மலையாளிகளிடம் தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ளனும்.; ‘என் சுவாசமே’ பட விழாவில் பிரபலங்கள் பேச்சு

மலையாளிகளிடம் தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக் கொள்ளனும்.; ‘என் சுவாசமே’ பட விழாவில் பிரபலங்கள் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SVKA Movies சார்பில் சஞ்சய் குமார், S அர்ஜூன் குமார், S ஜனனி ஆகியோர் தயாரிப்பில் இயக்குநர் R மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘என் சுவாசமே’.

விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் பேசியதாவது..

நான் பாடலாசிரியாக பணியாற்றிய 3வது திரைப்படம் இது. இசையமைப்பாளர் பிஜே அவர்களுக்கு என் நன்றிகள். பல வருடங்களாக திரையில் இருக்கும் அவர் இன்னும் பெரிய இடத்தை அடைய வேண்டும். எனக்கு இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் வாய்ப்புத் தந்துள்ளார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது இந்தத் திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.

மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி பேசியதாவது..

பாடல்கள் எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. இணைத் தயாரிப்பாளர்கள் சேர்ந்து இன்று இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள், அது மூலமே அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. படத்தின் புதுமுகங்கள் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். புதுமுகங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் நன்றி.

பாடலாசிரியர் ஶ்ரீவித்யா பேசியதாவது…

தமிழ்த் திரையுலகில் இப்படம் மூலம் நான் அறிமுகமாகிறேன். நான் கல்லூரிப் பேராசிரியர். பாடலாசிரியர் கிருஷ்ணகுமார் என் நண்பர் அவர் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. இந்திக்கான வரிகள் நான் எழுதியுள்ளேன். தமிழில் எழுதவில்லை என்ற ஏக்கம் இருக்கிறது. பெண்களை அவர்களின் உடலை வெளிகாட்டுவதை, நாங்கள் விரும்புவதில்லை. ஆனால் இன்றைய உலகம் அதை விரும்புகிறது. இப்படத்திற்காக படக்குழுவினர்கள் நன்றாக உழைத்து, விஷுவல்களை உருவாக்கியுள்ளனர். இளமை துள்ளல் படம் முழுக்க தெரிகிறது. படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.

இசையமைப்பாளர் பிஜே பேசியதாவது..

எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும் அதனால் மன்னிக்கவும். தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் வயநாடு ஏரியாவைச் சேர்ந்தவன் அங்கு ரஜினி கமல் படங்கள் தான் அதிகம் ஓடும். இந்தப்படத்தின் வாய்ப்பு எதிர்பாராததது. எனக்கு ராஜா சார், ஏ ஆர் ரஹ்மான் சார் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவர்களால் தான் இசையமைப்பாளர் ஆக ஆசைப்பட்டேன் தமிழக ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

கொலப்பள்ளி லீலா பேசியதாவது…

எனக்கு மலையாளம் மட்டுமே தெரியும். உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும். இந்தப்படத்தின் வாய்ப்பிறக்காக, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். இயக்குநரை எனக்கு நன்கு தெரியும். கடுமையான உழைப்பாளி, அவருக்கு எல்லோரும் நல்ல வாய்ப்புகள் தர வேண்டும். அவர் பெரிய வெற்றிகள் கிடைக்க வேண்டும். இபடத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. எல்லோரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஆதர்ஷ் பேசியதாவது…

எனக்கு தமிழ் கொஞ்சம் மட்டுமே தெரியும். மணி பிரசாத் சார், மற்றும் தயாரிப்பாளர் அனைவருக்கும் என் நன்றிகள். நான் புதுமுகம். உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி.

நடிகை அம்பிகா மோகன் பேசியதாவது..

என் சுவாசமே படத்தில் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சி. தமிழில் இப்படம் மூலம் அறிமுகமாகியுள்ளேன். மணி பிரசாத் சார், மற்றும் தயாரிப்பாளர் உட்பட அனைவருக்கும் நன்றி. ஒரு குடும்பமாக இருந்து, அனைவரும் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

என் சுவாசமே

நடிகர் சாப்ளின் பாலு பேசியதாவது..

ஒரு சின்ன கேரக்டர் தான் நடிக்கப் போனேன், எனக்குப் பெரிய கேரக்டர் தந்து, படம் முழுக்க வரவைத்து விட்டார் இயக்குநர். கஷ்டப்படும் நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் வாய்ப்பு தருகிறேன் என்று தயாரிப்பாளர் சொன்னார், அவர் மனதிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் விஜய் விஷ்வா பேசியதாவது…

என் சுவாசமே இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் முன்னமே பார்த்தேன். மொபைலின் பார்க்கும் போதே அவ்வளவு அழகாக இருந்தது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரையும் கூப்பிட்டு பாராட்டியது மிக மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளப் பேச்சு கேட்க அவ்வளவு அழகாக இருந்தது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சின்னப்படங்கள் வியாபரத்தில் சினிமா சங்கங்கள் உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை, அன்பு இல்லை, உணர்வில்லை, சுவாசம் என்பதே உயிர் வாழ முக்கியம். வாழ்வின் முக்கியம் சுவாசம். என் சுவாசமே என அதை டைட்டிலாக வைத்ததற்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக இப்படம் வெற்றிப் பெறும்.

மலையாளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்திய அளவில் மலையாளக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். கதையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கலைக்கு மொழி கிடையாது. இப்படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..

KULAPPULLI லீலா அம்மா அவர்களுக்கு என் முதல் வணக்கம். நீங்கள் இங்கு வந்தது நிறைவு. என் சுவாசமே டைட்டில் மட்டும் தமிழில் இருக்கிறது மற்றதெல்லாம் மலையாளம் தான். இங்கு யாரும் மொழியைப் பெரிதாக பார்ப்பதில்லை. எல்லோரையும் கொண்டாடுவார்கள்.

மலையாளத்தில் இருந்து கன்னடத்திலிருந்து, இந்தியிலிருந்து எல்லாம் படங்கள் இங்கு ரீமேக் ஆகும். இங்கு நாக்கள் அனைவரையும் கொண்டாடுவோம். என் சுவாசமே படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

பாடத்தின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர், R மணி பிரசாத் கூறியதாவது..

இங்கு எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றிகள். மலையாளப்படங்களை இங்கு கொண்டாடுவது போல தமிழ்படங்களை கேரளத்தில் கொண்டாடுவார்கள். கேரளாவில் தமிழ்படங்களுக்கு பெரிய பிஸினஸ் இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு குறைவான நேரமே இருந்தது. அதனால் தான் மலையாளக் கலைஞர்கள் நிறைய பணியாற்றியுள்ளனர். எனக்காக எல்லோரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். நன்றி.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது..

என் சுவாசமே.. மலையாளத்திலிருந்து படமெடுக்கிறவர்கள் நல்ல தமிழ் டைட்டில் வைக்கிறார்கள் ஆனால் தமிழில் ஆங்கில டைட்டில் வைக்கிறார்கள். எங்கு போனது தமிழ்ப்பற்று. இந்தப்படத்தில் 3 பாடல்கள் போட்டுக்காட்டினார்கள். அத்தனை அற்புதமாக இருந்தது.

இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பது இன்னும் பலம். மலையாள சினிமாவில் எப்பவும் கதைக்காகத் தான் ஹீரோ. ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள் அநாவசிய செலவு செய்ய மாட்டார்கள்,

இங்கு ஏவிஎம்மில் ஷீட்டிங் வைத்தாலும் கேரவன் கேட்கிறார்கள். மம்முட்டி தயாரிப்பாளருக்கு செலவு வைப்பதே இல்லை. அவரே சொந்தமாக கேரவன் வைத்துக்கொண்டுள்ளார். இதையெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவிற்கு கடுமையான சென்சார் கெடுபிடிகள் இருக்கிறது.. ஆனால் வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லை அதில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கிறது. மத்திய அரசு வெப் சீரிஸிற்கும் சென்சார் கொண்டு வர வேண்டும். என் சுவாசமே படத்தை சிறப்பான படமாக கொண்டு வந்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…

மலையாள சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்திருக்கிறார்கள். தமிழகம் எப்போதும் எல்லோரையும் வாழவைக்கும். படத்தின் பாடல்கள் விஷுவல்கள் எல்லாம் மிக நன்றாக வந்திருக்கிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்.

இணை தயாரிப்பாளர் ஶ்ரீதர் கோவிந்தராஜ் பேசியதாவது..

SVKA Movies சார்பில் இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். சஞ்சய் அண்ணா எனக்கும் இயக்குநராக வாய்ப்புத் தந்துள்ளார். அந்தப்படத்திற்கு அடுத்த மாதம் இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. என்னை இணைத் தயாரிப்பாளராகவும் ஆக்கி, அழகு பார்க்கும் சஞ்சய் அண்ணாவிற்கு நன்றி. இயக்குநர் மணி பிரசாத் பற்றி நிறைய சொல்ல வேண்டும். ஷீட்டிங்கின் போது அவரது தம்பி இறந்து விட்டார், ஆனாலும் அவர் மறு நாள் ஷீட்டிங் வந்தார். சினிமா மீது அவ்வளவு அர்ப்பணிப்பு கொண்டவர். இந்தப்படத்திற்காக மொத்தக் குழுவும் கடுமையாக உழைத்துள்ளனர். SVKA Movies சார்பில் தரமான படங்களை தர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் அனைவரும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் இணை தயாரிப்பாளர் ரமேஷ் வெள்ளைதுரை வரவேற்று பொன்னாடை போற்றி சிறப்பு செய்தார்.

என் சுவாசமே

Malayala Actress Leela and Ambika Mohan at En Suvasamae chennai event

கோலிவுடில் எண்ட்ரி கொடுக்கும் கே.ஆர்.ஜி ஸ்டூடியோஸ் & அஞ்சலி மேனன்

கோலிவுடில் எண்ட்ரி கொடுக்கும் கே.ஆர்.ஜி ஸ்டூடியோஸ் & அஞ்சலி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரையுலகில் தடம் பதித்து – ஆற்றல் மிக்க திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமாக விளங்கும் KRG ஸ்டுடியோஸ், தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பை பெருமையுடன் அறிவிக்கிறது.

