ரஜினி தான்யா பழைய முகம்; கபாலியை கைவிட்ட கடுப்பில் ராதாரவி.?

radha ravi and rajiniரஜினிகாந்த் நடிப்பில் உருவான கபாலி படத்தை ரஞ்சித் இயக்க, கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2016ல் வெளியாகி உலகளவில் பேசப்பட்டது.

இதில் ஒரு முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கவிருந்தாராம். ஆனால் இறுதியாக ராதாரவி பழைய முகமாக இருக்கிறார். அதனால் புது முகத்தை போடலாம் என ரஞ்சித் கலைப்புலி தாணுவிடம் சொல்லிவிட்டாராம்.

அந்த படத்தில் பழம்பெரும் நடிகர் சங்கிலி முருகன் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது வேறு கதை.

இது நடந்து முடிந்து 3 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், தற்போது அதுபற்றிய ஒரு தகவலை நடிகர் ராதாரவி ஒரு நிகழ்ச்சியி பேசியுள்ளார்.

என்னை பழைய முகம் என்று வேண்டாம் என சொல்லிவிட்டார். ஆனால் நான் அப்போதே இருப்பதிலேயே ரஜினி தானே பழைய முகம் என்று நான் சொன்னேன் என்கிற தகவலையும் ராதாரவி அந்த நிகழ்ச்சியில் சொல்லியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கபாலி இயக்குனர் ரஞ்சித்தும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Related News

கும்பகோணத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கபாலி,…
...Read More
இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம்.…
...Read More

Latest Post