நடிகர் விஷால் ‘லத்தி’ படத்தை மூன்று மொழிகளில் டப் செய்கிறார்

நடிகர் விஷால் ‘லத்தி’ படத்தை மூன்று மொழிகளில் டப் செய்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா தயாரிக்கும் ‘லத்தி’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் பட சூட்டிங்கின் போது விஷாலுக்கு பலமுறை விபத்துக்கள் ஏற்பட்டு காயங்கள் அடைந்தார்.

மேலும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், விஷால் ‘லத்தி’ படத்தில் தனது பகுதிகளுக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் குரல் கொடுத்துள்ளார்.

Vishal’s dubbing ‘Laththi’ in three languages

லோகேஷின் படத்தில் தவற விட்ட வாய்ப்பை தளபதி 67 இல் பயன்படுத்தி கொள்ளும் பிரபல நடிகர்

லோகேஷின் படத்தில் தவற விட்ட வாய்ப்பை தளபதி 67 இல் பயன்படுத்தி கொள்ளும் பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் புதிய படமான ‘தளபதி 67’ படத்தின் பூஜை டிசம்பர் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது.

செல்போன்களுக்கு முழு தடை விதிக்கப்பட்டதால் ஒரு புகைப்படத்தை கூட பார்க்க முடியவில்லை.

இதனிடையே பூஜையில் கலந்து கொண்டவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் மூத்த நடிகர் மன்சூர் அலி கான்.

‘தளபதி 67’ இல் அவர் இருப்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தினார்.

‘கைதி’ திரைப்படத்தில் டில்லியாக முதலில் நடிக்க இருந்தது நடிகர் மன்சூர் அலி கான் தான் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சர்தார் பட குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு அளித்த நடிகர் கார்த்தி

சர்தார் பட குழுவினருக்கு விலையுயர்ந்த பரிசு அளித்த நடிகர் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளிக்கு வெளியான சர்தார் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் குழுவிற்கு நடிகர் கார்த்தி தற்போது விலையுயர்ந்த மற்றும் பயனுள்ள பரிசை வழங்கியுள்ளார்,

மேலும் அவரது புதுமையான சிந்தனை குறித்த செய்தி சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.

படத்தின் ரிசல்ட்டால் மகிழ்ச்சி அடைந்த கார்த்தி, படக்குழுவினருக்கு சில்வர் வாட்டர் பாட்டில்களை பரிசாக அளித்துள்ளார்.

தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய சமூக அக்கறையுள்ள படம் சர்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பரிசின் விலை 30,000 என தெரிய வந்துள்ளது.

சிம்பு திருமணத்தை அவர்தான் முடிவு செய்யனும்.; யாரை சொல்றார் டி.ஆர்.?!

சிம்பு திருமணத்தை அவர்தான் முடிவு செய்யனும்.; யாரை சொல்றார் டி.ஆர்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி கடந்த 36-38 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சிலம்பரசன். தற்போது 40 வயது.

குறைந்த எண்ணிக்கையில் இவர் படம் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தை எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதனிடையில் வளர்ந்து நாயகனாகப் பிறகு நிறைய நடிகைகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.

நடிகைகள் திரிஷா நயன்தாரா ஹன்சிகா ஆகியோருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

தற்போது நயன்தாரா மற்றும் ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற்று விட்டது. ஆனால் இதுவரை சிம்புக்கும் திருமணம் ஆகவில்லை.. திரிஷாவுக்கும் திருமணமாகவில்லை.

திரிஷாவின் திருமணம் நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது சிம்புவுக்கு பெண் தேடும் படலம் பல வருடங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் ஒரு கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தார் சிம்புவின் தந்தையும் இயக்குநருமான டி ராஜேந்தர்.

அப்போது சிம்புவின் திருமணம் குறித்து அவர் பேசியதாவது… “என் மருமகளை சிம்புவின் மணமகளை இறைவன்தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

‘துணிவு’ படத்தை பார்க்க வரும்முன் இதை செய்ங்க.. – வினோத் வேண்டுகோள்

‘துணிவு’ படத்தை பார்க்க வரும்முன் இதை செய்ங்க.. – வினோத் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தை இயக்கியுள்ளார் வினோத்.

இந்த படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதை முன்னிட்டு தற்போது படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகளில் படக்கூழுவினர் விறுவிறுப்பாக உள்ளனர்.

இந்த நிலையில் வினோத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது..

‘துணிவு’ படம் குறித்து பலவிதமான யூகங்கள் வலம் வருகின்றன.. அஜித்துக்கு நெகட்டிவ் ரோல் பேங்க் கொள்ளை சம்பவம் என பல கற்பனைகள் வருகின்றன. ஆனால் அது உண்மை இல்லை. அதை பற்றி சொல்லவும் முடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லுவேன். ‘துணிவு’ படத்திற்கு படத்தை பார்க்க வருவதற்கு முன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்த்து ரசித்து விட்டு வாருங்கள்” என தெரிவித்துள்ளார்

செய்வீர்களா.?? செய்வீர்களா.?

ஏற்றி விட்ட ஏணிக்காக வலியவந்து மாட்டும் ஹீரோக்கள்.; ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக இவரா?

ஏற்றி விட்ட ஏணிக்காக வலியவந்து மாட்டும் ஹீரோக்கள்.; ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு பதிலாக இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவுக்குள் ஒரு மகா நடிகன் ஒளிந்திருக்கிறார் என்பதை வெளி உலகக் அறியச் செய்தவர் இயக்குனர் பாலா.

இவர் இயக்கிய நந்தா மற்றும் பிதா மகனில் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்த ‘வணங்கான்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பல வருடங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி அமைந்ததால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன் சூர்யா இந்த படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார் என அறிக்கை வெளியிட்டிருந்தார் பாலா.

இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் அப்செட் ஆகினர். ஆனாலும் ‘வணங்கான்’ படப் பணிகள் தொடரும் என அறிவித்திருந்தார் பாலா.

னவே வணங்கான் படத்தில் யார் நாயகனாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் அதர்வா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் அதர்வா அற்புதமான நடிப்பை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல விக்ரம் ஆர்யா விஷால் சூர்யா வரலட்சுமி ஆர் கே சுரேஷ் ஜிவி. பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் நல்லதொரு நடிப்பு பரிமாணத்தை காட்டியவர் பாலா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows