நண்பர்கள் தயாரிக்கும் படத்திற்காக ‘லத்தி’ (சார்ஜ்) எடுத்த விஷால்

நண்பர்கள் தயாரிக்கும் படத்திற்காக ‘லத்தி’ (சார்ஜ்) எடுத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பர்களும் நடிகர்களுமான ரமணா, நந்தா இணைந்து உருவாக்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் ராணா புரொடக்‌ஷன்ஸ்.

இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் விஷால் நடித்து வருகிறார்.

இவர்கள் மூவரும் இணையும் புதிய படத்திற்கு “லத்தி” என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாராகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு செப்டம்பர் முதல் வாரத்தில் ஆரம்பமானது.

விஷால் இப்பொழுது, தீபாவளிக்கு வெளியாகும் #எனிமி படத்தின் தமிழ்,தெலுங்கு டப்பிங் வேலைகள் செய்து வருகிறார்.

இத்துடன் #வீரமே வாகை சூடும் படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைப்பெற்று வருகிறது.

இந்த படங்களை தொடர்ந்து “லத்தி” படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு நடைபெறும்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க இளையதிலகம் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தாமிரபரணி, ஆம்பள படத்திற்கு பிறகு பிரபு விஷால் இணைந்து நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A.வினோத் குமார் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார்.
வசனம்: A.வினோத் குமார்/பொன்பார்த்திபன்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். திலீப்சுப்பராயன் ஸ்டண்ட் காட்சி அமைக்கிறார்.
எடிட்டிங்:N.B.ஶ்ரீகாந்த் செய்ய கலை பணிகளை எஸ்.கண்ணன் செய்து வருகிறார்.

Rana Productions first movie Vishal 32 is now titled Laththi

1000 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை படமாக்கும் ஜி.வி.பெருமாள் வரதன்

1000 வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை படமாக்கும் ஜி.வி.பெருமாள் வரதன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மரகத நாணயம்’ , ‘ராட்சசன்’, ‘புரூஸ்லி’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராகவும், ‘கன்னி மாடம்’ படத்தில் துணை இயக்குநராகவும் பணியாற்றிய ஜி.வி.பெருமாள் வரதன், 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

வரலாற்று சம்பவத்தை மையப்படுத்திய சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் நகைச்சுவையை சேர்த்து ஜி.வி.பெருமாள் வரதன் எழுதியிருக்கும்
திரைக்கதையை கேட்ட பல பிரபலங்கள், படம் நிச்சயம் வெற்றி பெறும், என்று நம்பிக்கை தெரிவித்துள்ளதால், இப்படக்குழு
பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

படம் குறித்து இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதனிடம் கேட்ட போது…

“பல்லவ மன்னர்களில் முக்கியமமானவர் நந்தி வர்மன்.
அவரைப் பற்றிய உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்திருக்கிறேன். இதில், 75
சதவீதம் உண்மையும், 25 சதவீதம் கற்பனையும் இருக்கும்.

1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நந்தி வர்மன், சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில்
அவர் வாழ்ந்த அந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது. அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல்
பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதால், தற்போது அந்த ஊரில் வசிக்கும் மக்கள் 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு
வெளியே வர மாட்டார்கள்.

இதற்கிடையே, அந்த ஊரில் புதைந்த நந்தி வர்மனின் இடத்தை கண்டுபிடிப்பதற்காக தொல்லியல்துறையினர் வருகிறார்கள்.

அவர்களும் ஒருவர் ஒருவராக மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதை,
சுவாரஸ்யமான வரலாற்று கதையுடன், சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்லப்போகிறோம். என் கதையை கேட்டு பலர்
பாராட்டி வருகிறார்கள். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும். படத்தில் இடம்பெறும் நகைச்சுவை
காட்சிகளும் ரசிகர்களை கவரும். ‘மரகத நாணயம்’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய படங்களை ஒன்று சேர்த்தால் எப்படிப்பட்ட உணர்வு இருக்குமோ, அப்படிப்பட்ட உணர்வை என் படம் கொடுக்கும்.” என்றார்.

‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்களையும், அடாவடித்தனத்தை வெளிக்காட்டும்
கதாப்பாத்திரத்தில் நடித்த சுரேஷ் ரவி, இப்படத்தில் காவல்துறையின் பெருமையையும், அவர்களுடைய நேர்மையையும்
வெளிக்காட்டும் கதாப்பாத்திரத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஆஷா கவுடா நடிக்கிறார்.

நிழல்கல் ரவி, போஸ் வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், அம்பானி சங்கர், முல்லை – கோதண்டம், மீசை
ராஜேந்திரன், அசுரன் அப்பு, பொம்மி ராஜன், ஜே.எஸ்.கே கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ஏ.கே பிலிம் ஃபேக்டரி சார்பில் அருண்குமார் தயாரிக்கிறார். கிருஷ்ண மூர்த்தி
ஒளிப்பதிவு செய்ய, மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, முனிராஜ் கலையை
நிர்மாணிக்கிறார். நடன காட்சிகளை சந்தோஷ் வடிவமைக்கிறார்.

சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிஞ்சி, செஞ்சி ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ராம்குமார், ரவிகுமார், விருமாண்டி, கெளதம், மோகன்.ஜி, ’மான்ஸ்டர்’ நெல்சன், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர்கள் கோகுல் பெனாய், பி.வி.சங்கர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன், சுரேஷ் ரவி, தயாரிப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

A Gripping Suspense-Thriller Based On True Incident Involving 1000-Year Mystery

விவாகரத்தை அறிவித்துவிட்டு சரசரவென படங்களை ஒப்புக் கொள்ளும் சமந்தா

விவாகரத்தை அறிவித்துவிட்டு சரசரவென படங்களை ஒப்புக் கொள்ளும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் விவாகரத்து குறித்து சமந்தா அறிவித்து 10 நாட்கள் கூட நிறைவாகவில்லை.

இந்த நிலையில், சரசரவென அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் சமந்தா.

தற்போது இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Dream warrior Pictures நிறுவனம், தமிழ் திரையுலகில் மாறுபட்ட தரமான படைப்புகளை வழங்கி வரும் ஒரு பிரபலமான நிறுவனமாகும்.

ஜோக்கர், அருவி என மாறுப்பட்ட படைப்புகள் ஒரு புறம், காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK என கமர்ஷியல் கொண்டாட்டம் தரும் பல படங்களை தயாரித்து, தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டு பெற்று வருகிறது.

தற்போது Dream warrior Pictures தயாரிப்பில் ரொமான்டிக் ஃபேண்டஸி வகையில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்குகிறார்.

இவர் #ஒருநாள்கூத்து டைரக்டர் நெல்சன் வெங்கடேசன் அவர்களிடமும், #கண்ணும்கண்ணும்கொள்ளையடித்தால் பட டைரக்டர் தேசிங்குபெரியசாமி அவர்களிடமும் இணை இயக்குநராக பணியாற்றியவர்.

தமிழில் ஒரு புது முயற்சியாக, ஃபேண்டஸி ரொமாண்டிக் படமாக , பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

Dream warrior Pictures நிறுவனத்தில் நடிகை சமந்தா நடிப்பது இதுவே முதல் முறை. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்த படத்தை போலவே தமிழ் & தெலுங்கில் உருவாகவுள்ள மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சமந்தா.

இந்த படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது அந்த நிறுவனத்தின் 14வது படைப்பாகும். சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கின்றனர்.

ஹரி அண்ட் ஹரீஸ் இணைந்து இயக்கவுள்ளனர். நவம்பரில் இதன் சூட்டிங் தொடங்கப்படவுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தான் தான் காதலித்து திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார் சமந்தா.

திருமணமாகி 4 வருடங்கள் ஆகியும் சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ளாமல் புதிய புதிய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதால் தான் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actress Samanthas upcoming movie updates after her divorce

வரலாற்று உண்மைச் சம்பவம் : அதர்வா நடித்த ‘அட்ரஸ்’ பட சூட்டிங் ஓவர்

வரலாற்று உண்மைச் சம்பவம் : அதர்வா நடித்த ‘அட்ரஸ்’ பட சூட்டிங் ஓவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காக்டைல் சினிமா சார்பில் அஜய் கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் ‘அட்ரஸ்’.

“குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்”,
“வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் என்பவர் இந்த “அட்ரஸ்” படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நாட்டில் ‘அட்ரஸ்’ இல்லாத ஒரு ஊர். ஆமாம்.. 1956-ல் மொழிவாரி மாநிலமாக பிரிக்கிற போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் நடுவில் சிக்கி கொண்டு தனது ‘அட்ரஸை’ தொலைத்த கிராமத்துக்கு அட்ரஸ் கிடைத்ததா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மிக திரில்லாக இயக்கிவரும் இதன் படபிடிப்பு, சமீபத்தில் நடந்தது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.

ராஜமோகன், கதை திரைக்கதை வசனம் எழுதி இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் ஒரு புரட்சிகரமான ‘காளி’ என்கிற ஒரு இளைஞன் வேடம். இந்த கேரக்டரில் அதர்வா முரளி நட்புக்காக நடித்திருக்கிறார்.

உண்மை சம்பவமான இக்கதையில் இவரது ஜோடியாக பூஜா ஜவ்வேரி நடிக்கிறார்.

மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா,
தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலிசோடா முத்து
மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார்.

இவர் ‘மெரீனா’, ‘மூக்குத்திஅம்மன்’ , ‘நெற்றிக்கண்’ படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

பாடல்கள்: சினேகன்,மோகன் ராஜன் ‘கானா’ ஹரி,
எடிட்டிங்: தியாகு,
ஸ்டில்ஸ்: குமார், சண்டைப்பயிற்சி:சில்வா,
மக்கள் தொடர்பு: ஜான்சன்

இதனுடைய படப்பிடிப்பு, மலையும்.. மலை சார்ந்த பகுதிகளில் நடைபெற்றது.

கொடைக்கானலில் இருந்து 8 கிலோமீட்டர் நடந்து நடந்து சென்று வெள்ளக் கவி என்ற கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

விரைவில் டீசர், ஆடியோ வெளியாகும்.

Atharvaa Pooja starring Address shoot wrapped

அரசியல் செல்லாக்காசு ச்சீ.. சீமானே மன்னிப்பு கேள்.; விஜய் ரசிகர்கள் ஆவேசம்

அரசியல் செல்லாக்காசு ச்சீ.. சீமானே மன்னிப்பு கேள்.; விஜய் ரசிகர்கள் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றனர்.

உள்ளாட்சித் தேர்தலில் 60க்கும் மேற்ப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் செல்வாக்கால் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றதாகவும் நடிகர் விஜய்க்காக மக்கள் ஓட்டு போட்டார்கள் என நான் நினைக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில்..

அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் வாழ்த்துகள். நாம் தமிழர் படுதோல்வியடையவில்லை.

சில இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். ஒரே நாளில் ஒரு செடி பூத்துவிடாது. படிப்படியாகத்தான் ஒரு கட்சி வளரும்” என்று சீமான் தெரிவித்தார்.

சீமானின் இந்த பேச்சை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

அந்த போஸ்டரில்..

“அரசியலின் செல்லாக்காசு ச்சீ சீமானே.. வன்மையாக கண்டிக்கிறோம்..

எல்லா தேர்தலிலும் அடி வாங்கும் உங்களுக்கு தளபதியை பற்றி கூற என்ன தகுதி இருக்கு? உடனடியாக மன்னிப்பு கேள்.. இது எச்சரிக்கை அல்ல கட்டளை..” இவ்வாறு சீமானை கடுமையாக சாடி போஸ்டர்கள் அடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

Actor Vijay fans warning Naam Tamilar Seeman

உதயநிதி – தான்யா படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட அருண்ராஜா

உதயநிதி – தான்யா படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரை வெளியிட்ட அருண்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார் என்று அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது “நெஞ்சுக்கு நீதி” என இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

இது ஆர்ட்டிக்ள் 15 ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர்.

மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன்
படத்தொகுப்பு – ரூபன்
கலை – வினோத் ராஜ்குமார், லால்குடி இளையராஜா
சண்டைப்பயிற்சி – Stunner சாம்

Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ராகுல் அவர்களின் ROMEOPICTURES இப்படத்தை வெளியிடுகின்றது.

வெகு வேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Udhayanidhi Tanya Arunrajas film titled Nenjukku Needhi

More Articles
Follows