தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன், சமந்தா மற்றும் பலர் நடித்து தமிழில் வெளியான படம் ‘இரும்புத்திரை’.
தமிழ் ரசிகர்களால் இப்படம் பெரிதும் பாராட்டப்பட்டது.
இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.
தெலுங்கில் நேரடியாக வெளியான ‘ஆபீசர், ராஜு காடு’ ஆகிய படங்களை விட ‘அபிமன்யுடு’ படத்தின் ஓபனிங் சிறப்பாக இருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘ஆபீசர்’ படத்தை ராம்கோபால் வர்மா இயக்க நாகார்ஜுனா நாயகனாக நடித்துள்ளார்.
‘ராஜு காடு’ படத்தில் ராஜ் தருண், அமைரா தஸ்தூர் நடித்திருந்தனர்.
அண்மை காலமாக தமிழில் விஷாலுக்கு வெற்றிப் படங்கள் அமையவில்லை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வசூல் படமாக ‘இரும்புத்திரை’ அமைந்தது போல தெலுங்கிலும் ‘அபிமன்யுடு’ படம் நல்ல வசூலைப் பெறும் எனத் தெரிகிறது.
Vishals Abhimanyudu get good collections in Telugu Industry