தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி ரிலீஸை எதிர்நோக்கி வருடங்கள், மாதங்கள், வாரங்கள் என ஒவ்வொன்றாய் கரைந்து தற்போது நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
இப்படம் தொடர்பாக ஒவ்வொரு சுவாரஸ்ய தகவல்கள் கசிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த், மூன்று மொழி பேசி நடித்திருக்கிறாராம்.
தமிழ், மலாய் மற்றும் சீன மொழி பேசி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் மலாய் வில்லன், சீன வில்லன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்திருப்பதால் அவர்களுடன் மோதும் காட்சிகளில் இம்மொழிகளை பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.