ஒரு நாள் முதல்வர் தான் ஆகமுடியல.. ஒரு நாள் கைதியா வாழ ஆசையா.? இதோ செம ஆஃபர்..

ஒரு நாள் முதல்வர் தான் ஆகமுடியல.. ஒரு நாள் கைதியா வாழ ஆசையா.? இதோ செம ஆஃபர்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘முதல்வன்’ படத்தில் ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் நடித்திருப்பார். அது சினிமாவில் நடைபெற்ற ஒன்று.

தற்போது ஒரு நாள் கைதியாக அதுவும் எந்த வழக்கிலும் சிக்காமல், கோர்ட் கேஸ் என செல்லாமல் சிறையில் கைதியாக கம்பி எண்ண ஆசை இருக்கா.?

இந்த விபரீத ஆசை உள்ளவர்களுக்காகவே கர்நாடக சிறைத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா என்ற ஜெயில் உள்ளது.

இந்த சிறையில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சிறையில் தான் ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர்.

‘கைதியின் வாழ்வில் ஒரு நாள்’ என்ற கருத்தை முன்வைத்து, 24 மணிநேரத்திற்கு ஒரு கைதியின் வாழ்க்கையை வாழ அனுமதிக்கும் விதமாக கர்நாடக சிறைத்துறையினர் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.

இப்போது இந்த முயற்சியை செயல்படுத்த அரசின் ஒப்புதலுக்காக சிறைத்துறையினர் காத்திருக்கின்றனர்.

ஒரு நாள் டாஸ்க் என்ன தெரியுமா..?

மற்ற கைதிகளை போலவே சீருடை அணிவது, கைதி எண்ணுடன் மற்ற கைதியுடன் சிறையை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

மற்ற கைதிகளை போல அவர்களுடன் தரையில் தூங்க வேண்டும்.

கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவைச் சாப்பிடுவது மற்றும் கைதிகள் மேற்கொள்ளும் தோட்டக்கலை, சமையல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற பணிகளையும் செய்ய வேண்டும்.” என்கின்றனர்.

மேலும் கைதிகளின் வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதோடு, குற்றச் சம்பவங்களில் சிலர் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலே இதுபோன்ற ‘ஒரு நாள் கைதி’ திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சிறைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அரசு ஒப்புதல் கிடைக்குமா? என்பதை பார்ப்போம்..

Pay Rs 500 live like a prisoner in Belagavis Hindalga Jail.

சூப்பர் ஹிட்டடித்த மோகன்லாலின் ‘ஒடியன்’ பட சாயலில் தமிழில் வரும் ‘கருவு’

சூப்பர் ஹிட்டடித்த மோகன்லாலின் ‘ஒடியன்’ பட சாயலில் தமிழில் வரும் ‘கருவு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆல்ஃபா ஓசியன் எண்டர்பிரைஸ் (ALFA OCEAN ENTERPRISE ) நிறுவனத்தின் சார்பாக சுதீர் இப்ராஹிம் தயாரிக்கும் திரைப்படம் ‘கருவு’.

இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையை அறிமுக இயக்குநரான ஶ்ரீஷ்மா R மேனன் எழுதியுள்ளதோடு அவரே படத்தையும் இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளத்தின் அடையாளங்களில் ஒன்றான மாந்திரீக மாயாஜால கலைகளின் இருள் அரசன் என அழைக்கப்படுபவன் தான் ஒடியன்..

தங்களுக்குப் பிடிக்காத எதிரிகளை பயமுறுத்துவதற்காக இரவு நேரத்தில் மிருகங்களைப் போல தங்களது தோற்றங்களை மாற்றிக்கொண்டு அச்சுறுத்தும் ஒடியனின் உண்மையான வாழ்க்கை சம்பவங்களை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சில வருடங்களுக்கு முன் இதேபோன்ற ஒரு ஒடியனின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதால் இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு, ஒடியனைப் பற்றி எந்த குழப்பமும் இல்லாமல் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

அந்த வகையில் இந்த ‘கருவு’ படமும் சற்றும் குறைவில்லாத மர்மம் மற்றும் த்ரில்லர் காட்சிகளோடு உருவாகியுள்ளது.

டோனி ஜார்ஜ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தின் திகில் மற்றும் த்ரில் காட்சிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரோஷன்.

பிரம்மிக்கும்படி எடிட்டிங் செய்திருக்கிறார் ஹாரி மோகன்தாஸ்

முற்றிலும் புதியவர்களால் உருவான இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

*தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்*

ஒளிப்பதிவு ; டோனி ஜார்ஜ்
இசை ; ரோஷன்.
பாடல்கள் ; பிரசாந்த் J S
படத்தொகுப்பு ; ஹாரி மோகன்தாஸ்.
கலை இயக்குநர் ; ஶ்ரீஜித் ஶ்ரீதரன்
ஒப்பனை ; அனூப் சாபு
ஆடைவடிவமைப்பாளர் ; லாவண்யா.
முதன்மை இணைஇயக்குனர் ; சுக்ருத்.
தயாரிப்பு மேற்பார்வையாளர் ; வினோத் பரவூர்.
இரண்டாவது கேமராமேன் ; சரண்பெரும்பாவூர்.
ஸ்டில்ஸ் ; விஷ்ணு ரகு.
டிஸைன்ஸ் ; அருண்கை
மக்கள் தொடர்பாளர் A. ஜான்.

இந்த திரைப்பட நிறுவனம் அடுத்ததாக ‘பாம்பாடும் சோலை சம்பவங்கள்’ என்கிற மர்மம், கொலை பின்னணி கொண்ட திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறது.