தனித்துவமான கதைசொல்லும் உத்தியை கையாளும் இயக்குநர் அஞ்சலி மேனனின் முந்தைய படைப்புகளான ‘பெங்களூர் டேஸ்’, ‘மஞ்சாடிக்குரு’, ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘கூடே’ ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் வுமன்’ ஆகிய திரைப்படமும் அனைத்து தரப்பினராலும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனது படைப்புகளில் முத்திரை பதிக்கும் அஞ்சலி மேனன் இம்முறை KRG ஸ்டுடியோஸ் உடன் இனைகிறார், திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்த நிறுவனமான KRG முதல் முறையாக தமிழில் திரைப்பட தயாரிப்பில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், அஞ்சலி மேனனுடன் இணைந்து தனது முதல் படைப்பை தமிழில் எடுப்பதில் உவகை கொள்கிறது,

கன்னட திரைத்துறையிலும் அதற்கு அப்பாலும் கதை சொல்லுதலில் உள்ள இடைவெளிகளைக் குறைக்க கவனம் செலுத்தும் இவ்வேளையில், KRG நிறுவனம், இயக்குனர் அஞ்சலி மேனனின் நேர்த்தியான கதை சொல்லுதலின் மூலம் கதை சொல்லும் மரபை சீரமைக்க உள்ளது.

2017ல் KRG தனது திரைப்பட விநியோக வணிகத்தை தொடங்கி இதுவரை 100ற்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெற்றிகரமாக விநியோகித்து வருகிறது.

மேலும் KRG நிறுவனம் தன்னை ஒரு திரைப்படத்தின் கருவாக்கம் முதல் உருவாக்கம் வரை 2020 முழு நேர தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துக்கொள்கிறது. KRG தனது ஆரம்ப கால வெற்றியை ரோஹித் படக்கி இயக்கத்தில் தனஞ்ஜெய் நடித்து Amazon Primeல் வெளியான “ரத்னன் பிரபன்ஜா” திரைப்படத்தின் மூலம் சூடிக்கொண்டது குறிப்பிடத்தக்கது…

அந்த ஆரவாரமான வெற்றிக்கு பிறகு KRG தனது பயணத்தை 2023 மார்ச் மாதத்தில் வெளியான “குருதேவ் ஹொய்சாலா” மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அஞ்சலி மேனன் மற்றும் வருங்கால இயக்குனர்களுடன் கை கோர்க்க இருக்கும் KRG, தனது நெறியை அனைத்து வகை படங்களின் கதைகளிலும் ஆழ்ந்த உள்ளடக்கம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதை பிரதானமாக கருதுகிறது.

தனது பார்வையை நான்கு தென்னிந்திய மொழிகளிலும் விரிவாக்கம் செய்ய எத்தனிக்கும் KRG, வளர்ந்து வரும் திறமைசாலிகளை ஊக்குவிப்பதுடன், திரையுலகில் தடம் பதித்த கதை சொல்லிகளின் ஒத்துழைப்புடன் தயாரிப்பில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளது. KRG தனது ஒரே இலக்காக கதை சொல்லும் கலையில் கவனம் செலுத்துகிறது.

அஞ்சலி மேனன்

KRG உடன் இனைவது பற்றி அஞ்சலி மேனன் கூறுகையில்…

“KRG ஸ்டுடியோஸ் உடன் இணைய இருக்கும் இவ்வேளையில் மக்களை ஈர்க்க கூடிய வகையில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து உலகத்தரத்தில் படங்கள் எடுப்பதிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளைகளை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத, சிந்தனையைத் தூண்டுகிற அதே சமயம் பொழுது போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டி செல்ல ஆர்வமாக உள்ளோம்” என்றார்

KRG-ன் தயாரிப்பாளரும் இணை நிறுவனருமான கார்த்திக் கவுடா கூறுகையில்…

“அஞ்சலி மேனனுடனான எங்கள் ஒத்துழைப்பு KRG க்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. கதை சொல்லும் நேர்த்தியே பிரதானம் என்றாலும், நாங்கள் சினிமா தன்னுள் வைத்திருக்கும் மாயையை நம்புகிறோம்.

இந்தக் கூட்டாண்மையானது பலதரப்பட்ட பகுதிகளில் சிதறி கிடக்கும் பார்வையாளர்கள் மற்றும் இந்திய மொழிகளில் உள்ள கதைகளை எதிரொலித்து, ஒரு சேர வடிவமைப்பதில் எங்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டும் என நம்புவதாகவும், இந்த பயணம், நானும் எனது அன்பு நண்பரும், அனுபவமிக்க பொழுதுபோக்கு நிர்வாகியுமான விஜய் சுப்ரமணியமும் விவாதிக்கையில் கதை/கருத்து அடிப்படையிலான கதைகள் ஒரு நல்ல திரைப்படமாக உருவெடுத்தால் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் அளவில்லாதது என உணர்கையில் தொடங்கியது.

