தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி வருகிற ஜீலை 22ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஆனால் அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே ரஜினிகாந்த் சென்னை வரவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சச்சிதானந்தா கோயிலில் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினி சாமி தரிசனம் செய்துள்ள போட்டோக்கள் வெளியாகியுள்ளன.
இதனை ஐஸ்வர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்ற வதந்திகள் வந்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் உற்சாகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.