ஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமியுடன் இணைந்த ‘மலையாளி’ குஞ்சாக்கோ போபன்

ஆர்யா தயாரிப்பில் அரவிந்த்சாமியுடன் இணைந்த ‘மலையாளி’ குஞ்சாக்கோ போபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த்சாமி மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் ‘ரெண்டகம்’ திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

இத்திரைப்படத்தை ஆர்யாவின் ஷோ பீப்புள் நிறுவனமும் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தாயாரித்து வருகிறது. டி.பி.பெலின் இயக்கியிருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் ‘ரெண்டகம்’ படத்தில் அரவிந்தசாமி ஹீரோவாக நடித்து வருகிறார்.

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் ஷாலினி உடன் இணைந்து நடித்த அனியத்திப்ராவு என்ற திரைப்படம் தான் (விஜய்யின்) காதலுக்கு மரியாதை என்று தமிழில் தயாரிக்கப்பட்டது.

‘ரெண்டகம்’ திரைப்படத்தில் அரவிந்த்சாமி , குஞ்சாக்கோ போபன் இவர்களுடன் ஜாக்கி ஷ்ராப், ஈஷா ரெப்பா, ஆடுகளம் நரேன், தீப்தி சதி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

எழுத்து சஞ்சீவ் மற்றும் சசிகுமாரன் சிவகுரு, இசை A H காஷிஃப், ஒளிப்பதிவு கௌதம் சங்கர், படத்தொகுப்பு அப்பு N பட்டாத்தரி, கலை இயக்கம் சுபாஷ் கருன்

தொழில்நுட்பக்குழு :
இயக்கம் : T .P.பெலின்
தயாரிப்பு : ஆர்யா , ஷாஜி நடேசன்
எழுத்து : S சஞ்சீவ்
இணை எழுத்து /இணை இயக்கம் – சசி குமரன்
இசை – A H காஷிஃப்
ஒளிப்பதிவு – கெளதம் ஷங்கர்
படத்தொகுப்பு – அப்பு N பட்டாத்திரி
கலை இயக்கம் – சுபாஷ் கருண்
உடைகள் – ஸ்டெப்பி சேவியர்
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
படங்கள் – ரோஷ்குமார்
சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா
நடனம் – சஜ்னா நஜாம்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Arya to produce Tamil / Malayalam bilingual film with Arvindswamy and Kunchako bopan

‘ரைட்டர்’ டைரக்டர் பிராங்ளின் ஜேக்கப்பின் அடுத்த படத்தை தயாரிக்கும் லலித் குமார்

‘ரைட்டர்’ டைரக்டர் பிராங்ளின் ஜேக்கப்பின் அடுத்த படத்தை தயாரிக்கும் லலித் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘ரைட்டர்’ படத்தை இயக்கியவர் பிராங்ளின் ஜேக்கப்.

இப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்திருந்தது.

தற்போது ‘ரைட்டர்’ வெற்றியைத் தொடர்ந்து லலித் குமார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரின் கீழ் தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் பிராங்ளின் ஜேக்கப்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ.

அதில்… நீலம் புரொடக்சனின் ‘ரைட்டர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து திறமையான இயக்குனருடன் அடுத்த படத்தில் கையெழுத்திட்டதில் மிகுந்த சந்தோஷம்’ என தெரிவித்துள்ளது.

Writer director next with Seven screen studio

‘அறியா திசைகள்’.. அப்பாவை போல படம் இயக்கி நடிக்கும் சமுத்திரக்கனி மகன் !

‘அறியா திசைகள்’.. அப்பாவை போல படம் இயக்கி நடிக்கும் சமுத்திரக்கனி மகன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன்.

“அறியா திசைகள்” எனும் 40 நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார்.

வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன்.

இளைஞனாக நடிகர் – இயக்குனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் நடித்து இந்த குறும்படத்தை எழுதி இயக்கி உள்ளார்.

மிகவும் புத்திசாலித்தனமான கதை களம். நறுக்கிய வசனம். இசை கூடுதல் பலம்.

