தமிழக முதல்வராக விஜயகாந்த்தை…..; பவர்ஸ்டார் பவன் கல்யாண் இரங்கல்

தமிழக முதல்வராக விஜயகாந்த்தை…..; பவர்ஸ்டார் பவன் கல்யாண் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தெலுங்கு நடிகரும் அரசியல் அரசியல் கட்சித் தலைவருமான பவர் ஸ்டார் பவர் கல்யாண் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில்….

திரு. விஜயகாந்தின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..

புரட்சிக் கலைஞர், தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் திரு.விஜயகாந்த்தின் படங்கள் தெலுங்கு ரசிகர்களாலும் விரும்பப்படுகிறது.

குடும்பக் கதைகளுடன், சமூகக் அக்கறை கொண்ட ஆக்‌ஷன் படங்களிலும் நடித்துள்ளார். 2005-ல் திரு. விஜயகாந்த் கட்சியை அறிவித்த நாளில் மதுரை பகுதியில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்குள்ள மக்களின் புரட்சியை, சந்தோஷத்தை நேரடியாகப் பார்த்தேன்.

திரு.விஜயகாந்த் மக்கள் பக்கம் நிற்கும் விதமும், ஒரு பிரச்சனை வரும் போது போராடி துணை நிற்கும் விதமும் போற்றத்தக்கது. துன்பத்தில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான அணுகுமுறையுடன் பதிலளித்தார். தனது முதல் அடியில் அவர் சந்தித்த முடிவுகளால் மனம் தளராமல் அரசியலில் நின்றார். இது அவரது போராட்ட குணத்தை காட்டுகிறது.

சூழ்நிலைக்கு எதிராக சிங்கம் போல் நின்றார். சினிமாவில் உள்ள சிலர்களால் அவர் அவமானங்களை சந்தித்தாலும் அவர் பின்வாங்கவில்லை. யாருக்கும் அஞ்சாமல் தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பக்கம் நின்றார்.

கடந்த 2014ம் ஆண்டு பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் திரு விஜயகாந்த் அவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர் தமிழகத்தில் முதல்வர் ஆவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவரது உடல்நிலை படிப்படியாக மோசமடைந்ததால் அவர் அந்த முதல்வர் நாற்காலி வரை செல்ல முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

திரு. விஜயகாந்த்தின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மனைவி ஸ்ரீமதி. பிரேமலதா அரசியல் பாதையை தொடர்வார் என நம்புகிறேன்.

(பவன் கல்யாண்)
தலைவர் – ஜனசேனா

Pawankalyans condolence message on the sudden demise of Vijayakanth

சினிமாவில் அரசியல் தெரியாதவர்.. அரசியலில் நடிக்க தெரியாதவர்.; விஜயகாந்துக்கு அருண் பாரதி இரங்கல்

சினிமாவில் அரசியல் தெரியாதவர்.. அரசியலில் நடிக்க தெரியாதவர்.; விஜயகாந்துக்கு அருண் பாரதி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு பாடல் ஆசிரியர் அருண் பாரதி எழுதியுள்ள கவிதை இரங்கல்..

அஞ்சலி கவிதை
——————————-

மதுரை மாகாளிபட்டியிலிருந்து
மாநகரம் சென்னைக்கு வந்த
கருப்பு சூரியன்

அரசியலில் ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போதே களத்தில் குதித்த
நெருப்பு சூரியன்

சினிமாவில்
அரசியல் செய்யத் தெரியாதவர்
அரசியலில்
சினிமாபோல நடிக்கத் தெரியாதவர்

கதாநாயகனாக தோன்றிய
முதல் படம் மட்டுமல்ல
இருட்டிலிருந்த பலரை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில்
இவர் ஓர் அகல்விளக்கு
வெளிச்சம் குறையாத பகல்விளக்கு

தவிக்கும் நெஞ்சங்களின் தவிப்பறிந்து
தர்மங்கள் செய்ததால்
இவர் ஏழை ஜாதி

அரிசி ஆலையில்
பணியாற்றியதாலோ என்னவோ
பலரின் பசியறிந்து பசிதீர்த்த
பாமர ஜோதி

புரட்சிக் கருத்துகளை
திரையில் விதைத்த
புரட்சித் தலைவரின்
இரண்டாம் பாதி

முத்தமிழ் அறிஞர்
கலைஞரை நேசித்து
அன்பு பாராட்டியதில்
இவர் நெஞ்சுக்கு நீதி

விஜயகாந்த் – இது
கடவுள் கொடுத்த கொடைக்கு
காலம் வைத்த பேரு

கோடான கோடி மக்களின்
நினைவுப் புத்தகத்தில்
இவர் எப்போதும்
நிரந்தர வரலாறு

-கவிஞர் அருண்பாரதி
திரைப்பட பாடலாசிரியர்

Lyricist Arunbhaarathi condolences demise of Captain Vijayakanth

விஜயகாந்த் மறைவு..: நாளை அரசு மரியாதை உடன் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம்

