தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால், சமந்தா நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படம் தெலுங்கிலும் ரிலீஸாகி வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த ஆண்டில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது அவர்களுக்கு ஒத்துழைப்பு தரும்விதமாக திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் சார்பாக ஒரு ரூபாய் தொகையை விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் என்று விஷால் தெரிவித்தார்.
ஆனால் இங்கே தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அப்போது பல விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த விஷால் அதை இங்கே அமல்படுத்த முனைப்பு காட்டவில்லை.
தற்போது தெலுங்கில் ரிலீஸாகி ஓடி வரும் தனது ‘இரும்புத்திரை’ படத்திற்கு விற்பனையாகும் டிக்கெட் ஒன்றிற்கு ரூபாய் 1 வீதம் தெலுங்கு விவசாயிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.