ஹாலிவுட்டில் நுழையும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்

ஹாலிவுட்டில் நுழையும் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி & பாகுபலி 2 படங்களுக்கும் அதன் பிறகும் உருவான பிரபாஸின் படங்களுக்கும் பான் இந்தியா படம் என அந்தஸ்து கிடைத்துள்ளது.

சாஹோ & ராதே ஷ்யாம் ஆகியவை 5 மொழிகளில் உருவாகி இந்தியளவில் ரிலீசானது. ஆனால் இவை இரண்டும் பிரபாசிக்கு தோல்வி படங்களாக அமைந்தன.

தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார், ஆதிபுரூஷ் படங்கள் உருவாகி வருகின்றன.

ராதே ஷ்யாம் படு தோல்வி.. பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்தாரா பிரபாஸ்.?

மேலும் அஸ்வின் நாக் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹாலிவுட் படம் ஒன்றில் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறாதாம்.

எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Prabhas all set to make hollywood debut

இளையராஜாவின் ‘உலகம்மை’ இசை விழாவில் பங்கேற்று வாழ்த்திய பாரதிராஜா

இளையராஜாவின் ‘உலகம்மை’ இசை விழாவில் பங்கேற்று வாழ்த்திய பாரதிராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய் பிரகாஷ்.

இவர் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இருப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை தான் இந்த ‘உலகம்மை’.

ஒரே இளையராஜா-தான்.. ஒரே பாரதிராஜா-தான்.; படம் பார்க்குறவங்க கஷ்டப்படக்கூடாது.. – இசைஞானி

பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

“உலகம்மை” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 96, மாஸ்டர் படங்களில் நடித்த கௌரி கிஷன் கதையின் நாயகியாக நடிக்கின்றார்.

வெற்றி மித்ரன் நாயகனாக நடிக்கிறார்.

இவர்களுடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இன்று சென்னையில் இளையராஜா ஸ்டூடியோவில் இளையராஜா முன்னிலையில் இப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார் இயக்குனர் பாரதிராஜா.

ஆத்தா-வை கைவிட்ட பாரதிராஜா..; இளையராஜா கூட்டணி முறிவு..

இயக்கம் – விஜய் பிரகாஷ், தயாரிப்பு – V.மகேஷ்வரன் (SVM புரொடக்‌ஷ்ன்ஸ்), இசை – இசைஞானி இளையராஜா,
கதை (நாவல்) – சு.சமுத்திரம்,
ஒளிப்பதிவு – K.V.மணி, வசனம் – குபேந்திரன்

திரைக்கதை – சரவணன், கலை – வீரசிங்கம், படத்தொகுப்பு – ஜான் அப்ரஹம், உடைகள் – ஜெயபாலன்
ஒப்பனை – பாரதி

Bharathi Raja praises Ilaiyaraja at Ulagammai audio release

‘டெடி’ டைரக்டருடன் இணைந்த ஆர்யா சிம்ரன் ஐஸ்வர்ய லக்‌ஷ்மி்

‘டெடி’ டைரக்டருடன் இணைந்த ஆர்யா சிம்ரன் ஐஸ்வர்ய லக்‌ஷ்மி்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கியதன் மூலம் உற்சாகத்தில் இருந்தார் ஆர்யா.

ஆனால் அரண்மனை 3 அட்டர் ப்ளாப் ஆனதால் அப்செட்டில் இருந்தார். எனவே அடுத்த வெற்றிக்காக காத்திருக்கிறார்.

ஆர்யா நடிப்பில் அடுத்து வரவிருக்கும் ‘கேப்டன்’ படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

“டெடி” என்ற பிரமாண்டமான படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கு இட்டு செல்லும் வகையில், அனைவரையும் ஈர்க்கும் படி அமைந்துள்ளது.

