேர் கூடவே இருந்தார்கள். ஆனால் படம் முடியும்போது அவர் தனி மரமாக இருந்ததை நான் கண்கூடாக பார்த்தேன். இந்த படத்தை பார்த்தபோது சொல்ல வந்ததை சரியாக சொல்லியிருக்கிறார் என்பது தெரிகிறது.

அரசியலுக்கு பேச்சாற்றல் எப்படியோ அதுபோல திரையுலகுக்கு எழுத்தாற்றல் முக்கியம். அது இயக்குநர் எஸ் ஆர் ராஜனிடம் நிறையவே இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

*நடிகை வனிதாஸ்ரீ பேசும்போது,*

“இதுதான் எனக்கு முதல் படம். இந்த படத்தில் நடிகர் மனோபாலாவுடன் இணைந்து நடித்துள்ளேன். இந்த படம் எனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்,

*நடிகை கோமல் சர்மா பேசும்போது,*

“தொழில்நுட்பம் தற்போது வளர்ந்து விட்டது ரொம்ப நல்ல விஷயம் தான். யூட்யூப் மூலமாக கல்வியில் கூட நிறைய பாடங்களை நாம் கற்றுக் கொள்ள முடியும். மனித இனத்திற்கு தொழில்நுட்பம் நிறைய நல்லது செய்திருந்தாலும் இன்றைய இளைஞர்கள் பலர் ஆன்லைன் விளையாட்டுக்களில் பொழுதை கழிக்கின்றனர். மைதானங்களுக்கு சென்று சக நண்பர்களுடன் விளையாடி பொழுதை கழிப்பது இப்போது குறைந்துவிட்டது. தொழில்நுட்பத்தை இன்றைய இளைஞர்கள் நல்லபடியாக பயன்படுத்தினால் நிறைய கல்பனா சாவ்லாக்கள், அப்துல் கலாம்கள் உருவாவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் எஸ்.ஆர் ராஜன் இன்றைக்கு தேவையான ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்” என்று கூறினார்.

*நாயகன் அசோக் குமார் பேசும்போது…

“இந்தப் படத்தின் முதுகெலும்பு என்றால் அது இயக்குநர் எஸ்.ஆர் ராஜன் ஒருவர் தான். இமெயில் என்றால் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவற்ற மையப்படுத்தி ஒரு அழகான திரைக்கதையை நிறைய திருப்பங்களுடன் அவர் அமைத்துள்ளார்.

இந்த படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக ஜாக்கிசான் மற்றும் குங்பூ படங்களிலிருந்து குறிப்புகளை எடுத்து வடிவமைத்தார்கள். நேபாளத்திலிருந்து வந்த பீர் மாஸ்டர் என்பவர் இந்த சண்டை பயிற்சியை கவனித்தார். சண்டையின்போது எனது காது கிழிந்து விட்டது. மக்களிடம் இந்த படம் போய் சேரும்போது அந்த வலியெல்லாம் பெரிதாக தெரியாது.

இயக்குநர் ராஜனின் இந்த துணிச்சலுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

We have Jackiechan style fight at Email movie says Ashok

Broadway Cinemas நவீன வசதிகளுடன் 9+ மேற்பட்ட திரையரங்குகள் ஆரம்பம்

Broadway Cinemas நவீன வசதிகளுடன் 9+ மேற்பட்ட திரையரங்குகள் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்திலேயே மிகப்பெரிய மிக நவீன வசதிகளுடன் கூடிய, திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.

இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இனைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது.

ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்த்துப் பிரமித்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, திரையரங்க உரிமையாளர் சதீஷ்குமார் அவர்களை சந்தித்து, பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மேனேஜர் சுப்பு உடனிருந்தார்.

Broadway Cinemas

Broadway Cinemas launched at Coimbatore

தமிழில் என் முதல் படம் ‘மெரி கிறிஸ்மஸ்’.. மதுரையில் என் அம்மா வேலை பார்த்தாங்க… – கத்ரீனா கைஃப்

தமிழில் என் முதல் படம் ‘மெரி கிறிஸ்மஸ்’.. மதுரையில் என் அம்மா வேலை பார்த்தாங்க… – கத்ரீனா கைஃப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சேதுபதி & கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் ‘மேரி கிறிஸ்மஸ்’.

இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியாகிறது.

இது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
நடிகை கத்ரீனா கைஃப் பேசுகையில்…

” சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது. ஏனெனில் என்னுடைய தாயார் ஒன்பது வருடங்கள் மதுரையில் ஆசிரியையாக பணியாற்றினார். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் மிகவும் உற்சாகமடைந்தேன். முதன் முதலில் தமிழில் அறிமுகமாகிறோம்.

அதுவும் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீராம் ராகவனுடன் இணைந்து உருவாக்கும் படத்தில் நடிக்கிறோம். இதற்கு முன் மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தமிழில் முதல் முதலாக நடித்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.

இந்தப் படத்திற்காக நடைபெற்ற ஒர்க் ஷாப்பில் விஜய் சேதுபதியும், நானும் கலந்து கொண்டோம். அதுவும் நல்ல அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி சில தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொடுத்தார் அதில் ‘ரொம்ப கஷ்டமாக இருந்தது’ என்ற வார்த்தையை பேசுவேன். படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய தமிழ் உச்சரிப்புக்கு நடிகை தீபா வெங்கட் உதவி செய்தார்” என்றார்.

பாடலாசிரியர் யுக பாரதி பேசுகையில்…

,’மாடர்ன் லவ் சென்னை என்ற இணைய தொடரில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுடனும், இளையராஜாவுடனும் பணியாற்றும் போது.. நான் தமிழ் திரையுலகில் இரண்டாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியிருந்தாலும் அவருடன் இணைந்து பணியாற்றும்போது வித்தியாசமாக இருந்தது. அதன் போது தான் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இந்தி திரைப்படத்தில் பணியாற்றுகிறீர்களா? என கேட்டார். அப்போது எனக்கு ஹிந்தி தெரியாதே..! என்று சொன்னேன். அப்போது அந்த திரைப்படம் தமிழிலும் உருவாகிறது என்று சொல்லி இயக்குநர் ஸ்ரீராம் ராகவனை பற்றி விவரித்தார்.

அவரது இயக்கத்தில் வெளியான ‘பட்லாபூர்’ மற்றும் ‘அந்தாதூன்’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அவளுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்த போது, தியாகராஜன் தியாகராஜாவிடம் ஸ்ரீராம் ராகவனுக்கு தமிழ் தெரியுமா? என கேட்டேன். அதன் பிறகு அவர், என்னை அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தப் படத்தில் பணியாற்றும்போது வழக்கமானதை போல் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. விஜய் சேதுபதி சொன்னது போல் ஸ்ரீராம் ராகவன் அனைவரையும் முதலில் மனதளவில் தயார்ப்படுத்தி விடுவார்.

இந்தப் படத்தின் காட்சிகளை படமாக்கிய பிறகு பாடல்களை எழுதத் தொடங்கினோம். அவர் படத்தை முழுவதுமாக திரையிட்டு காட்டி விட்டு.. இந்தெந்த இடங்களில் பாடல்கள் வரலாம் என எண்ணியிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக் கேட்டதுடன், இந்த சூழலில் தமிழ் படத்தில் இதற்கு முன் என்னென்ன பாடல்கள் வந்திருக்கிறது என்ற காணொளி தொகுப்பையும் காண்பித்தார். அவை அனைத்தும் தமிழில் வெற்றி பெற்ற படங்களில் இடம்பெற்ற ஹிட்டான பாடல்கள். அதுவரை எனக்கு பாடலுக்கான மெட்டு தெரியாது.

அதன் பிறகு அந்த மெட்டை கேட்க விட்டு.. இந்தெந்த இடங்களில் இந்த கருத்துக்களை சொல்லலாமா.. அல்லது என்ன சொல்லலாம்? என்பதை யோசியுங்கள். அதன் பிறகு எழுதலாம் என்றார்.

அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் புதிதாக இருந்தது. எனக்கு பணியாற்றுவதற்கு நிறைய நேரம் கிடைத்தது.

