தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விக்ரம் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் ‘தங்கலான்’.
ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார்.
பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் நவம்பர் மாதம் 24ல் வெளியாக உள்ளது. விக்ரம் நடித்துள்ள இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் விக்ரம் நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
சித்தார்த் தயாரித்து நடித்து சமீபத்தில் வெளியான ‘சித்தா’ என்ற படத்தை இயக்கியவர் அருண்குமார்.
இந்த படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது அருண்குமார் இயக்கத்தில் தான் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன..
விக்ரம் மற்றும் சித்தா இயக்குனர் அருண்குமார் இணையும் இந்த படத்தை இருமுகன் படத்தை தயாரித்த சிபு தமின்ஸ் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
கூடுதல் தகவல்…
விஜய்சேதுபதி நடித்த ‘சிந்துபாத்’ & ‘சேதுபதி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அருண்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
Chithha director Arunkumar will direct Vikram