தள்ளிப் போகும் ரெமோ ரிலீஸ்; குவியும் பாராட்டுக்கள்.!

தள்ளிப் போகும் ரெமோ ரிலீஸ்; குவியும் பாராட்டுக்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

remo sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரெமோ படத்தை மிகுந்த பொருட்செலவில் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தங்களது முதல் படைப்பின் வெளியீட்டை மிகுந்த கவனமுடன் செய்து வருகின்றனர்.

இப்படத்தை அக்டோபர் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட இருந்தனர்.

இந்தியாவில் வெளியாகும் முன்பே வெளிநாடுகளில் படங்கள் ரிலீஸ் ஆவதால், திருட்டு விசிடி முதல் இணைய தளங்களில் வெளியாகி விடுகிறது.

எனவே தற்போது வெளிநாடுகளில் மட்டும் இப்படத்தை 8ஆம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தயாரிப்பாளரின் புதிய முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரெமோ மீது சந்தேகமா? இந்த நம்பருக்கு கால் பன்னுங்க பாஸ்

ரெமோ மீது சந்தேகமா? இந்த நம்பருக்கு கால் பன்னுங்க பாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan keerthy sureshசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் பெயர் வரி விலக்கு காரணமாக ரெங்கராஜன் என்கிற மோகனா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்தன.

எனவே இதுபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பிய தயாரிப்பு குழுவினர் ஏதேனும் சந்தேகங்களுக்கு தங்களை தொடர்பு கொள்ளலாம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

தொடர்பு எண் 99945 70024
இமெயில் முகவரி [email protected]

எல்லாருக்கும் ஓகே; ஆனா, ஜோக்கருக்கு வரி விலக்கு இல்லையே.!

எல்லாருக்கும் ஓகே; ஆனா, ஜோக்கருக்கு வரி விலக்கு இல்லையே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

joker tamil movieராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தை பார்த்த சகாயம் ஐஏஎஸ், ரஜினிகாந்த், திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பாராட்டியுள்ளனர்.

மேலும் பலரது பாராட்டுக்களையும் குவித்து வரும் நிலையில், இப்படத்திற்கு தமிழக அரசின் கேளிக்கை வரிவிலக்கு கிடைக்கவில்லையாம்.

இதுகுறித்து இயக்குனர் ராஜூமுருகன் கூறும்போது…

“இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பெரிதாக எதிர்ப்பு எதையும் காட்டவில்லை.

அதற்காக சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்.

பனோரமா உள்ளிட்ட திரைப்பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்ப உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

ஜோக்கர் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி-கமல் மட்டும்தான் ‘செவாலியர் விருது’ பெற்றார்களா?

சிவாஜி-கமல் மட்டும்தான் ‘செவாலியர் விருது’ பெற்றார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chevalier awardபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார்.

நேற்று (ஆகஸ்ட் 21, 2016) இவ்விருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கலைத்துறைக்கு இவர்கள் செய்த சேவையை பாராட்டி இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர தமிழகத்தை சேர்ந்த 4 பேர்கள் இவ்விருதினை பெற்றுள்ளனர். (இருவர் ஈழத்தமிழர்கள்)

1. அஞ்சலி கோபாலன் – (2013) செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண் (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)
2. சிவயோகநாயகி இராமநாதன் – (2014) செவாலியர் விருது பெற்ற முதல் ஈழத் தமிழ்ப்பெண்.. ஆசிரியர் & அதிபர்.
3. ஷெரீன் சேவியர் – (மனித உரிமைசார் பணிகளுக்காக)
4. நாகநாதன் வேலுப்பிள்ளை – (2011) யாழ் பருத்தித்துறை ஆத்தியடி

இவர்களைத் தவிர இந்தியளவில் பெற்றுள்ளவர்கள் யார்? என்பதை பார்ப்போம்…

  • ஜே.ஆர்.டி.டாட்டா – 1983 (தொழில் துறை)
  • சத்யஜித்ரே – 1987 (சினிமா)
  • ஜூபின் மேத்தா – 2001
  • எம்.பாலமுரளிகிருஷ்ணா – 2005 (இசை)
  • அமிதாப்பச்சன் – 2007 (சினிமா)
  • ஷாரூக்கான் – 2014 (சினிமா)
  • யஸ்வந்த் சின்ஹா – 2015 (நிதி நிபுணத்துவம்)
  • மனிஷ் அரோரா – 2016 (ஆடை வடிவமைப்பு)

செவாலியர் விருது பற்றி ஒரு பார்வை…

  • மாவீரன் நெப்போலியன், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளில் வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்காக துவங்கியதுதான் இந்த செவாலியே விருது.
  • அதன்பின்னர் 1802ஆம் ஆண்டிலிருந்து எல்லாத்துறை வல்லுனர்களுக்கும் இந்த விருது வழழங்கப்படலாம் என தீர்மானித்தனர்.
  • இவ்விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் பிரபலங்கள், குறைந்தபட்சம் அந்த துறையில் 25 வருடங்கள் சேவையாற்றியிருக்க வேண்டும்.
  • உலகளவில் 93,000 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டினைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வருடா வருடம் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் அமைந்திருக்கும் அதிபர் மாளிகையான எல்சீ அரண்மனையில் சிறப்பு விருந்துடன், இந்த விருது அளிக்கப்படும்.
  • செவாலியே விருது பெற்ற கலைஞர்கள், பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அரசாங்க பிரதிநிதிகளுக்கு சமமானவர்கள்.
‘பொண்டாட்டிடா..’ பன்ச் டயலாக் பேசி, ரஜினியை கவர்ந்த பெண்

‘பொண்டாட்டிடா..’ பன்ச் டயலாக் பேசி, ரஜினியை கவர்ந்த பெண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stillsரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள பல பேர் காத்திருக்கின்றனர்.

ஆனால் ரஜினியோ தன்னை கவர்ந்த ஒரு பெண்ணுடன் போட்டோ எடுக்க விரும்பி அவரை அழைத்துள்ளார்.

அவர் வேறு யாருமல்ல… கபாலிடா என ரஜினி பேசிய பன்ச் டயலாக்கை பொண்டாட்டிடா என பேசி இணையங்களை கலக்கியவர்தான்.

எனவே, ரஜினி தரப்பு அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசி நேரில் அழைத்துள்ளனர்.

சென்னை சேமியர்ஸ் சாலையிலுள்ள தனுஷ் வீட்டில் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் உடன் இருந்துள்ளார்.

அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்று ஆர்வமாக கேட்டு அறிந்தாராம் ரஜினிகாந்த்.

‘விஜய்யை என்றும் வியந்து பார்க்கிறேன்’ – சதீஷ்

‘விஜய்யை என்றும் வியந்து பார்க்கிறேன்’ – சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay keerthy suresh sathishகாமெடி நடிகர்களில் தனக்கான பாதையை உருவாக்கி டாப் ஹீரோக்களுடன் நடித்து வருபவர் சதீஷ்.

கத்தி படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய்யின் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து சதீஷ் கூறியதாவது…

விஜய் சாருடன் மீண்டும் நடிப்பதை என்னுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்வேன்.

சக நடிகர் போல் அவரை பார்க்கவே முடியாது. அப்படியான ஒரு சிறந்த மனிதர்.

இடை இடையே நிறைய ஆலோசனைகளும் சொல்வார். எனவே, அவரை வியந்து பார்க்கிறேன்.

அவரது நிறைய படங்களில் அவரே காமெடி செய்திருப்பார். அதனால் ஒரு காமெடியானாக நான் அவருடன் நடிப்பது எனக்கு உதவியாக இருக்கிறது” என்றார்.

More Articles
Follows