காலாவை தொடர்ந்து மீண்டும் லைகாவுடன் இணைந்த ரஞ்சித்

Ranjith production Pariyerum Perumal first look launchஅட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என் இரு வெற்றிப் படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு எவருமே எதிர்பாராத வகையில் ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து தற்போது ரஜினியின் காலா படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் ரஞ்சித்.

இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வேலன் மற்றும் ராகேஷ் ஆகியோரும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

தற்போது சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மார்ச் மாதம் வெளியாகவுள்ள இப்டத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

காலா படத்தின் வெளியிட்டு உரிமையையும் லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ranjith production Pariyerum Perumal first look launch

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post