தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மே 1ஆம் தேதியானது ரஜினி ரசிகர்களால், கபாலி தினமாக பார்க்கப்பட்டது.
அன்றைய தினம் ‘கபாலி‘ டீசர் வெளியாகி உலகளவில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
அதுபோல் இப்படத்தின் தெலுங்கு டீசரும், 39 லட்சம் பார்வைகளைக் கடந்தும், 50 ஆயிரம் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.
இது நேரடியான தெலுங்குப் படங்களை விட பெரிய சாதனையாம்.
பவன் கல்யாணின் ‘சர்தர் கப்பார் சிங்‘ பட டீசரும், ஜுனியர் என்டிஆரின் ‘நன்னகு பிரேமதோ‘ ஆகிய படங்களின் டீசர் மட்டுமே இதுவரை 50 ஆயிரம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.
மேலும் அண்மையில் வெளியான கபாலி படத்தின் பாடல்களும் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.
பாடலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும்…
1. ‘நெருப்புடா…‘ பாடல் 50 லட்சம்
2. ‘உலகம் ஒருவனுக்கா…‘ பாடல் 19 லட்சம்
3. ‘வானம் பார்த்தேன்…‘ பாடல் 11 லட்சம்
4. ‘வீர துரந்தரா…‘ பாடல் 10 லட்சம்,
5. ‘மாய நதி…‘ பாடல் 10 லட்சம்
இவை தென்னிந்திய சினிமாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.