தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் ரஜினி படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்த முறை ரஜினி தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டதால் காலாவிற்கு விண்ணை முட்டும் உச்சகட்ட எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படமும் அரசியல் சார்ந்தே இருக்கும் என கூறப்படுகிறது.
எனவே தமிழகத்தில் ‘காலா’வுக்கு போட்டியாக வேறெந்த படமும் வெளியாகப் போவது கிடையாது.
இதற்கு முன் அறிவிக்கப்பட்டு இருந்த ‘மிஸ்டர். சந்திரமௌலி’ படத்தின் வெளியீடு தேதியை மாற்றிக்கொள்வதாக அந்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்துவிட்டது.
தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவிலும் ரஜினிக்கு மிகப்பெரிய மார்கெட் உள்ளது.
ஆனால் மகேஷ்பாபுவின் அரசியல் த்ரில்லர் படமான ‘பரத் அனே நேனு’ படமும் (ஏப்ரல் 26ம் தேதி) வெளியாகிறது.
இதில் மகேஷ்பாபு முதல்வராக நடித்து இருப்பதால் இந்த தேதியை மாற்ற முடியாது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டிஸ்னி, ‘அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்’ என்ற தங்களின் பிரம்மாண்ட படைப்பை அமெரிக்காவில் வெளியிடும் முன்னரே ஏப்ரல் 27 அன்று இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ‘அவெஞ்சர்ஸ்’ படம் திரையிடப்படவுள்ளது.
மேலும் சில ஹிந்தி திரைப்படங்களும் காலாவுக்கு போட்டியாக வரும் என சொல்லப்படுகிறது.