ஆர்யா நல்லா நடிக்கிறான்.. ரொம்ப அடிக்கிறான்.. வலி தாங்கல – விஷால்

நம்பமுடியாத ஆச்சர்யமான உண்மை என்னவென்றால், இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்க, படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளது. கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட பாத்திரம் சரியான நிலையை அடைய, ஒவ்வொரு மூலக்கூறும் பிக்சல்கள் மூலம் வளர்க்கப்பட வேண்டும். இந்த ஃபர்ஸ்ட்லுக் உருவாக்கியதன் முக்கிய நோக்கம், இதுவரை பார்த்திராத சிறப்பான திரை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரவேண்டும் என்பதே ஆகும்.

இதுதவிர, இந்த சிங்கிள் ஃப்ரேம், திரைப்படத்தை பற்றிய ஒரு வடிவத்தை தருகிறது, ரத்தம் சூடுபிடிக்கும் பரபர திரில் சவாரியாக இப்படம் இருக்கும்.

இந்த திரைப்படத்திற்காக ஆர்யா தந்த அயராத உழைப்பு, தீராத அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆர்யா எனும் அற்புதமான நடிகர் ‘கேப்டன்’ படத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தார் என்று முழு படக்குழுவும் சாட்சியமளிக்கிறது,.

மேலும் இந்த படத்தில் அவரது கதாபாத்திர தோற்றத்தை வெளியிட படக்குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“கேப்டன்” திரைப்படத்தை Think Studios நிறுவனம், நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது.

ஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமியுடன் இணைந்த ‘மலையாளி’ குஞ்சாக்கோ போபன்

படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்யாவைத் தவிர இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர்.

“கேப்டன்” படத்திற்கு, D.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார்.

யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படதொகுப்பு செய்துள்ளார். R.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, S.S. மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார். V.அருண் ராஜா CG ஹெட்டாக பணியாற்றுகிறார்.

இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

Arya joins Teddy director again

செலிபிரட்டி க்ரெஷ்..; தளபதி 66 பூஜையில் விஜய்க்கு திருஷ்டி கழித்த ராஷ்மிகா

செலிபிரட்டி க்ரெஷ்..; தளபதி 66 பூஜையில் விஜய்க்கு திருஷ்டி கழித்த ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

‘பீஸ்ட்’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படம் இது. தற்காலிக பெயராக ‘தளபதி66’ என வைத்துள்ளனர்.

இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்த படத்தின் நாயகியாக தெலுங்கில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

அஜித்தை மிரட்டியவர் விஜய்க்கு வில்லனாகிறார்..; ஏப்ரல் 6ல் ‘தளபதி 66’ படப்பூஜை

நேற்று ஏப்ரல் 5 ராஷ்மிகாவின் பிறந்தநாள் என்பதால் இந்த அறிவிப்பை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக படக்குழு அறிவித்துள்ளது.

தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஏப்ரல் 6 முதல் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இன்று விஜய் 66 படத்தின் பூஜை, சென்னையில் கோகுலம் ஸ்டூடியோவில் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் விஜய்யுடன் முதன்முறையாக இணைவதால் ஏகப்பட்ட குஷியில் ராஷ்மிகா இருக்கிறார் என்பதை அந்த படங்களை பார்த்தாலே தெரிகிறது.

ஒரு படத்தில் ஊர் கண்ணே பட்டுள்ள விஜய்க்கு திருஷ்டி கழிக்கிறார் ராஷ்மிகா.

ராஷ்மிகா விஜய்யின் தீவிர ரசிகையாம். ராஷ்மியின் செலிபிரட்டி க்ரெஷ் விஜய்தானாம்.

Rashmika Mandanna’s Fan girl moment at Thalapathy 66 movie pooja event

நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

நானும் விஜய் ரசிகர்தான்.; ‘பீஸ்ட்’ ட்ரைலருக்கு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படம் அடுத்த வாரம் ஏப்ரல் 13ம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

எனவே இதன் தெலுங்கு & ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இப்பட டிரைலர் வெளியானது.

அந்த டிரைலரைப் பார்த்து தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய பாராட்டுக்களை பதிவிட்டுள்ளார் பாலிவுட் நடிகரான ஷாரூக்கான்.

‘பீஸ்ட்’ டிரைலர் திரையிடல்.. தியேட்டரை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்..; ரஜினியை போல் விஜய் நஷ்ட ஈடு கொடுப்பாரா.?

“டைரக்டர் அட்லியுடன் நான் அமர்ந்திருக்கிறேன், அவர் எந்த அளவிற்கு விஜய்யின் பெரிய ரசிகரோ அதே அளவிற்கு நானும் ரசிகர் தான்.

பீஸ்ட் குழுவிற்கு பெஸ்ட் ஆக அமைய வாழ்த்துகள். டிரைலர் மீனர்…லீனர்… ஸ்ட்ராங்கர்…ஆக உள்ளது,” எனப் பாராட்டியுள்ளார்.

விஜய்யின் ‘பீஸ்ட்’ பட டிரைலரைப் பாராட்டியதோடு, தானும் விஜய் ரசிகர் தான் என ஷாரூக் பதிவிட்டுள்ளதை தளபதி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Shah Rukh Khan praises Vijay’s beast trailer

அருண் விஜய் நடித்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் சூர்யா

அருண் விஜய் நடித்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த படமான ” ஓ மை டாக்”(oh my dog) 21 ஏப்ரல் 2022 அன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளது அமேசான் பிரைம் வீடியோ.

இந்த படம் ” 2D என்டர்டெய்ன்மென்ட்” பேனரில் தயாரிக்கப்பட்டு, சரோவ் ஷண்முகம் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது.

இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த (தாத்தா, அப்பா, மகன் மூவரின்) கதாபாத்திரங்களின் புகழ்பெற்ற உண்மையான குடும்பக் கதையாகும்.

அருண் விஜய் மற்றும் அவரது மகன் அர்னவ்(அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் பிரத்யேகமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் மட்டும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் கண்டு மகிழலாம்.

தன் படத்திலிருந்து விலகிய சூர்யாவை எதிர்க்க அருண் விஜய்யை மோதவிடும் ஹரி.?

இப்படம் ஒவ்வொரு குழந்தையும், செல்லப்பிராணியை விரும்புபவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்று.

” ஓ மை டாக்” அர்ஜூன் (அர்னவ்) மற்றும் கண் பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா பற்றிய உள்ளத்தை தொடும் கதையாகும். ஒவ்வொரு குழந்தையும், குடும்பமும் பார்த்து மகிழவேண்டிய படம்.

எல்லா குடும்பங்களிலும் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள், ஆசாபாசங்கள், முதல் முக்கியத்துவம், கவனிப்பு, தைரியம், வெற்றி, ஏமாற்றங்கள், நட்பு, தியாகம், நிபந்தனையற்ற காதல் மற்றும் விஸ்வாசம் போன்ற எல்லா உணர்வுகளின் கலவையாக உள்ளது இப்படம்.

சூர்யா படத்தில் விஜயகுமாரின் பேரனும் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் அறிமுகம்

இந்த படத்தை தயாரித்தவர்கள் ஜோதிகா-சூர்யா, மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB டாக்கீஸின் எஸ் ஆர். ரமேஷ் பாபு. இசையமைப்பு நிவாஸ் பிரசன்னா மற்றும் ஒளிப்பதிவு கோபிநாத் ஆகியோர் செய்துள்ளனர்.

இப்படம் பிரைம் வீடியோ மற்றும் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய இருவருக்குமிடையே 4-பிலிம் வியாபாரத்தின் ஒரு பகுதியாகும்.

பிரைம் வீடியோவின் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் 21 ஏப்ரல் 2022 அன்று, தமிழ் மற்றும் தெலுங்கில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு, வரும் கோடை விடுமுறையை வேடிக்கையாகவும், குடும்பங்களை மகிழ்விக்கும் நோக்கத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

Prime Video announces the launch date of its upcoming family entertainer Oh My Dog

More Articles
Follows