அதிலும் ஆய்வு பூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுத வேண்டியதிருந்தது. நான் தமிழில் எழுதி அனுப்பியதை அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பர். அதன் பிறகு என்னிடம் சில சந்தேகங்களை கேட்பார். அந்த சந்தேகங்கள் அனைத்தும் இந்தப் பாடலில் எளிமை இடம்பெற வேண்டும் என்பதாக இருந்தது.

மெட்டுக்கள் இந்தியில் இருந்தது. எந்த பாடலும் அந்த மெட்டுக்கு ஏற்ப எழுதாமல் தமிழ் சூழலுக்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டது.

அதன் பிறகு பாடல் பதிவின்போதும் என்னை அழைத்து, மொழி உச்சரிப்பு குறித்த திருத்தத்தை மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கினர்.

இதற்காக இசையமைப்பாளர் பிரீத்தம் அவர்களுக்கும், இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் மற்றும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

My mom worked at Madurai says Bollywood Actress Katrina Kaif

‘மெரி கிறிஸ்மஸ்’ கதை கேட்டேன் எனக்கு பயம் எட்டி பார்த்தது.. – விஜய்சேதுபதி

‘மெரி கிறிஸ்மஸ்’ கதை கேட்டேன் எனக்கு பயம் எட்டி பார்த்தது.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘மெரி கிறிஸ்மஸ்’.

இதில் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார்.

தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.
இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி, நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சண்முகராஜன், நடிகர் கவின் பாபு, பாடலாசிரியர் யுகபாரதி, பின்னணி குரல் கலைஞர் தீபா வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் பேசுகையில்…

” இந்த திரைப்படத்தைத் தொடங்கும் போது இந்தியில் மட்டும் இயக்குவது என்றும், விஜய் சேதுபதியை இந்தியில் அறிமுகப்படுத்தலாம் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்தது.

மும்பையில் இருந்தாலும் தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணமும், கனவும் இருந்தது. அது ஏன் இந்த படமாக இருக்கக் கூடாது..! என்று சிந்தித்தேன். விஜய் சேதுபதியை வைத்து எப்போதாவது ஒரு தமிழ் படத்தை இயக்க வேண்டும் என்ற திட்டமும் இருந்தது. இப்படத்தினை தொடங்கும் போது கோவிட் காலகட்டமாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் என்னுடைய நண்பரான இயக்குநர் தியாகராஜன் குமாராஜாவை சந்தித்தேன். அவர் மும்பை வந்திருந்தபோதும் சந்தித்து உரையாடினோம். இந்த கதையை தமிழிலும் உருவாக்கலாமே..! என அவர் கேட்டார். அதற்கு நான் தமிழ் மொழி மீதான ஆளுமை எனக்கு இல்லை என்றேன். அதற்கு அவர் நான் உதவி செய்கிறேன் என்று சொல்லி எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் இதனை உருவாக்கலாம் என்று திட்டமிட்டோம். திட்ட மிட்டபடி சற்று கடினமாக உழைத்து இப்படத்தை தமிழிலும், இந்தியிலும் உருவாக்கி இருக்கிறோம்.

நானும் நிறைய தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன். தற்போது அனைத்து தமிழ் படங்களும் மும்பையிலும் வெளியாகிறது. இதனால் என்னுடைய படங்களும் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களது கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கிடையே மராத்தி மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்ற கனவும் இருக்கிறது.

மெல்பெர்னில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் நானும் விஜய் சேதுபதியும் சந்தித்து பேசினோம். அவருக்கு ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக அவர் விருதினை பெற்றார்.

