தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினியின் கபாலி படத்தின் டீசர் சாதனைகளை இந்திய திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறது.
தமிழ் டீசர் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி டீசரும் சாதனை படைத்து வருவதால் கபாலி மீதான எதிர்பார்ப்பு இந்தியளவில் உயர்ந்து வருகிறது.
இப்படத்தின் தமிழ் டீசரை இதுவரை 2 கோடியே 35.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், தெலுங்கு டீசரை 42.1 லட்சத்திற்கு மேற்பட்டவர்களும், ஹிந்தி டீசரை 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் பார்த்திருக்கிறார்களாம்.
நெருப்புடா பாடல் டீசரை 66 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்றுள்ளது.
ஆக மொத்தம் 35 மில்லியன் (3 கோடியே 53.1 லட்சத்திற்கு) மேற்பட்டவர்கள் கண்டுகளித்துள்ளனர்.
படம் வருவதற்குள் இன்னும் எத்தனை சாதனைகளை கபாலி நிகழ்த்த போகிறார்..? என திரையுலகமே காத்திருக்கிறது.
இது முடியாது… அடங்காது போலவே….