விஜயகாந்த் மறைவு..: நாளை அரசு மரியாதை உடன் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவருக்கு தற்போது வயது 72.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காலமானாலும் கிட்டத்தட்ட காலை 9 மணிக்கு தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் விஜயகாந்த்.

நிமோனியா காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று ஆகியவையும் அவரைத் தொற்றிக் கொண்டது எனவே சிகிச்சை பலனின்றி காலமானார்.

தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மக்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் உடல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் டிசம்பர் 29 நாளை மாலை 4.45 மணி அளவில் கட்சி அலுவலகத்தில் முன்பு பகுதியில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என எல் கே சுதீஷ் அறிவித்துள்ளார்.

TN govt announces state honours for Vijayakanths funeral

JUST IN விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த்

JUST IN விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவருக்கு தற்போது வயது 72.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காலமானாலும் கிட்டத்தட்ட காலை 9 மணிக்கு தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் விஜயகாந்த்.

நிமோனியா காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று ஆகியவையும் அவரைத் தொற்றிக் கொண்டது எனவே சிகிச்சை பலனின்றி காலமானார்.

தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மக்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலில் உடல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாளை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாகர்கோயிலில் ‘வேட்டையன்’ படப்பிடிப்பில் உள்ள ரஜினிகாந்த் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார் எனத் தகவல்கள் வந்துள்ளன.

Rajini cancelled Vettaiyan shooting to pay last respect to Vijayakanth

எம்ஜிஆர் அடுத்து நம்பிக்கையான தலைவர்.; விஜயகாந்த் மறைவிற்கு சிவகுமார் இரங்கல்

எம்ஜிஆர் அடுத்து நம்பிக்கையான தலைவர்.; விஜயகாந்த் மறைவிற்கு சிவகுமார் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசியலில்
எம்.ஜி.ஆரை அடுத்து
நம்பிக்கையான
ஒரு தலைவராக
உருவாகிக் கொண்டருந்தவர் விஜயகாந்த்.

ஆயிரக்கணக்கில் ரசிகர்களை
மாதம் ஒருமுறை
நேரில் சந்தித்ததை
கோபி படப்பிடிப்பில்
பார்த்துள்ளேன்.

தி.நகர் ரோகிணி லாட்ஜில்
உள்ள தன் அறையில்
நண்பர்களை தங்கவிட்டு
படப்பிடிப்பு முடிந்து வந்து
வெராண்டாவில் படுத்துக்கொள்வார்.

எளிமையானவர், நேர்மையானவர்.
நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர்.
‘சாமந்திப்பூ’ -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். ‘புதுயுகம்’ – படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார்..

கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் சிவக்குமார் தன் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sivakumar condolences message for Captain Vijayakanth

RIP VIJAYAKANTH விஜயகாந்த் ஆக மாறிய விஜயராஜ்.; கேப்டனின் வாழ்க்கை.. : சினிமா முதல் அரசியல் வரை.!

RIP VIJAYAKANTH விஜயகாந்த் ஆக மாறிய விஜயராஜ்.; கேப்டனின் வாழ்க்கை.. : சினிமா முதல் அரசியல் வரை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு

நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் இன்று டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவருக்கு தற்போது வயது 72.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காலமானாலும் கிட்டத்தட்ட காலை 9 மணிக்கு தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் விஜயகாந்த்.

நிமோனியா காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று ஆகியவையும் அவரைத் தொற்றிக் கொண்டது எனவே சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது வாழ்க்கை குறிப்பு இதோ..

ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ்.

மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த விஜயகாந்த், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

சிறு வயது முதல் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்ததால், பார்த்த சினிமாக்களை நண்பர்களிடம் காட்சிவாரியாக பேசி மகிழ்வார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்சன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அந்தப் படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார்.

சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் நண்பர்கள் வடத்தை அதிகமாக்கியது. நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மகன் படிக்கவில்லை என்றதும் கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை விஜயகாந்தை கவனித்துக் கொள்ள வைத்தார், அவரது தந்தை.