‘தி நைட்’ எனும் த்ரில்லர் படத்தை இயக்கி வரும் ரங்கா புவனேஷ்வர் இப்படத்தை தமிழில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ranga Buvaneshwar mistery thriller titled Karuvu

ரங்கன் வாத்தியார் வர்றார்.; பசுபதியுடன் இணையும் ரோகிணி & அம்மு அபிராமி

ரங்கன் வாத்தியார் வர்றார்.; பசுபதியுடன் இணையும் ரோகிணி & அம்மு அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சார் பட்டா பரம்பரை’ படத்தில் ரங்கன் வாத்தியாராக கலக்கியவர் பசுபதி. அவரின் அடுத்த படம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, ரோகிணி, அம்மு அபிராமி, மயில்சாமி மற்றும் பலர் நடிக்கும் புதிய படமொன்றை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லஷ்மன் குமார், புரொடக்சன் நெ#6-வது படைப்பாக தயாரிக்கிறார்.

ராம் சங்கையா கதை எழுதி இயக்கும் இந்தப் படத்தின் பூஜை, பாடல் பதிவுடன் இன்று இனிதே துவங்கியுள்ளது

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி

ஒளிப்பதிவு ; மகேஷ் முத்துசாமி

எடிட்டிங் ; சிவ நந்தீஸ்வரன்

நிர்வாகத் தயாரிப்பு ; கிருபாகரன் ராமசாமி

தயாரிப்பு மேற்பார்வை ; A. பால் பாண்டியன்

மக்கள் தொடர்பு ; A. ஜான்

இப்படம், சம கால மனிதர்கள், வாழ்வதற்கான போராட்ட சூழலில் சுயநலத்திற்காக செய்யும் தவறுகளை முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ஆக்க்ஷன் கலந்து சொல்கிறது.

தனித்துவமான கதையம்சம் கொண்ட களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் பசுபதி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மற்றும் பிற நடிக நடிகையர், டெக்னிஷியன்கள் விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

Actor Pasupathy’s next film announced

அற்ப விஷயங்களுக்காக மனிதன்..; விக்டர் இயக்கத்தில் இலக்கியா குலுக்கும் ‘மரபு’

அற்ப விஷயங்களுக்காக மனிதன்..; விக்டர் இயக்கத்தில் இலக்கியா குலுக்கும் ‘மரபு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வி. ஐ. பி ஃபிலிம் வழங்கும் இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் “மரபு” படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் அவர்களின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ளது மரபு திரைப்படம்.

தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு.

எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி “மரபு” என்ற பெயரிலே ஒரு புதிய முயற்சியுடன் புதிய படக்குழு களமிறங்குகிறது.

இப்படத்தில் அனுபவமுள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை தியேட்டர்கள் திறக்காத பட்சத்தில் ஆன்லைன் தளங்களிலும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

இப்படத்தின் 50% படபிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

*Cast & Crew*

Hero : Victor

Heroine : Elakiya

Villian : Anand Babu

Hero mother character : Karuthama Rajasree

Producer
Story
Screen play
Dialouge
Direction : Victor Immanuel

VIP films productions new film Marabhu first look released

JUST IN ‘அவன் இவன்’ சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு.; பொய் வழக்கில் விடுதலை கிடைத்தது என பாலா பரவசம்

JUST IN ‘அவன் இவன்’ சிங்கம்பட்டி ஜமீன் வழக்கு.; பொய் வழக்கில் விடுதலை கிடைத்தது என பாலா பரவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்த படம் ‘அவன் இவன்’.

கடந்த 2011ல் இந்த படம் ரிலீசானது.

இப்படத்தில் நெல்லை மாவட்ட சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும், சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றியும் அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனால் சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் மன்னிப்பு தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக இருந்த நிலையிலும் இயக்குனர் பாலா ஆஜராகவில்லை.

எனவே இன்று பாலா கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குனர் பாலா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக பாலா பேசும்போது…” பொய் வழக்கில் இருந்து விடுதலை செய்ததற்கு நன்றி” என்றார்

ஆனால், சிங்கம்பட்டி இளைய ஜமீன் சங்கராத் மஜனிடம் ஆலோசனை பெற்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக இயக்குனர் பாலா மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.

Director Bala released in Avan Ivan movie case

கருணாஸ் மகன் கென்னின் அடுத்த அவதாரம்..; கைகொடுக்கும் தனுஷ் – வெற்றி மாறன்

கருணாஸ் மகன் கென்னின் அடுத்த அவதாரம்..; கைகொடுக்கும் தனுஷ் – வெற்றி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கருணாஸின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். இவரது மனைவி & மகன் ஆகியோரும் கலைத்துறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவரது மகன் கென், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘அசுரன்’ படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்தார்.

இப்படத்தில் கென் நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தது.

இந்நிலையில் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து ‘வாடா ராசா….’ என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.

இப்பாடலை வெங்கி என்பவர் இயக்க சாண்டி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இப்பாடலை கருணாஸ் மனைவி கிரேஸ் பாடியும் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் பாடலில் சித்தி 2 புகழ் ப்ரீத்தி சர்மாவும் நடித்துள்ளார்.

இந்தப் பாடல் இன்று 19 ஆகஸ்ட் மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இந்தப் பாடலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்திலும், வெற்றிமாறன் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிட உள்ளனர்.

Ken Karunaas in Vaada Raasa out today at 5PM!

More Articles
Follows