தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் உலக அளவில் பிரம்மாண்டமாக உயர்த்திய இயக்குனர்களில் முக்கியமானவர் ராஜமௌலி என்று சொன்னால் அது மிகையல்ல.
மாவீரன், நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் ஆகிய படங்கள் இவரது இயக்கத்தில் மைல்கல் படங்களாக உள்ளன.
இவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் உலகளவில் ரூ.1000+ கோடிக்கும் அதிகமாகவே வசூலித்தது.
ராஜமவுலி இயக்கிய இந்த படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஸ்ரேயா, ஆலியா பட், அஜய் தேவகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் இந்த படம் இடம் பெற்றது.
தற்போது இந்த படத்தை வெளிநாடுகளில் அயல்நாட்டு மொழிகளில் வெளியிட பட பிரமோஷனில் ராஜமவுலி ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் பங்கு பெற்ற ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில்…
“ஆர்ஆர்ஆர் படம் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதையை ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி வருவதாகவும் தெரிவித்துள்ளார் இந்த பிரம்மாண்ட இயக்குனர்.
Here is update for RRR movie Part 2