தாயகம் விட்டு தாய்லாந்து பறக்கும் ‘இந்தியன்’ கமல்

தாயகம் விட்டு தாய்லாந்து பறக்கும் ‘இந்தியன்’ கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘இந்தியன் 2’ படத்தின் அடுத்த ஷெட்யூல் தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டிரைலரை வெளியிடவுள்ளார்.

மேலும், ’பொன்னியின் செல்வன் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை முடித்தவுடன் அவர் தாய்லாந்து நாட்டுக்கு சென்று நாளை முதல் ‘இந்தியன் 2’ படத்திற்கான தனது பணியைத் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kamal Haasan to leave for Thailand to shoot ‘Indian 2’

‘விடுதலை’யில் இளையராஜாவின் வாய்ப்பை தவற விட்ட பவானி ஸ்ரீ

‘விடுதலை’யில் இளையராஜாவின் வாய்ப்பை தவற விட்ட பவானி ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிப்பவர் ஜி‌வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ .

இவர் தனது சமீபத்திய பேட்டியில் “எனது குடும்பத்தில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இசையுடன் தொடர்புடையவர்கள், ஆனால் நான் மட்டும் இசையில் ஆர்வம் காட்டவில்லை.

இளையராஜா சார் எனக்கு அவரது இசையில் ஒரு பாடலைப் பாட வாய்ப்பு வழங்கியபோதும் நான் அதை செய்யவில்லை” என்றார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் விடுதலை படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

GV Prakash’s sister reveals that she turned down the chance to sing in Ilaiyaraaja’s music

BREAKING : பத்து தல ரிலீஸ். சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

BREAKING : பத்து தல ரிலீஸ். சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள பத்து தல நாளை உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்நிலையில் சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.

சிம்புவின் ‘பத்து தல’ படத்திற்கு சிறப்பு காட்சிகள் இல்லை என விநியோகஸ்தர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு காட்சிகளின் போது ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ‘பத்து தல’ படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணி, 5 மணி காட்சிகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியினால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்

Simbu fans disappointed due to pathu thala early shows cancel

JUST IN நீங்க இல்லாம நானில்லை. எல்லாம் உங்களால்தான்.: ‘பத்து தல’ பரவசத்தில் சிம்பு வீடியோ

JUST IN நீங்க இல்லாம நானில்லை. எல்லாம் உங்களால்தான்.: ‘பத்து தல’ பரவசத்தில் சிம்பு வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரு வெற்றி படங்களை தொடர்ந்து சிம்பு நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் ‘பத்து தல’.

இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் படத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர்.

ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘பத்து தல’.

இந்நிலையில், ரசிக பெருமக்களுக்கு நடிகர் சிலம்பரசன் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

“தமிழக மக்களுக்கு வணக்கம், உங்களுக்கு தெரியும் பத்து தல படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகிறது. படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்குனும், பெரிய ஓபனிங் இருக்குனும் சொல்றாங்க. ஆனால், இதற்கு காரணம் நான் இல்லை. என்னுமுடைய முந்தைய படங்கள் வெற்றி பெற்றதால் தான் இது நடக்கிறது என்பது இல்லை. நீங்க கொடுத்த ஆதரவு மட்டும் தான் இதற்கு காரணம்.

பத்து தல படம் இவ்வளவு பெரிய வெளியீடாக அமைந்தது என்றால் நீங்க கொடுத்த ஆதரவு மட்டும் தான். அதற்கு நான் எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது, ரொம நன்றி. படத்தை தியேட்டருக்கு வந்து பார்த்து கொண்டாடுங்க, குடும்பத்தோடு வாங்க. படம் ரொம்ப நல்லா வந்திருக்கு.

இயக்குநர் கிருஷ்ணா மிக சிறப்பாக படத்தை இயக்கியிருக்கிறார். ரஹ்மான் சாரோட இசை மற்றும் பீஜியம் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே பாடல்களுக்கு நீங்க பெரிய வரவேற்பு கொடுத்திருக்கீங்க. இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கிறேன்.

உங்களோட அன்பும், ஆதரவும் எனக்கு கண்டிப்பாக என்றும் தேவை, நீங்க இல்லாம நான் இல்லை. லவ் யூ ஆல்.” என்று சிலம்பரசன் பேசியிருக்கிறார்.

சிலம்பரசனின் இந்த வீடியோ செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

#PathuThala #STR ‘s loving message to all Tamil people.