என்னுடைய இயக்கத்தில் வெளியான படத்தில் நடித்த தபுவிற்கும் விருது கிடைத்தது. ஐந்து நிமிட சந்திப்பிலேயே நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அந்த தருணத்தில் இந்த திரைப்படத்தில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க கத்ரீனா கைஃப் மட்டுமே உறுதியாகி இருந்தார். விஜய் சேதுபதியை சந்தித்த பிறகு மும்பைக்கு திரும்பி, என்னுடைய குழுவினருடன் விஜய் சேதுபதி குறித்தும், விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விவாதித்தோம். அனைவருமே இந்த ஜோடி குறித்து வியப்புடன் சம்மதம் தெரிவித்தனர். அதன் பிறகு தான் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்தனர்” என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில்,…

‘ எனக்கு இந்தப் பட வாய்ப்பு கிடைத்தது கூட ஆச்சரியமாக இருக்கிறது. சில தருணங்களில் நம்முடைய வாழ்க்கையில் சொல்லாமல் கொள்ளாமல் சில விசயங்கள் நடைபெறுவதுண்டு. அது போன்றது தான் ஸ்ரீராம் ராகவனின் சந்திப்பு. மெல்பெர்னில் சந்தித்தோம்.

பிறகு மும்பையில் இருந்து காணொளியில் பேசுவார். அவருடைய சிறப்பம்சமே காணொளி வாயிலான உரையாடலை வீடியோவாக எடுத்து அனுப்புவது தான்.

அவரது இயக்கத்தில் உருவான முதல் படம் ‘ஏக் ஹசீனா தி’. அது 2004 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளன்று வெளியானது. அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் ஸ்ரீராம் ராகவன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார். படம் நன்றாக இருக்கிறது. பார் என்றார்.

நான் அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது இவரது இயக்கத்தில் நாம் நடிக்க முடியுமா? என்று எண்ணினேன். அதன் பிறகு ஐநாக்சில் அவர் இயக்கத்தில் வெளியான ‘பட்லாபூர்’ எனும் திரைப்படத்தை பார்த்தேன். அந்த படமும் எனக்கு பிடித்திருந்தது.

அதன் பிறகு என்னை சந்தித்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதையை சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது செப்டம்பர் மாதம் நடந்தது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. எனக்குள் சிறிய பயம் எட்டிப் பார்த்தது. பிறகு தயாரிப்பாளர் சஞ்சய் அவர்களை தொடர்பு கொண்டு.. ஜனவரி மாதம் என்னுடைய பிறந்தநாள் வருகிறது. அப்போது ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? என கேட்டேன். உடனே அவர்கள் சரி என்று ஒப்புக் கொண்டார்கள். அதன் பிறகு சற்று நம்பிக்கை வந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்தது.. பேச்சுவார்த்தை நடத்தியது.. அவரது அலுவலகத்தில் அமர்ந்து பல விசயங்களை உரையாடியது.. அனைத்து சந்திப்பின் போதும் எனக்கு ஒரு நடிகனுக்கான சுதந்திரத்தை நிறையக் கொடுத்தார். படப்பிடிப்பு தளத்தில் எங்களிடமிருந்து அவர் வேலை வாங்குவது சௌகரியமானதாக இருக்கும். அவருடன் செலவிடும் நிமிடங்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து அவரது உதவியாளரும், கதாசிரியரும், பட தொகுப்பாளருமான பூஜா மேடம். அவர்கள் ஒரு காட்சிக்கு என்ன தேவை என்பதற்கு எளிமையாக விளக்கம் கொடுப்பதும் வியப்பைத் தரும்.

கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் சிறு ஆச்சரியம். அவர் நம்மை விட சீனியர் ஆர்டிஸ்ட்.

இரண்டு தசாப்தங்களாக திரைத்துறையில் இருக்கிறார்.. என்ற பயமும் இருந்தது. படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்ததும் அவருக்கான காட்சி குறித்த விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினார். அவர் அந்த சூழலை மிகவும் இயல்பாக சௌகரியமாக மாற்றினார்.

இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் கவின் பாபு கூத்துபட்டறையில் பயிற்சி பெற்றவர். அவரும் நன்றாக நடித்திருக்கிறார்.

