‘புதிய இந்தியா பிறந்தது…’ மோடியை வாழ்த்திய ரஜினி

‘புதிய இந்தியா பிறந்தது…’ மோடியை வாழ்த்திய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini modiபாரத பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபின் சுத்தமான இந்தியா உள்ளிட்ட பல ஆரோக்கியமான விஷயங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (நவம்பர் 8, 2016) கள்ள நோட்டை ஒழிக்கும் விதமாக ரூ. 1000 மற்றும் ரூ. 500 நோட்டுக்கள் செல்லாது என இரவு 8 மணிக்கு திடீரென அறிவித்தார்.

இது இந்தியளவில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது… ”

“வாழ்த்துகள் மோடி. புதிய இந்தியா பிறந்துள்ளது. ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.

Rajinikanth ‏@superstarrajini
Hats off @narendramodi ji. New India is born #JaiHind

ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் கறுப்பு பணத்தை ஒழிக்கும் கேரக்டரில் ரஜினி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

‘பாம்பு சட்டை’க்கு கை கொடுக்கும் விஷால்

‘பாம்பு சட்டை’க்கு கை கொடுக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal bobby simha keerthy sureshஇயக்குனருமான நடிகருமான மனோபாலா தயாரித்துள்ள படம் பாம்பு சட்டை.

நீண்ட காலமாக பல பிரச்சினைகளால் முடங்கி கிடந்த இப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

அறிமுக இயக்குநர் ஆடம்தாசன் இயக்கியுள்ள இப்படத்தில் பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர்.

அஜேஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் இப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளது.

இதை நடிகர் விஷால் நாளை நவம்பர் 9 ஆம் தேதி வெளியிடுகிறார்.

‘பாம்பு சட்டை’ படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருக்கும் ‘சினிமா சிட்டி’ கே கங்காதரனோடு இணைந்து, அபி & அபி நிறுவனத்தின் இப்படத்தை வெளியிடஉள்ளனர்.

‘கடவுள் இருக்கான் குமாரு’க்கு தடை நீங்கியதா?

‘கடவுள் இருக்கான் குமாரு’க்கு தடை நீங்கியதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash nikki galrani anandhiராஜேஷ் இயக்கத்தில் முதன்முறையாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள படம் கடவுள் இருக்கான் குமாரு.

இப்படம் நாளை மறுநாள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

அம்மா கிரயேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள இப்படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம் புலி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் டீசர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘லிங்கா’ படம் வெளியீட்டின் போது ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என்று கூறி ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்துக்கு தடை விதிக்கக்கோரி மெரினா பிக்சர்ஸ் சார்பில் விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து 2 வாரம் காலம் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து கோர்ட் உத்தரவிட்டது.

தற்போது இதுகுறித்து இதன் தயாரிப்பாளர் டி. சிவா கூறியதாவது…

“இதன் வழக்கு விசாரணையே நாளைதான் நடைபெற உள்ளது.

ஆனால் படத்தை முடக்க சிலர் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்களின் கனவு நனவாகாது” என்றார்.

ரூ. 50 கோடி கிளப்பில் தனுஷின் ‘கொடி’

ரூ. 50 கோடி கிளப்பில் தனுஷின் ‘கொடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush kodiதுரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்த படம் கொடி.

வெற்றிமாறன் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இதில் த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன், எஸ்ஏ. சந்திரசேகரன், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தீபாவளிக்கு (அக், 28) வெளியான இப்படம் தற்போது வரை ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே, இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.

அஜித்-விஜய்யை முந்தி ரஜினிக்கு அடுத்து சூர்யா செய்த சாதனை

அஜித்-விஜய்யை முந்தி ரஜினிக்கு அடுத்து சூர்யா செய்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini suriyaதமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிக்கு அடுத்த சாதனைகளை விஜய் மற்றும் அஜித் படங்களே படைத்து வருகின்றன.

மேலும் இவர்களின் பட டீசர் மற்றும் ட்ரைலரிலும் இந்த சாதனைகள் யூடிப்பில் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று (7.11.2016) மிகச்சரியாக மாலை 6 மணிக்கு ஞானவேல்ராஜா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ் 3 படத்தின் டீசர் வெளியானது.

தற்போது 24 மணி நேரங்களை கடந்துள்ள நிலையில் இதன் சாதனை பட்டியலை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.

அதாவது கபாலி படத்திற்கு பிறகு, குறைந்த நேரத்தில், 3 மில்லியன் (30 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளதாக அறிவித்து அதற்கான படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் சில தகவல்கள் இதோ….

  • 24 மணி நேரத்தில் கபாலி டீசரை 51 லட்சம் பார்த்தனர். (5.1 மில்லியன்)
  • 24 மணி நேரத்தில் பைரவா டீசரை 2.70 லட்சம் பேர் பார்த்தனர். (2.7 மில்லியன்)
  • 24 மணி நேரத்தில் தெறி டீசரை 2.30 லட்சம் பேர் பார்த்தனர். (2.3 மில்லியன்)
  • 24 மணி நேரத்தில் தெறி ட்ரைலரை 1.97 லட்சம் பேர் பார்த்தனர். (1.97 மில்லியன்)

 

s3 teaser record

 

3m singam s3

ரஜினிக்காக ரொமான்டிக் வாய்ஸ் கொடுக்கும் பிரிட்டிஷ் பாடகர்

ரஜினிக்காக ரொமான்டிக் வாய்ஸ் கொடுக்கும் பிரிட்டிஷ் பாடகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

british singer for rajiniஷங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிஜாக்சன், அக்சய்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் ‘2.0 படத்தின் சூட்டிங் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

எனவே படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானும் முழுவீச்சில் பாடல் கம்போசிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நவம்பர் 20ஆம் தேதி இதன் பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது.

எனவே படக்குழுவே மிகுந்த உற்சாகத்துடன் இருந்து வருகிறது-

இந்நிலையில் இதில் இடம் பெற்றுள்ள ஒரு ரொமான்டிக்கான பாடலை பிரிட்டிஷ் பாடகர் அர்ஜுன் குமாரராஜா பாடியிருக்கிறாராம்.

இந்த ஆல்பத்தில் ஐந்து, ஆறு பாடல்கள் இருந்தாலும் படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெறும் என்பதை முன்பே பார்த்தோம்.

ஒருவேளை அப்பாடல் இந்த பாடலாக இருக்குமோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

More Articles
Follows