தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛எனிமி’.
இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ல் வெளியாகிறது.
இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதாவது :
என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.
எனிமி தீபாவளிக்கு வருகிறது. எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் வினோத்குமார் கிடைத்துள்ளார்.
அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஒரு பெரிய விலைக்கு ஓடிடிக்கு விற்றிருக்கலாம்.
ஆனால் ரசிகர்களுக்காக இந்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வருகிறார்.
மக்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும்.
அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். அந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
டைரக்டர் ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக் கதையில் ஜாமி (ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் சொன்னேன்.
ஆர்யா கேரக்டரை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என சொன்னேன். பின்னர் அதற்கான அற்புதமான திரைக்கதையுடன் வந்தார்.
ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார்.
இப்போது திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். ரொம்பல நல்லா நடிக்கிறான்.
இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சார்பட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். என்னால அடி தாங்க முடியல.
மிருணாளினி என்னுடன் நடிப்பது தயக்கமாக இருந்ததாக சொன்னார். அடுத்தமுறை, தயக்கமில்லாமல் நீங்கள் நடிக்கலாம்.
கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும் போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம்.
600 தியேட்டருக்கு மேல் தெலுங்கானா ஆந்திராவில் இப்படம் வெளியாகவுள்ளது.
நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம் இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள் அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.”
என விஷால் பேசினார்.
Vishal speech abour Arya in Enemy Press Meet