நான் துபாயில் மூன்றாண்டு காலம் பணியாற்றிய போது தான் முதன் முதலாக இந்தியை என்னுடைய பாஸ் பேச கேட்டிருக்கிறேன். அதில் பிறகு சின்ன சின்ன வார்த்தைகளை பேசி இருக்கிறேன். அதன் பிறகு இந்தி பேசி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘ஃபார்ஸி’ படத்தில் பணியாற்றும்போது இந்தி பேசுவதற்கு கஷ்டமாக இருந்தது. அதன் பிறகு சற்று சரளமாக பேசத் தொடங்கினேன். இந்த படத்தில் நான் தான் இந்தி பேசியிருக்கிறேன். அது எப்படி பேசி இருக்கிறேன் என்பதை படம் வெளியான பிறகு தான் தெரிய வரும்.

பணியாற்றும் இடத்தில்தான் மொழிகளுக்கு ஏற்ற ஒலி இருக்கும். அதை கேட்டு பேசுவதில் மட்டும் தான் வேறுபாடு இருக்கும், மற்ற அனைத்தும் ஒன்றுதான். தற்போது டிஜிட்டல் தளங்கள் வந்துவிட்ட பிறகு மொழிகளுக்கு இடையே எந்த சுவரும் இல்லை.

இந்த திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி அன்று வெளியாகிறது. இப்படத்தை நாங்கள் அனைவரும் பார்த்து விட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.

விஜய்சேதுபதி

Vijay Sethupathi shares his experience of Merry Christmas movie

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை ‘மிஷன் சாப்டர்1’ ஆக மாற்றிய லைக்கா

அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை ‘மிஷன் சாப்டர்1’ ஆக மாற்றிய லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மிஷன் சாப்டர்1’ ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

நடிகர் பரத் கோபன்னா பேசியதாவது…

“இந்தப் படம் வெளியாகும் நாளுக்காகதான் இத்தனை நாள் காத்திருந்தேன். தமிழில் எனக்கு இது முதல் படம். எனக்கு இந்த சந்தோஷத்தைக் கொடுத்த விஜய் சாருக்கு நன்றி.

அருண் விஜய் சார் போல கடினமாக உழைத்த யாரையும் நான் பார்த்ததில்லை. இந்தப் படத்தில் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். படம் ஜனவரி 12 அன்று வெளியாகிறது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் அபிஹாசன்…

“படம் ஜனவரி 12 அன்று வெளியாகிறது. உங்களைப் போலவே நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். விஜய் சார் ஆஃபிஸூக்கு சும்மா போனேன். அவர் என்னைப் படத்தில் நடிக்க வைத்து விட்டார். வாய்ப்புக்கு நன்றி விஜய் சார். படத்தில் யாருக்கும் என்னை அடையாளம் தெரியாது என நினைக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள் “.

நடிகர் நாசர்…

“இந்தப் படம் உருவாக முக்கிய மூலகாரணம் விஜய். நான் மதிக்கிற சில இயக்குநர்களில் விஜயும் ஒருவர். இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதனால் அவர் மீது தனி மரியாதை உண்டு.

இந்த இளம் தலைமுறை மீது எனக்கு பெரிய நம்பிக்கை உண்டு. புதிது புதிதாக எதையாவது முயற்சி செய்வார்கள். அதே சமயம் அவர்களைப் பார்த்து எனக்கு பயமும் உண்டு.

ஏமி ஜாக்சன் இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை அற்புதமாக செய்துள்ளார். படத்திற்காக லண்டன் ஜெயில் செட் அற்புதமாக செய்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ், ஆண்டனி என சிறப்பான தொழில்நுட்பக் குழு உள்ளது. உங்களைப் போலவே நானும் படத்திற்காக காத்திருக்கிறேன். ஆக்‌ஷன் என்பதையும் தாண்டி படத்தில் அழகான எமோஷன் உள்ளது. தியேட்டரில் படம் பாருங்கள்”.

குழந்தை நட்சத்திரம் இயல், “அருண் விஜய் அங்கிள், விஜய் அங்கிள் ரொம்ப தேங்க்ஸ். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. லண்டன், சென்னையில் ஷூட் செய்தோம்”.

காணொலி வாயிலாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது….

“லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் சாப்டர்1’ படத்தின் புரோமோஷன் நடக்கிறது. படத்திற்கு வாழ்த்துகள். அங்கு விழாவில் நானும் இருக்க வேண்டியது.