அவரும் எங்கள் திறனைக் கண்டு எங்களுடன் ஒரு வழிகாட்டியாகவும், இணை தயாரிப்பாளராகவும் ஒத்துழைக்க முடிவு செய்ததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களின் ஒத்தாசையுடன் துல்சியாவை சேர்ந்த சைதன்ய ஹெக்டே போன்றோருடன் கூட்டாண்மைகளை உருவாக்கி, பார்வையாளர்களுக்கு எங்களின் சேவையை சிறப்பானதாகவும் எல்லாவற்றிற்கும் மேலாகவும் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

இந்த ஒத்துழைப்பு சினிமா நிலப்பரப்புகளை மறுவரையறை செய்வது மட்டுமல்லாமல் உள்ளூர் மற்றும் தேசியத் துறைகளில் கதைசொல்லும் உத்தியின் பரிணாம வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று KRG எதிர்பார்க்கிறது. தென்னிந்திய சினிமாவின் எதிர்காலத்தை KRG தொடர்ந்து வடிவமைக்கும் நிலையில், அஞ்சலி மேனனுடனான கூட்டாண்மை தரமான கதையம்சம் மற்றும் புதுமையான காட்சியமைப்பு என அவர்களின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும்.

துல்சியா ஒரு முன்னணி ஊடக மேலாண்மை நிறுவனமாகும், இது இந்தியா மற்றும் சர்வதேச அளவில் முன்னணி எழுத்தாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், .தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

அஞ்சலி மேனன்

KRG Studios and Anjali Menon steps into Kollywood

சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகள்.; இளையராஜா இசை சொல்லும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’

சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகள்.; இளையராஜா இசை சொல்லும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.

இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள் தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜே. பி. தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த திரைப்படத்தை ரியோட்டா மீடியா படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

”கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.

சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

பேரன்பும் பெருங்கோபமும்

ilaiyaraja musical Peranbum Perungobamum

வெங்கட் பிரபு எனக்கு கதை சொல்ல மாட்டார்.; GOAT STORY என்ன.? – வைபவ்

வெங்கட் பிரபு எனக்கு கதை சொல்ல மாட்டார்.; GOAT STORY என்ன.? – வைபவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா, சரஸ்மேனன் நடித்த படம் ரணம்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற

இயக்குநர் ஷெரீஃப் அவர்கள் பேசும் போது…

அனைவருக்கும் என் முதல் வணக்கம். டிரைலர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். கடைசியாக பேசுவதால் என்ன பேச என்று தெரியவில்லை. ஏனென்றால் என்ன பேச நினைத்திருந்தேனோ அதை முன்னாள் வந்தவர்கள் அனைவரும் பேசிவிட்டார்கள். நானும் பாலாஜியும் தான் இப்படத்தை துவங்கினோம்.

வேறொரு படத்தை துவங்கலாம் என்று நினைத்த போது லாக்-டவுன் துவங்கியது. புராஜெக்ட்டும் முடிந்து போனது. வாழ்க்கையில் அடி மேல் அடி.. அப்படி இருக்கும் போது ஒரு செய்தி கண்ணில்பட்டது.. இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இக்கதையை பேசலாம் என்று முடிவு செய்து ஆத்திச்சூடியில் இருக்கும் அரணை மறவேல் என்கின்ற வரிகளை டைட்டிலாக வைத்தோம்.. கருத்து சொல்வது போல் இல்லாமல் நேர்மையாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று விரும்பினோம். நமக்கு மெச்சூரிட்டி வந்தப் பின்னர் வாழ்க்கையில் வாழ்ந்து முடிக்கும் முன்னர் கண்டிப்பாக அறம் தர்மம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு வரும்.

அந்த அறம் தர்மம் என்பது தானம் மட்டுமல்ல; உண்மைக்காக குரல் கொடுப்பது; அநியாயத்தை எதிர்ப்பது. இது எல்லாமே தர்மம் மற்றும் அறம் தான். அதை நாம் யோசிக்காமல் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தியே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோ காலில் தான் கதை சொன்னேன். ஒரு வாரத்தில் ஓகே செய்து அக்ரிமெண்ட் சைன் செய்தேன். இதற்காக தயாரிப்பாளர் மது சார் அவர்களுக்கு நன்றி., வைபவ் சார் கதை கேட்டவுடன் ஒரு இயக்குநர் பேரைச் சொல்லி இது போலவா..? என்று கேட்டார்.

நானும் ஆர்வக் கோளாறில் ஆமாம் என்று சொல்லிவிட்டேன். அவர் தற்போது படம் பார்த்துவிட்டார். அவருக்குப் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவருக்கு நன்றி. கலை இயக்குநர் விழா படத்தில் இருந்தே எனக்கு நல்லப் பழக்கம். அவருக்கும் நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த செல்வம், பாலாஜி, உதய் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் அரோல் கரோலி அவர்களுக்கு நன்றி., அவரின் பின்ணனி இசை பேசப்படும். பிற நடிகர் நடிகைகள் அனைவருக்கும் நன்றி. எங்கள் படம் பற்றி பாசிட்டிவ் ஆக பேசிக் கொண்டிருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி சார் அவர்களுக்கு நன்றி.

