தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலிடா, நெருப்புடா என தமிழகமே பரபரத்து கொண்டிக்கும் வேளையில், ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். எனவே அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் மீடியாக்களை ஆக்ரமித்தன.
அமெரிக்கா சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டதால், ரஜினியின் வருகைக்காக கபாலி படக்குழுவும் ஷங்கரின் 2.0 படக்குழுவும் காத்திருக்க தொடங்கின.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து ரஜினிகாந்த் நாளை (3-ம் தேதி) சென்னை திரும்புகிறார் என தகவல்கள் வந்துள்ளன.
எனவே விமான நிலையத்தில் ரஜினியை வரவேற்க ரசிகர்களும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மறுநாளே 4ஆம் தேதி தயாராக உள்ள கபாலி பர்ஸ்ட் காப்பியை பார்க்க இருக்கிறாராம்.
அதன்பின்னர் 7ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்படுகிறது.
சென்சார் சான்றிதழ் கிடைத்த உடன் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுவரை வந்துள்ள தகவல்களின் படி கபாலி 22ஆம் தேதி ரிலீசாகும் என்பதே உறுதியாக தெரிகிறது.