ஆனால், முக்கிய வேலையாக இங்கு ஊருக்கு வந்திருக்கிறேன். அதனால், வரமுடியவில்லை. நிச்சயம் விழாவை மிஸ் செய்வேன். படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். படம் நிச்சயம் பெரிய வெற்றிப் பெறும்” என்றார்.

இயக்குநர் விஜய்…

“விழாவிற்கு வந்ததற்காக நாசர் சாருக்கு நன்றி. மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது. படம் உருவாகக் காரணமாக இருந்த ராஜசேகர் சாருக்கு நன்றி.

லைகா உள்ளே வந்ததும் படம் இன்னும் பெரிதானது. நான்கு மொழிகளில் வெளியிட வேண்டும் எனச் சொல்லி ‘அச்சம் என்பது இல்லையே’ என்பதை ‘மிஷன் சாப்டர்1’ ஆக மாற்றினார்கள். அருண் விஜய் கரியரில் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் இது.

இந்தப் படம் எமோஷனலாக எனக்கு முக்கியமானது. ஏமிக்கு கோவிட் என்பதால் வர முடியவில்லை. சரிதா, ஷோபா போல நிமிஷாவும் முக்கியமான நடிகை. ‘மிஷன் சாப்டர்1’ படம் ஷூட்டிங்காக லண்டன் சென்றபோது அங்கு குயின் இறந்துவிட்டார். அதனால், அதிகம் ஷூட் செய்ய முடியவில்லை.

பின்புதான் சென்னையில் செட் போட்டோம். பல பிரச்சினைகள் தாண்டிதான் இந்தப் படம் உருவானது. இயலும் ஜிவி பிரகாஷூம் இந்தப் படத்தின் ஆன்மா. இயலுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. படத்தைத் தாண்டி எனக்கும் ஜிவிக்கும் நல்ல நட்பு உள்ளது.

விழாவிற்கு அவர் இன்று வரமுடியாத ஒரு சூழல். அவர் சார்பாக எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் மொத்தக் குழுவுக்கும் நன்றி. பொங்கலுக்கு என் படம் வருவது இதுவே முதல் முறை. ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’, ‘மெரி கிறிஸ்துமஸ்’ என பொங்கலுக்கு வரும் எல்லாப் படங்களும் வெற்றிப் பெற வேண்டும்”.

காணொலி வாயிலாக கலந்து கொண்ட நடிகை ஏமி ஜாக்சன்…

” இந்த வாய்ப்புக் கொடுத்த லைகா புரொடக்சன்ஸ், விஜய் சாருக்கு நன்றி. அருண் விஜய் சாருடன் ஆக்‌ஷன் காட்சிகள் செய்தது எனக்கு மகிழ்ச்சி. கோவையில் நடக்கும் பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை சீக்கிரம் சந்திக்கிறேன்”.

நடிகர் அருண் விஜய்…

“விழாவிற்கு வந்திருக்கும் நாசர் சாருக்கு நன்றி. என் அப்பாவைப் போலதான் இவரையும் பார்க்கிறேன். பண்டிகைக்கு வரும் என்னுடைய முதல் படம் ‘மிஷன் சாப்டர் 1’ என்பதால் இது எனக்கு இன்னும் ஸ்பெஷல். விஜய் சார் சொன்னது போல இந்தப் படப்பிடிப்பின் போது மழை, செட் சேதமானது என நிறைய சவால்களை சந்தித்தோம்.

லண்டன் சிறையை போல இங்கு நாலரை ஏக்கரில் பிரம்மாண்ட செட் அற்புதமாக உருவாக்கினார்கள். ஆர்ட் டிரைக்டருக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

எல்லா பார்வையாளர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். வேறு மாதிரியான ஒரு ஆக்‌ஷனை இதில் முயற்சி செய்திருக்கிறோம். என்னை வேறு மாதிரி இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். டிரெய்லரில் பார்க்காத பல எமோஷன் படத்தில் இருக்கிறது. ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

மிஷன்- சாப்டர்1

Arun Vijay starring Mission Chapter 1 Pre Release event highlights

More Articles
Follows