பிள்ளைகளின் வெற்றி தான் பெற்றோரின் வெற்றி என்று கருதுகிறேன். ஏனென்றால் பெற்றோருக்கு தனிப்பட்ட வெற்றிகள் என்று ஏதும் கிடையாது. என் மனைவி, என் அம்மா, என் தங்கை என ஒட்டு மொத்தமாக என் குடும்பத்திற்கு மிக்க நன்றி. சில குறிப்பிட்ட இயக்குநர்களிடம் இருந்து வருபவர்கள் தான் சாதிக்க முடியும் என்று தவறான கருத்தாக்கம் இருக்கிறது. அது உண்மை இல்லை பொய் என்று நிருபிக்க விரும்பினோம்,. எங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நாயகன் வைபவ் பேசும் போது,

சக்திவேலன் பேக்டரி சக்தி அவர்களுக்கு மிக்க நன்றி. சரஸ் மேனன் செய்திருக்கும் கதாபாத்திரம் யாருமே செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். ஷெரிஃப் எப்படி சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. தான்யா ஹோப் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு நன்றி.

ஷெரிஃப் பற்றி இப்பொழுது தான் தெரியும். என்னிடம் யாரிடமோ வேலை பார்த்தேன் என்று தான் கூறினார். ஆனால் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். குறும்படம் எடுத்து இப்பொழுது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இயக்குநர்கள் போல் ஷெரிஃப் வருவார். மது சாரை தமிழ் சினிமா உலகிற்கு வரவேற்கிறேன். உதய் என்னிடம் கணவன் மனைவி சண்டை போடுவது போல் சண்டை போடுவார். இன்று கூட ஒரு சண்டை நடந்தது.. ஒளிப்பதிவாளர் பாலாஜி அவர்களுக்கு நன்றி;. அவரின் பெயரை திரையில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவர் மனைவி இன்று உயிரோடு இல்லை. தாஸ் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா…? என்று அனைவரும் வியந்து போய் பார்ப்பார்கள்..
தளபதி படத்தின் கதை எனக்கு என்னவென்று தெரியாது. ஏனென்றால் வெங்கட் பிரபு சரோஜா காலத்தில் இருந்தே எனக்கு கதை சொல்லியது கிடையாது.

ரஜினி சாருடனும் நடிக்க வாய்ப்பு அமைந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். எனக்கு எப்போதும் வரவேற்பு கொடுத்து வரும் நீங்கள் இப்படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

Venkat Prabhu wont narrate story to me says Vaibhav

எனக்குத் தெரியாமலே என்னை ஆடிஷன் எடுத்தாங்க.. – நடிகை சரஸ்

எனக்குத் தெரியாமலே என்னை ஆடிஷன் எடுத்தாங்க.. – நடிகை சரஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், சரஸ்மேனன் நடித்த படம் ‘ரணம்’.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற

நடிகை தான்யா ஹோப் பேசும் போது…

எல்லோருக்கும் வணக்கம். இன்று முழுவதும் ரணம் அணியினருடன் இருந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். நான் இப்படத்தில் ஒரு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இப்படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள்:, பிற தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். நீங்கள் படத்தைப் பாருங்கள். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகை சரஸ்மேனன் பேசும் போது,

பத்திரிக்கையாளர்கள், ரணம் படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். ஒரு புராஜெக்டில் நாம் இணைவதற்கு முன்னர் நடிகர் நடிகைகளுக்கு ஆடிஷன் நடக்கும். எனக்கும் சில புராஜெக்ட்கள் காலதாமதமாகி இருக்கிறது.

அப்பொழுது நான் ஒரு வெஃப் சீரிஸில் கிரியேட்டிவ் வொர்க் மற்றும் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த ஸ்பாட்டில் என்னோடு ஒளிப்பதிவாளர் செல்வா மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் உதய் போன்றோர் பணியாற்றி வந்தனர். அப்பொழுதே எனக்குத் தெரியாமல் அவர்கள் என்னை ஆடிஷன் எடுத்திருக்கிறார்கள். எனக்கு அது தெரியாது. எனவே இதன் மூலம் இப்படத்தில். எனக்கு உதவி இயக்குநராக நடிக்கவே ஆடிஷன் இல்லாமலே வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே நான் நான்கு படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருப்பதால் எனக்கு இக்கதாபாத்திரம் செய்வது எளிதாக இருந்தது. ஷெரிஃப் மற்றும் மது சார் இருவருக்கும் என் நன்றிகள். என்னுடன் நடித்த தான்யா ஹோப் மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

வைபவ் சாரின் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும். அவரின் 25வது படத்தில் நடித்திருப்பது பெருமை. இசையமைப்பாளர் அரோல் கரோலி அவர்களுக்கு நன்றி. சக்திவேலன் சாருக்கு நன்றி. அவர் வெளியிடும் படங்கள் என்றால் நல்ல படமாக இருக்கும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அது இந்தப் படத்திற்கும் பொருந்தும். இப்பொழுது சக்திவேலன் சார் தான் எல்லோருக்குமான லக்கி சேம்ப் (LUCKY CHAMP).

இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கின்றன. அதனால் எல்லோரும் தியேட்டருக்கு வந்து படத்தைப் பார்த்து பெண்கள் அனைவரும் ஆற்றலைப் பெற்றுக் கொண்டு செல்லுங்கள்.” என்றார்.

தயாரிப்பாளர் மது நாகராஜ் பேசியதாவது,

எல்லோருக்கும் முதற்கண் வணக்கம். நான் எப்போதுமே பேசும் போது, ஒரு Quote சொல்லித் தான் பேசத் துவங்குவேன். ஏனென்றால் எங்கள் டீமில் நாங்கள் எப்போதுமே ஏதாவது Quote சொல்லிக்கொள்வோம், இல்லையென்றால் சொல்லச் சொல்லிக் கேட்போம்.

