தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு தன் குடும்பத்தாருடன் அமெரிக்கா சென்ற அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டது.
ஆனால் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் 2.0 படத்தின் மேக்கப் டெஸ்ட்டுக்காக அங்கு இருக்கிறார் என்ற செய்திகள் உறுதியானது.
இந்நிலையில் இன்று ஒரு இணையதளத்தில் (ஒளி பெயரைக் கொண்ட இணையத்தளம்) இவரது உடல் நிலை குறித்து மோசமான செய்தியை வெளியிட்டுள்ளது.
இச்செய்தி வெளியான சில நிமிடங்களில், சமூக வலைத்தளம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றி கொண்டது.
இதனை உறுதிப்படுத்த ரஜினி தரப்பில் கேட்ட போது… “ரஜினிகாந்த் உடல் நலத்துடன் நலமாக இருக்கிறார்.
அந்த இணையத்தளம் தவறான செய்தியை வெளிட்டுள்ளது. எந்த வதந்திகளையும் யாரும் நம்ப வேண்டாம்” என தெரிவித்தனர்.