மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷால்; திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டி?

Actor Vishal convert his fans club into Makkal Nala Iyakkamதயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பன் முகம் கொண்ட நடிகர் விஷால் இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இவர் தயாரித்து நடித்த இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் இயக்குனர் மித்ரன், அர்ஜீன், சமந்தா, ரோபோ சங்கர் ஆகியோருடன் பல திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இவர்களுடன் டைரக்டர் எஸ்ஏ. சந்திரசேகர், லிங்குசாமி, ஆர். கே. செல்வமணி, தயாரிப்பாளர் பிடி. செல்வகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விஷாலை வாழ்த்தினர்.

இவ்விழாவில் விஷால் பேசும்போது…

இரும்புத் திரை சூட்டிங்கின் போது நான் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்தேன். ஆனால் அதில் நான் போட்டியிடக் கூடாது என இயக்குநர் மித்ரன் வேண்டிக் கொண்டார்.

அவருடைய வேண்டுதல் நிறைவேறி விட்டது.

விரைவில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதில் நான் போட்டியிட வாய்புள்ளது என்றார்.

மேலும் இன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கி தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார் விஷால்.

`அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடியையும் இந்தக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் அவர் பேசியதாவது…

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதே அரசியலாகும். நான் வணங்கும் இரண்டு தெய்வங்கள் அன்னை தெரசா, அப்துல்கலாம்.

அப்துல் கலாமை பார்க்கும்போது அறிவு ஞாபகம் வரும். அன்னை தெரசாவைப் பார்க்கும்போது அன்பு நினைவுக்கு வரும்.

வீதியில் நடக்கும் பிரச்னையைப் பார்த்து கேள்விகேட்காவிட்டால் பிணத்துக்குச் சமம். நம் நாட்டில் கொத்தடிமைகள் இன்னும் உள்ளார்கள்.

சோதனைகளைத் தாண்டி சாதனைகள் செய்யும்போது சந்தோஷம் ஏற்படும். என்னுடைய சந்தோஷத்தையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளவே வேண்டும்.

அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிட்டது. நடிகனாக சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது.

நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகளே. அரசியல் என்பது மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதுதான். எனக்குச் சொந்தமாக இருப்பதெல்லாம் ரசிகர்களாகிய நீங்கள்தான்.” என்று ரசிகர்கள் முன்னிலையில் பரபரப்பாக பேசினார்.

Actor Vishal convert his fans club into Makkal Nala Iyakkam

Overall Rating : Not available

Related News

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம்…
...Read More
இரும்புத்திரை படத்தை தொடர்ந்து மித்ரன் இயக்கவுள்ள…
...Read More
விஷால் தயாரித்து நடித்த இரும்புத்திரை படம்…
...Read More

Latest Post