“TEAM WORK MAKES THE DREAM WORK” என்று அடிக்கடி சொல்வார்கள். இதற்கு அர்த்தம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ஒரு வேலையை செய்தோமானால் அது கண்டிப்பாக வெற்றி அடையும்.. ஒரு அணியில் இருப்பவர்கள் ஒரே விசயத்தை வேறு வேறு கோணங்களில் பார்ப்பார்கள். எனக்கு குழு உழைப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. என் குழு தான் இங்கே இருக்கிறார்கள்.

”ரணம் அறம் தவறேல்” இந்தப் படம் எப்படி துவங்கிச்சிங்குற சம்பவத்தை உங்களோட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கிறேன்.. எனக்கு சினிமாத் துறையில் இருந்து முதன் முதலில் அறிமுகமானவர்கள் பாலாஜி மற்றும் லைன் புரொடியூஷர் செல்வம் இந்த இரண்டு பேர் தான்.. ஒரு நல்ல கதை இருக்கிறது படம் தயாரிக்கிறீர்களா..? என்று கேட்டார்கள்.

நான் உடனே அங்கு இருப்பவர்களே படம் எடுக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நான் வேறு எடுக்க வேண்டுமா…?

நான் இங்கு U.K வில் இருக்கிறேன். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் எப்படி எடுப்பது என்று கேட்டேன். எங்களிடம் நல்ல டீம் இருக்கிறது. உங்களுக்கு ஓகே என்றால் உங்களுக்கு எந்த வித சிரமமும் இல்லாத வகையில் படம் தயாரிக்கலாம் என்று சொன்னார்கள். உடனே யார் இயக்குநர்…? ஒரு மூன்று நான்கு படமாவது செய்திருக்கிறாரா…? என்று கேட்டேன். எதிர்தரப்பில் அமைதியாக இருந்துவிட்டு பிறகு இல்லை அவர் அறிமுக இயக்குநர் என்றார்கள். ஸ்கிரிப்ட் அனுப்பினார்கள். எனக்குப் படிக்கும் பழக்கம் இல்லை என்பதால் வாய்ஸ் நோட் அனுப்பச் சொன்னேன். அனுப்பினார்கள். கேட்டேன். பின் என் மனைவி கேட்டார். என்னை மீண்டும் கேட்கச் சொன்னார்கள்,. கேட்கும் போது அதில் பெண்களை முன்னிலைப்படுத்தி அவர்களை Address செய்யும் தன்மை இருப்பதை உணர்ந்தேன். என் மனைவியிடம் அதைக் கூறியவுடன் தயாரிக்கலாம் என்றார். பிறகு எந்த ஹீரோ ஒத்துக் கொள்வார் என்று கேட்டேன். ஏனென்றால் ஹீரோ ஒத்துக் கொள்ளாமல் ஒரு புராஜெக்ட்டை துவங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

பின்னர் வைபவ் அவர்களுக்கு கதை பிடித்திருக்கிறது என்று கூறினார்கள். உடனே இரண்டு தினங்களுக்குள் சென்னை வந்து அவரை சந்தித்தேன். அவர் மிகச் சிறந்த மனிதர், மிகச் சிறந்த நண்பரும் கூட, அன்றிலிருந்து ஸ்பாட்டில் நாங்கள் ஒன்றாகத் தான் சாப்பிடுவோம். அவரின் கதாபாத்திரம் மிக வித்தியாசமான கதாபாத்திரம் என்பதை எல்லோரும் சொல்லிவிட்டார்கள். என்னைப் பொருத்த வரை வைபவ் அவர்களுக்கு இப்படம் கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்து நாயகிகள் என்றவுடன் யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி வந்தது. ஏனென்றால் கதாபாத்திரங்கள் வித்தியாசமானவை. தான்யா ஹொப் சொன்னது போல் இதுவரை அவர் நடித்திராத போலீஸ் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி நந்திதா ஸ்வேதா உடல்நலக் குறைபாட்டால் இன்று வர இயலவில்லை. அவரின் வாழ்த்துக்களையும் வருத்தங்களையும் எல்லோருக்கும் தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கின் போது ஆக்ஷன் காட்சிகளில் கூட சிறப்பாக நடித்திருக்கிறார்,. ஒரு முறை காயம் ஏற்பட்ட போது பேக்-அப் சொல்ல வேண்டியது வருமோ என்று நினைத்தேன். ஆனால் வெறும் முதல் உதவி செய்துவிட்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்தார். அவரின் கேரவன் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு, படியில் அமர்ந்து கொண்டு என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருப்பார். அவருக்கு நன்றி. சரஸ் மேனன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் எப்போதும் சிரித்துக் கொண்டே அவரது வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே கடினமாக உழைத்திருக்கிறார்கள். அதில் முதன்மையாக இயக்குநர் ஷெரீஃப். ஒரு கதை எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்கின்ற அறிவு ஞானம் அவருக்கு இருக்கிறது. பிறகு ஒளிப்பதிவாளர் பாலாஜி. அவர் ஒரு சூப்பர் ஹியூமன், ஒரு ஷாட் எடுக்கும் போது பத்து நிமிடம் வீணடிப்பார். ஆனால் அவர் ஏன் அந்த பத்து நிமிடம் எடுத்துக் கொண்டார் என்பது அந்த ஷாட்டைப் பார்க்கும் போது, அந்த பத்து நிமிடம் வொர்த் என்று தோன்றும். லைன் புரொடியூசர் செல்வத்தை நம்பி சொத்தைக் கூட எழுதி வைக்கலாம். அவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர். பிறகு கலை இயக்குநர் மணி மொழியன். அவரை நான் அப்பு என்று தான் கூப்பிடுவேன். மழை என்று பார்க்காமல் போலீஸ் ஸ்டேஷன் செட்டப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு நன்றி.

