தோல்வியை வெற்றியாக்கியவர் ரஜினி.; ‘பாபா’ படம் என் தென்னிந்திய சினிமாவை முடிச்சிட்டு – மனீஷா கொய்ராலா

தோல்வியை வெற்றியாக்கியவர் ரஜினி.; ‘பாபா’ படம் என் தென்னிந்திய சினிமாவை முடிச்சிட்டு – மனீஷா கொய்ராலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990-களில் வெளியான அர்ஜூனின் ‘முதல்வன்’ மற்றும் கமலின் ‘இந்தியன்’ ஆகிய இரு படங்களிலும் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ராலா.

இந்த இரு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து மனீஷாவுக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு 2002ல் அமைந்தது.

ரஜினியுடன் ‘பாபா’ படத்தில் நாயகியாக நடித்தார் மனிஷா. ஆனால் அதன் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் ரஜினி பற்றியும் பாபா படம் குறித்தும் பேசியுள்ளார் மனீஷா.

‘2002ல் மிகப்பெரிய படமாக பேசப்பட்டது ‘பாபா’. எனவே அந்த படத்தின் மூலம் நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தேன்.

‘பாபா’ கொடுத்த பெரும் தோல்வியால் எனக்கு வாய்ப்புகள் அமையவில்லை. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படம் பெரும் தோல்வி அடைந்தது.

ஆனால் சமீபத்தில் 2022-ல் பாபா படத்தை ரீ-ரீலிஸ் செய்தார் ரஜினிகாந்த். அந்த படம் நல்ல வசூலை அள்ளியது. ஒரு தோல்வி படத்தை கூட ஹிட் ஆக்கியவர் ரஜினிகாந்த். அவருக்கு தோல்வி என்பதே கிடையாது.” என தெரிவித்துள்ளார் மனீஷா.

Rajinism Baba disaster Manisha Koirala open talk

‘இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ குறித்து ஷங்கர் கொடுத்த செம அப்டேட்

‘இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ குறித்து ஷங்கர் கொடுத்த செம அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’.

ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இந்த படத்திற்கான இசையை அமைத்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கமல்ஹாசன் மற்றும் சங்கர் இருவரும் ‘இந்தியன் 2’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது…

“வருகிற ஜூன் மாதத்துடன் படத்தின் வசன காட்சிகளை படமாக்கிவிடுவோம்.்அதன் பிறகு பாடல் மற்றும் VFX பணிகள் நடைபெறும்.

இசையமைப்பாளர் அனிருத்திடம் ஒரு குட்டிப் பாடல் கேட்டு இருக்கிறோம். அவரும் ஓகே சொல்லிட்டார்.

எனவே விரைவில் ‘இந்தியன் 2’ ஸ்பெஷல் வீடியோ வெளியாகும்’’ எனத் தெரிவித்தனர்.

director Shankar new update given for ‘Indian 2’

லோகேஷ் இயக்கத்தில் மட்டுமே சாத்தியம்.; விஜய் படத்தில் இணையும் தனுஷ்.?!

லோகேஷ் இயக்கத்தில் மட்டுமே சாத்தியம்.; விஜய் படத்தில் இணையும் தனுஷ்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பதில்லை. ஆனால் சமீப காலமாக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் & பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மணிரத்னம் பெரிய இயக்குனர் என்பதால் அவர் கேட்டுக் கொண்டதற்காக பலரும் ஒத்துக்கொண்டனர்.

ஆனால் தற்போது இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.்அவரும் அதற்கு ஏற்ப மல்டி ஸ்டார் படங்களை இயக்கி வருகிறார்.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்திருந்தனர். ‘விக்ரம்’ படத்தில் கமலுடன் பகத்பாசில், விஜய் சேதுபதி மற்றும் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது உருவாகி வரும் லோகேஷின் ‘லியோ’ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் சஞ்சய்தத், பகத்பாசில் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

LUC பாணியில் உருவாகும் நிலையில் ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டரை போல ‘லியோ’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் இடம் பெற உள்ளதாம். இதில் நடிக்க வைக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Dhanush to join Vijay’s film directed by Lokesh

OFFICIAL சிறப்பு காட்சியில்லை.; ஒரே நாளில் 12.3 கோடி வசூலித்து கெத்து காட்டும் ‘பத்து தல’

OFFICIAL சிறப்பு காட்சியில்லை.; ஒரே நாளில் 12.3 கோடி வசூலித்து கெத்து காட்டும் ‘பத்து தல’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரு வெற்றி படங்களை தொடர்ந்து சிம்பு நடிப்பில் நேற்று வெளியான படம் ‘பத்து தல’.

ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சௌந்தரராஜா, மது குருசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் ராவடி என்ற பாடலுக்கு சாயிஷா நடனமாடி இருந்தார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.்

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக ஒரு போஸ்டரை வெளியிட்டனர்.

முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ 12.3 கோடியை படம் வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது சிம்புவின் சினிமா கேரியரில் முதல் நாளின் அதிகபட்ச வசூல் என கூறப்படுகிறது.

மேலும் படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சியில்லை.. அதிகாலை 4 மணி காட்சிகள் இல்லை.. வார நாட்களில் (வியாழன்) வெளியானது. அப்படி இருந்த போதிலும் வசூல் வேட்டையாடியுள்ளது என படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Pathu Thala Day 1 Box Office Collection Worldwide revealed

இணைய தொடரில் நடிக்கும் ஐஸ்வர்யாவின் சகோதரர் ‘பிக் பாஸ்’ மணிகண்டன்

இணைய தொடரில் நடிக்கும் ஐஸ்வர்யாவின் சகோதரர் ‘பிக் பாஸ்’ மணிகண்டன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா’ என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் இணையத் தொடர் ‘மை டியர் டயானா’.

இதில் நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங்கோவன் மேற்கொண்டிருக்கிறார்.

ரொமான்டிக் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் இணையத் தொடர் என்பதால் ‘மை டியர் டயானா’ விற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Aishwarya brother Mani kandan ‘s new series titled My Dear Diana

‘மார்கழி திங்கள்’ படத்தலைப்பில் அப்பாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா

‘மார்கழி திங்கள்’ படத்தலைப்பில் அப்பாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

மேற்கண்ட தகவல்களை நம் FILMISTREET தளத்தில் சில தினங்களுக்கு முன்பு பார்த்தோம்.

இந்த நிலையில் இந்தப் படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என்று தலைப்பிட்டு டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

Get ready for a fresh tale of love!

Here is the title look of #MargazhiThingal, a debut directional film by @manojkumarb_76.

Produced by @Dir_Susi’s #VennilaProductions

@offBharathiraja @gvprakash @vinoth_kishan #SamyukthaViswanathan @ArSoorya #KasiDinesh @KabilanVai

.@vasukibhaskar @DuraiKv @onlynikil @decoffl

Manoj Bharathi Raja directs his father in Margazhi Thingal

More Articles
Follows