நண்பர்கள் கூடி பேசும் கட்டிடத்துக்கு மேலே சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகம் இருந்தது. மதுரை மாவட்டத்தில் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மர்சுக் என்பவர், விஜயகாந்துக்கும், அவரது நண்பர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் ஆட்டுக்கார அலமேலு படத்தை மதுரை ஏரியாவுக்கு வாங்கி வெளியிட்ட போது, அந்த மாவட்டம் முழுவதும் அந்தப் படம் வெளியான திரையரங்குகளுக்கு ஆடு அழைத்து சென்று விளம்பரம் செய்ய உதவியாக இருந்தார், விஜயகாந்த்.

இந்த னியாளியில் தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்கிடம் தனது எண்ணத்தை தெரிவித்திருக்கிறார், விஜயகாந்த்.

விஜயகாந்தை சென்னைக்கு வரவழைத்து இயக்குநர் பி. மாதவனிடம், இவர் என் தம்பி மாதிரி என்று அறிமுகப்படுத்தி, விஜயகாந்துக்கு நடிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

அப்போது இயக்குநர் பி. மாதவன் என் கேள்விக்கு என்ன பதில் என்கிற படத்தை இயக்கும் வேலையில் இருந்தார். அந்தப் படத்தை மதுரை ஏரியாவிற்கு சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக் வாங்கி இருந்தார்.

ரஜினியை போன்று முடிவேட்டும், ஸ்டைலுமாக இருந்த விஜயகாந்தை பார்த்ததும், இயக்குநர் பி.மாதவனுக்கு பிடித்துவிட்டதாம். அந்தப் படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க வைத்துவிடலாம் என்று தெரிவித்தாராம்.

அதன் பிறகு சாலிகிராமத்தில் இருந்த சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகத்தில் தாங்கியவாறு பல கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி சென்றார், விஜயகாந்த்.

சுதாகர், ராதிகா நடிப்பில் இனிக்கும் இளமை படத்தை தொடங்கினார், இயக்குநர் எம்.ஏ.காஜா. அவர் தனது நெருங்கிய நண்பர் என்பதால், அவரிடம் விஜயகாந்துக்கு சிபாரிசு செய்து, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

விஜயகாந்தை நேரில் வரவழைத்துப் பார்த்த எம்.ஏ.காஜா, தனது இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை விஜயகாந்துக்கு வாங்கினார்.

பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயகாந்த, அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அகல்விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான்.

சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு முதலில் பிரபுவிடம் கதை சொன்ன இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இது ஆக்சன் கதையாக இருக்கே என்று பிரபு தயங்கியதும், பிறகு நிறைய புதுமுகங்களை அழைத்துப் பார்த்தார்கள் யாரும் தேறவில்லை.

ஒரு நாள் உதவி இயக்குனர்களுடன் வாகினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயகாந்தின் நெருப்பு கண்கள் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்துவிட்டது. உடனே அவரை பிடிக்க சொல்லி உதவியாளரை விரட்டி இருக்கிறார். அவர்கள் விஜயகாந்தை அழைத்து வந்தார்கள்.

நாங்கள் ஒரு படம் எடுக்க இருக்கிறோம். நீங்கள் நடிக்கிறீங்களா என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்க, நான் நடிக்கத்தான் டிரய்ப்பன்னிக்கிட்டு இருக்கேன். இப்போது ஒரு படத்தில் நடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்லி தனது பெயர் விஜயராஜ் என்று கூறி இருக்கிறார்.

அப்போது விஜயகாந்துக்கு விஜயராஜ் என்று பெயர். அதன் பிறகு தொடங்கியதுதான் சட்டம் ஒரு இருட்டறை படம்.

தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க இயக்கினர், எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவப்பு மல்லி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.

வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம்’, ‘ஊமை விழிகள்’, ‘கூலிக்காரன்’ , ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘பூந்தோட்ட காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ ‘புலன் விசாரணை’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.

153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது செந்தூரப்பூவே படத்திற்காக பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் குரவங்களையும் பெற்றிருக்கிறார்.

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார்.

மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை!’ என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை இயக்குநர் அமைப்புடன் இணைந்து நெய்வேலியில் நடத்தினார்.

1990 ஆம் ஆண்டு பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

அதன் பிறகு அரசியலில் ஆர்வம் கொண்ட விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

கட்சி தொடங்கிய சில நாட்களிலேயே அதிமுக திமுகவுக்கு நிகராக உருவாக்கினார். அதிமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் பதவி வகித்தார். அப்போது திமுக மூன்றாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vijayakanth life history from Cinema to politics

More Articles
Follows