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் உதய் என்ன நடக்க முடியாது என்று நினைப்போமோ அதை எளிதாக நடத்திக் காட்டிவிடுவார். பிரணதி சைல்ட் ஆர்டிஸ்ட், மற்றும் அவரின் பெற்றோருக்கும் நன்றி. இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்து முன் வந்ததற்கு நன்றி. இப்படம் உருவாக காரணமாக இருந்த என் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவருக்கும் நன்றி. இப்படத்தை எப்படி கொண்டு போய் சேர்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் சக்திவேலன் அவர்கள் என் வாழ்வில் வந்தார்கள். He Means lots to me, அவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் இருக்கிறார். இது தொழில் தாண்டிய நட்பு.” என்று பேசினார்.

Even i dont know Audition for me says actress Saras

இப்படி கூட நடக்குமா.? இந்த காலகட்டத்திலா வாழ்கிறோம்.? ‘ரணம்’ குறித்து சக்திவேலன்

இப்படி கூட நடக்குமா.? இந்த காலகட்டத்திலா வாழ்கிறோம்.? ‘ரணம்’ குறித்து சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”.

அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது,

வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவை துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் “ரணம்” அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார்கள். அதையும் மூன்று நான்கு வேலைகளில் ஒன்றாகக் கருதாமல், அதற்கென்று பிரத்யேகமான கவனம் கொடுத்து அர்ப்பணிப்புடன் அதை உருவாக்கி இருக்கிறார் மது நாகராஜன். இது சாதாரண விசயம் இல்லை.

சமீபத்தில் தான் அறிமுகம் ஆனார். இன்று என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவராக இருக்கிறார். பேசும் போது ஒரு மணி நேரத்தில் முக்கால் மணி நேரம் சினிமாவைப் பற்றிப் பேசுவார். மீதி பத்து நிமிடம் அவரின் குழந்தைகளைப் பற்றிப் பேசுவார். அந்த குழந்தைகள் மேல் எந்தளவிற்கு அன்பும் கவனமும் செலுத்துவாரோ அதே அளவிற்கு சினிமாவையும் நேசிக்கிறார். அவரது புரொடெக்ஷன் பெயரே குழந்தைகளின் பெயரையும் உள்ளடக்கி, மிதுன் மித்ரா மதுநாகராஜன் என்பதன் சுருக்கமாக MMM என்று வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதுமட்டுமின்றி இது நாயகன் வைபவ் அவர்களுக்கு 25வது படம். அவர் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். 250 படங்கள் நடிக்க வேண்டும். அவருக்கு வாழ்த்துக்கள். நாயகி சரஸ் மேனன் உடன் பல படங்களில் பணியாற்றிவிட்டேன்… மிகச்சிறந்த திறமைசாலி, அட்டகத்தி நந்திதா, தான்யா ஹோப் என எல்லோருமே மிகச்சிறந்த தேர்வு. அறிமுக இயக்குநர் இப்படத்தை மிகவும் ரேசியாக எடுத்துச் சென்றிருக்கிறார். மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தை புதிய கோணத்தில், இப்படியெல்லாமா இருக்கும் என்று ஆச்சரியப்படுத்தும் தளத்தில் காட்டியிருக்கிறார். படத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட காலகட்டத்திலா நாம் வாழ்கிறோம் என்பதான எண்ணத்தை ஆழ்மனதில் இப்படம் விதைக்கும். அறம் தவறாமல் நாம் வாழும் போது, அது இந்த சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும் என்பதைப் பற்றிப் பேசும் படமாக இருக்கும். கொஞ்சம் கூட யோசிக்க முடியாத நாம் நினைத்தே பார்த்திராத திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் சேர்த்து சிறப்பாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ஷெரீஃப். நல்ல ரைட்டிங் மற்றும் நல்ல இயக்கத்தை இப்படத்தில் நான் பார்க்கிறேன். இப்படம் நமக்குள் மிகச்சிறந்த விவாதங்களை உருவாக்கும். தரமான ஒரு படத்துடன் மிதுன் மித்ரா ப்ரெண்ட்ஸ் உள்ளே வந்திருக்கிறார்கள். இப்படம் வெற்றி அடைய வேண்டும். மிதுன் மித்ரா நிறைய படங்கள் செய்ய வேண்டும். ஒரு வருடம் முழுக்க புதுமுக இயக்குநர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளித்து தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் கம்பெனியாக இது வளர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்” என்று பேசினார்.

கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசுகையில்

ஷெரீஃப் என் தம்பி போன்றவர். பாலாஜி, மது சார் மற்றும் உதய் போன்றோர் இப்படம் மிகச்சிறப்பாக வர உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. உதய் இப்படத்திற்கு ஸ்டிராங் ஆன நிர்வாக தயாரிப்பாளர் என்றார்.

ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா பேசும் போது,

”ரணம்” படத்தை நானும் ஷெரீஃப்-ம் கோவிட் காலத்தில் தான் துவங்கினோம். இரவு பகலாக அமர்ந்து விவாதித்து நாங்கள் இந்தக் கதையை உருவாக்கினோம். அடுத்து இப்படத்தை யார் தயாரிப்பார்கள் என்கின்ற சந்தேகம் எங்களுக்கு வந்தது..? ஏனென்றால் இக்கதையை அவ்வளவு எளிதாக யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இக்கதையில் இருக்கும் ஒரு ப்ளாஷ்பேக் போர்ஷனைப் பார்த்து எல்லோருமே தயங்கினார்கள். மேலும் பல ஹீரோக்களும் கூட அதே காரணத்தினால் இப்படத்தில் நடிக்க தயங்கினார்கள். இதற்கு முன்னர் மது சார் தயாரிப்பில் ஒரு படம் பண்ணப் பேசி, அது நடக்காமல் போய்விட்டது. அப்பொழுது இருந்தே மது சார் ஒரு தயாரிப்பாளர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல நண்பராகப் பழகி வந்தார். அவர் என்னிடம் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்; படம் பண்ணலாம் என்று சொன்னார். அப்பொழுது நான் மற்ற தயாரிப்பாளர்களைப் போலத்தான் இவரையும் நினைத்தேன். சொல்லிவிட்டு போய்விடுவார்கள் என்று. அது போல் அவரும் அமெரிக்கா போய்விட்டார். அடுத்து 6 மாத காலம் கழித்து அவர் வரும் போது, அவரை சந்தித்து கதையைக் கூறினோம். ஒரு வாரம் கழித்து மது சார் கதையை ஓகே செய்துவிட்டார். ஏற்கனவே அவரது தயாரிப்பில் துவங்கிய முந்தைய படம் முடிவடையாமல் இருக்கும் போது, இவரைப் போல் யாரும் அவ்வளவு எளிதாக அடுத்த படம் தயாரிக்க ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஆனால் மது சார் சம்மதித்தார். அவரால் தான் இன்று நானும் செரீஃப்பும் இந்த மேடையில் நின்று கொண்டு இருக்கிறோம். அதற்காக அவருக்குப் பெரிய நன்றி.

இப்படம் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை. நாயகன் வைபவ் இக்கதையைக் கேட்டு எனக்குக் கதை பிடித்திருக்கிறது, நான் நடிக்கிறேன் என்று சொன்னார். மிகவும் சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் சில நாயகர்கள் இப்படத்தில் நடிக்க பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். ஹீரோயின் வேண்டும் என்றார்கள்.. டூயட் வேண்டும் என்றார்கள். இப்படிப்பட்ட சூழலில் இக்கதையை கேட்டவுடன் ஒப்புக் கொண்டார் வைபவ். அதிலும் முக்கியமாக ஹீரோ இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் வர வேண்டும். பிற நாயகர்கள் தயங்கியதற்கு இதுவும் ஒரு காரணம். எல்லோரும் விஷ்வல் நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். அதற்கு முக்கியமான காரணம் என்னோடு பணியாற்றிய சக தொழில்நுட்பக் கலைஞர்களின் பணி. அவர்களுக்கு நன்றி. அதையும் விட மேலான மற்றொரு காரணம் நீங்கள் முதல் முறையாக வைபவ் அண்ணனை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் பார்க்கிறீர்கள். அதனால் விஷ்வல்ஸ் உங்களுக்குப் பிடித்திருக்கிறது,.
இப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

இசையமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது…

எல்லோரும் கூறியதைப் போல் எனக்கும் ரணம் ரொம்பவே முக்கியமான திரைப்படம். எல்லோரும் மிக நேர்மையாக கடுமையாக உழைத்திருக்கிறோம். இப்படம் ஒரு நல்ல த்ரில்லராக இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதாக இருக்கும். திரைக்கதை கிரிப்பாக இருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு இயக்குநர் செரீஃப் இக்கதை குறித்து என்னிடம் பேசும் போது, முழு ஸ்கிரிப்ட் இருக்கிறதா….?? என்று கேட்டிருந்தேன். அவர் உடனே வாய்ஸ் நோட் அனுப்புகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.

எனக்கு கொஞ்சம் குழப்பமாகவும், சிறிது ஆச்சரியமாகவும் ஒரு புது அனுபவமாகவும் இருந்தது. வாய்ஸ் நோட் கேட்கும் போது எனக்கு அது உண்மையாகவே Inspring ஆக இருந்தது. கதை மிகவும் பிடித்திருந்தது. இந்த ரணம் திரைப்படத்தின் மூலமாக எனக்கு ஒரு நண்பர்கள் குழு கிடைத்திருக்கிறது.. பாலாஜி, ஷெரீஃப், தயாரிப்பாளர் மது சார், வைபவ், என நிறைய பேர். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

Will it happen like this Says Sakthivelan about Ranam

More Articles
Follows