“அறியா திசைகள்” பலரின் பாராட்டுகளைப் பெற்றதுடன் சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

Samuthirakani son Hari Vigneshwaran’s Short Film Ariya Thisaigal released

பூஜை போட்டு படத்தை தொடங்கிய ‘வாத்தி’ தனுஷ் – ஜிவி பிரகாஷ்

பூஜை போட்டு படத்தை தொடங்கிய ‘வாத்தி’ தனுஷ் – ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது அடுத்த படத்தின் அறிவிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டார் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைத்துள்ளனர்.

தெலுங்கில் சார் என டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படம், தமிழ் , தெலுங்கு, ஆங்கிலம் என மொழிகளில் உருவாக இருக்கிறது. வெங்கி அட்லூரி இப்படத்தினை இயக்கவிருக்கிறார்.

சம்யூக்தா இப்படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஹைதராபாத்தில் துவங்கப்பட்டது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

தனுஷின் முதல் நேரடி தெலுங்கு படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush in next film is titled Vaathi

தனுஷை அடுத்து மூன்று பிரபலங்களை இயக்கும் கார்த்திக் நரேன்

தனுஷை அடுத்து மூன்று பிரபலங்களை இயக்கும் கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துருவங்கள் பதினாறு, மாஃபியா, மாறன் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் மாறன் படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை அடுத்து அதர்வா நடிக்கவுள்ள ‘நிறங்கள் மூன்று’ என்ற படத்தை இயக்கவுள்ளார்.

அதர்வாவுடன் சரத்குமார், ரகுமான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களை மையப்படுத்தியே நிறங்கள் மூன்று என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

வில்லு, ஏகன், பேராண்மை, நந்தலாலா உள்ளிட்ட படங்களை தயாரித்த நிறுவனம் இது.

வரும் 5-ஆம் தேதி முதல் நிறங்கள் 3 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இதுவொரு ஹைப்பர்லிங்க் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

Karthick Naren’s next film is titled Nirangal 3

மீண்டும் போலீசாக நட்ராஜ் & ரவிமரியா..; கொழுக்கு மொழுக்கு நடிகைகளுடன் கூட்டணி

மீண்டும் போலீசாக நட்ராஜ் & ரவிமரியா..; கொழுக்கு மொழுக்கு நடிகைகளுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.ஜே.எஸ். பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் சரவணன் தயாரிக்கும் படத்தில் நட்டி நடராஜ் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

பெயரிடப்படாத புதிய படத்தை தயாரிக்கிறார் சாய்சரவணன். இவர் பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர் இந்தப்படத்தை தயாரிப்பதின் மூலம் புதிய தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கி தமிழ்த்திரையுலகிற்கு புதிய இயக்குனராக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் ராம்கி நடிக்கிறார்.

முன்னணி கதாநாயகிகளில் ஒருவரை நாயகியாக நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது. மற்றும் இந்தப் படத்தில் மனோபாலா ரவிமரியா மொட்டை ராஜேந்திரன் ஜார்ஜ் சஞ்சனா சிங், அஸ்மிதா ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்,

ஏற்கெனவே கர்ணன் படத்தில் நட்டியும் ஜெயில் படத்தில் ரவி மரியாவும் போலீஸ் அதிகாரிகளாக நடித்து மிரட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் அந்தமானில் படமாக கப்படவிருக்கின்றது மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அந்தமான் ஊட்டியை அடுத்துள்ள கூடலூர் தேவாலா பந்தலூர் போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது.

ஓளிப்பதிவு இயக்குனராக- தேவராஜ் பணியாற்றுகிறார். இசையை சத்திய தேவ் அமைக்கிறார். வசனத்தை கீர்த்தி வாசன் எழுதியிருக்கிறார். பாடல்கள் : மக கவி, வெள்ளத்துரை.

தயாரிப்பு மேற்பார்வை: பி.அவினாஷ்

தயாரிப்பு: சாய் சரவணன்

கதை திரைக்கதை டைரக் ஷன் கே.பி. தனசேகர்

Natty plays cop in his next film

More Articles
Follows