#PathuThalaFromTomorrow

#Atman @SilambarasanTR_ @Gautham_Karthik @StudioGreen2 @PenMovies @arrahman @nameis_krishna @priya_Bshankar @NehaGnanavel @Dhananjayang @MangoMassMedia

https://t.co/Y6shGajn1U

I am nothing without you. It’s all because of you – simbu

தொழில்நுட்ப பணிகளின் வீடியோவை பகிர்ந்த ‘பொன்னியின் செல்வன் 2’ படக்குழு

தொழில்நுட்ப பணிகளின் வீடியோவை பகிர்ந்த ‘பொன்னியின் செல்வன் 2’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன் 2’.

இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. படத்தின் ட்ரைலரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளார்.

இந்தநிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் எவ்வாறு எடிட் செய்யப்பட்டது என்பது குறித்த BTS வீடியோவைப் பகிர்ந்து கொள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் 28 இன்று சமூக ஊடகங்களில் உள்ளது.

இந்த வீடியோ தொழில்நுட்பம் மற்றும் ஆடியோ வேலைகளின் ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது மற்றும் வீடியோவில் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம் ஆகியோர் தங்கள் காட்சிகளுக்கு டப்பிங் செய்கிறார்கள்.

Here’s how ‘Ponniyin Selvan 2’ trailer was made!

ஆகஸ்ட் 16 1947 பட விழாவில்.. அஜித் பற்றி சிவகார்த்திகேயன்.. விஜய் பற்றி முருகதாஸ்.; ரஜினி பற்றி பேசிய இருவர்

ஆகஸ்ட் 16 1947 பட விழாவில்.. அஜித் பற்றி சிவகார்த்திகேயன்.. விஜய் பற்றி முருகதாஸ்.; ரஜினி பற்றி பேசிய இருவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆகஸ்ட் 16 1947’.

இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் ரேவதி இணைந்து நடித்துள்ளனர்.

‘அருவி’ பட நாயகி அதிதி பாலனின் தங்கைதான் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மார்ச் 27 மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அவர் முருகதாஸ் பற்றி பேசும்போது..” தன் உதவியாளருக்காக பல நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டவர் முருகதாஸ். இப்போது நான் ரங்கூன் இயக்குனருடன் ஒரு படம் செய்து கொண்டிருக்கிறேன். அவரை எனக்கு சிபாரிசு செய்தவர் முருகதாஸ் தான்.

‘வீரம்’ படத்தில் அஜித் ஒரு டயலாக் சொல்லுவார்.. “நம்ம கூட இருக்கிறவர்களை நாம நல்லா பாத்துக்கிட்டா நம்ம மேல இருக்கிறவன் நம்மள பாத்துப்பான்” என்று அஜித் பட டயலாக்கை பேசினார்.

கௌதம் கார்த்திக் ஒரு சிறந்த மனிதர். இப்போது படத்தில் பணியாற்றிய அனைவரையும் இந்த மேடை ஏற்றி அழகு பார்த்தவர் அவர்.

அவரது தந்தை கார்த்திக்கும் அப்படிதான் எல்லாரையும் டார்லிங் டார்லிங் என்று அழைப்பார். என் நடிப்பில் ரஜினி சார் சாயல் இருக்கும். நான் பாதி சூப்பர் ஸ்டார்.

ஆனால் கௌதம் கார்த்திக் எந்த ஒரு நடிகரின் சாயலும் இல்லாமல் தன்னுடைய சிறந்த நடிப்பை கொடுத்து வருகிறார்.” என்றார் சிவா.

இவரைத் தொடர்ந்து இறுதியாக முருகதாஸ் பேசும்போது..

“என்னுடைய படங்களில் ஆக்சன் காட்சிகள் வைக்கும் போது கண்டிப்பாக அதில் ஏதாவது நிச்சயம் ஒரு ரஜினி சாயல் இருக்கும்.. அதுபோல காதல் காட்சி என்றால் நவரச நாயகன் கார்த்திக்கின் நினைவு தான் வரும்.

துப்பாக்கி படத்தில் விஜய் மற்றும் ஜெயராம் நடிக்கும் காட்சியில் எனக்கு கார்த்தி நினைவு தான் வந்தது. அதை வைத்துதான் விஜய்யை ஒரு டயலாக் சொல்ல வைத்தேன்” என்று பேசினார் முருகதாஸ்.

Sivakarthikeyan & Armurugadoss Speech at august 16 1947 audio launch

More Articles
Follows